அடிப்படை ஜோதிடம் – 1
ஜோதிடம்
ஜோதிடம் என்பது வான்வெளியில் உள்ள கோள்கள் பூமியில் உள்ள ஜீவராசிகள் மீது ஏற்படும் தாக்கங்களை கூறுவதாகும். இது ஒரு தெய்வ கலையாகும், வேதத்தின் கண் என்றும் கூறப்படுகிறது. வாழ்வில் ஏற்படும் நன்மை, தீமை போன்றவற்றை ஜோதிடம் கொண்டு நம் வாழ்வை சிறப்பாக அமைத்துக் கொள்ளலாம் இதற்கு அடிப்படை என்னவென்றால் வானில் உள்ள கிரகங்கள் அவற்றின் மின்காந்த அலைகள் மனித உடலிலுள்ள வெவ்வேறு உறுப்புகளை ஆளுமை செய்கின்றன. அவற்றை பொருத்து பலன்களைத் தருகின்றன. இதனை எடுத்துக் கூறுவதே ஜோதிட கலை .
மேலும் ஜோதிடத்தில் மூன்று பிரிவுகள் உள்ளன அவை
கணித ஸ்கந்தம்
ஜாதகம் ஸ்கந்தம்
சம்ஹிதா ஸ்கந்தம்
கணித ஸ்கந்தம் – சித்தாந்தம், தந்திரம், கரணம் போன்றவற்றை உள்ளடக்கியது.
ஜாதகம் ஸ்கந்தம் – ஹோரா, தாஜிகம் பற்றி கூறுவது ஆகும்
சம்ஹிதா ஸ்கந்தம் – முகூர்த்தம், வாஸ்து, வருட பணி, ஆருடம் போன்றவற்றை பற்றி கூறக் கூடியது
கிரகம்
கிரகம் அல்லது கோள் என்றால் பிடித்தல் என்ற பொருளை உடையது அதாவது வான் மண்டலத்தில் சூரியனை மையமாகக் கொண்டு சுற்றி வருகின்றன. இவற்றில் புதன் மற்றும் சுக்கிரன் உள்வட்ட கிரகங்கள் என்றும், மற்ற கிரகங்கள் வெளிவட்ட கிரகங்கள் என்றும் சொல்லப்படுகின்றன. ராகு கேதுக்கள் நிழல் கிரகங்கள் எனப்படுகின்றன. இவற்றுக்காக சொந்தமான வீடுகள் இல்லை எந்த வீடுகளில் உள்ளனரோ அந்த வீடுகளை அவற்றின் சொந்த வீடுகளாக அவர்கள் எடுத்துக் கொள்வார்கள்.
நவகிரகங்கள்
சூரியன் நவகிரகங்களில் முதன்மையானவர் சூரியன். சூரியனை மையமாக கொண்டு அனைத்துக் கோள்களும் இயங்குகின்றன . சூரியன் ஒரு ஒளி கிரகம். உலக உயிர்களுக்கு ஆதாரமாக இருப்பதும் சூரியபகவானே ஆகும். இவருடைய வாகனமாக சொல்லப்படுவது ஏழு குதிரைகள் பூட்டிய தேர் ஆகும். சூரியனே அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாக உள்ளது. சூரியனே பிரம்மன் என்று மார்க்கண்டேய புராணம் கூறுகிறது. இவர் ஒரு ராஜ கிரகம். அரசியல் மற்றும் அரசு சார்ந்த துறைக்கு சூரியனின் சம்பந்தம் தேவை.
சந்திரன் சூரியனிடமிருந்து ஒளியைப் பெற்று பூமிக்கு அனுப்புகிறது. எனவே ஜோதிடத்தில் சந்திரன் மிக முக்கிய பங்காற்றுகிறது. ஜோதிடத்தில் சந்திரன் மனிதர்களின் மனதை ஆளுமை செய்கிறது. இவர் சோமன் என்று அழைக்கப்படுகிறார். வரலாற்றில் தட்சன் என்பவரின் 27 பெண்களை மணந்து, அனைவரையும் சமமாக நடத்துவேன் என்று வாக்குறுதி அளித்து, பிறகு ரோகிணியிடம் அதிக பிரியம் காண்பித்ததால், தட்சன் சாபம் பெற்று சந்திரன் அவருடைய அழகும் பொலிவும் இழந்து மீண்டும் அதனை சிவ சிவ பெருமானின் அருளால் சாப விமோசனம் அடைந்தார். அந்த சாபத்தின் விளைவாக வளர்பிறை, தேய்பிறை கலைகளை பெற்றார்.
மங்களம் எனப்படும் செவ்வாய் சிவபெருமான் வழி தோன்றியதாக வரலாறு உண்டு. பிறகு பூமித்தாய் இவரை வளர்த்ததால் இவற்றிற்கு நில காரகன் என்ற பெயரும் உண்டு. மனிதர்களுக்கு உடல் பலம் , உத்வேகம் மற்றும் அகங்காரத்திற்கு செவ்வாய் பகவான் காரகன் ஆவார்.
புதன் பகவான் சூரியனுக்கு மிக நெருங்கிய நிலையில் உள்ள கோளாகும். இது அளவில் சிறிய கோளாகும் மேலும் சந்திரனுக்கும், தாராவுக்கும் பிறந்த மகன் என வரலாறு கூறுகிறது. புதன் ஒரு நில தத்துவ கோள், மேலும் கல்வி, கற்பித்தல், புத்தி போன்றவற்றிற்கு புதன் காரகனாவார்.
தேவர்களின் குருவாக உள்ளவர் பிரகஸ்பதி, வியாழன் அல்லது குரு பகவான் என அழைக்கப்படுகிறார். இவர் ஒரு முழு சுபர் ஆவார். மேலும் மனிதனுக்கு அறிவு புத்திரம் , பெருந்தன்மை, ஆன்மீக நாட்டம் போன்றவற்றுக்கு காரணகர்த்தாவாக உள்ளார்.
சுக்கிரன் எனப்படும் சுக்கிராச்சாரியார் பிருகு என்னும் முனிவரின் புத்திரர் என புராணங்கள் கூறுகின்றன. இவர் அசுரர்களின் குருவாக உள்ளார். அழகு, கலை மற்றும் ஆடம்பரத்திற்கு காரகனாவார். இது ஒரு பெண், நீர் தத்துவம் கோள், சூரியனுக்கு மிக அருகாமையில் உள்ள கோள்.
சனி பகவான் மந்த காரகன் என்றும், சூரியன் மைந்தன் ஆவார். கோள்களில் சூரியனுக்கு மிக தொலைவில் உள்ள கிரகமாகும். மேலும் ஆயுள், மந்தத்தன்மை போன்றவற்றுக்கு காரக கோளாகும். இது ஒரு காற்று தத்துவ கோள் ஆகும்.
வரலாற்றில் பாற்கடலில் இருந்து அமிர்தம் அடுத்தபோது அதனை ராகு எனும் அசுரன் மட்டும் வாங்கி உண்ணும்போது விஷ்ணுவால் தலை வெட்டப்பட்டு ராகு(தலை) – கேது(உடல்) தனித்தனி உடலாக பிரிந்து தவத்தால் கிரக நிலையை அடைந்தனர்.
ராசி மண்டலம்
சில அடிப்படை அளவுகள்
ராசி மண்டலம் = 360°
1 ராசி = 30 °
4 பாதம் = 1 நட்சத்திரம்
1 நட்சத்திரம் = 13° 20’ ; 1 பாதம் = 3° 20’
மொத்த நட்சத்திர பாதம்(27×4) = 108
ராசி மண்டலத்தில் ஒவ்வொரு ராசிக்கும் ஒரு அதிபதி உள்ளது அவற்றைப் பின்வரும் அட்டவணையில் காணலாம்.
நட்சத்திரங்கள்
நட்சத்திரங்கள் வானத்தில் தோன்றும் உருவ அமைப்பை பொருத்து ஒவ்வொரு நட்சத்திரத்தின் வடிவத்தை அமைத்துள்ளார்கள். ஜோதிடத்தில் மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன. அவற்றில் அபிஜித் நட்சத்திரம் தவிர ஏனைய நட்சத்திரங்கள், ஜோதிடத்தில் பயன்படுத்தப்படுகின்றன. மொத்த ராசி மண்டலத்தில் ஒவ்வொரு நட்சத்திரமும் 13 பாகை 20 கிளைகளை கொண்டதாகும் ஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு பாதங்களை உள்ளடக்கியது. ஒவ்வொரு ராசியும் 9 பாதங்களை உள்ளடக்கியது. எனவே இந்த 27 நட்சத்திரங்களை கொண்டுதான் பலன்கள் சொல்லப்படுகின்றன. ஒவ்வொரு நட்சத்திரமும் நட்சத்திரக் கூட்டங்களின் தொகுப்பே ஆகும்.
27 நட்சத்திரங்கள்
அஸ்வினி
பரணி
கிருத்திகை
ரோகிணி
மிருகசீரிஷம்
திருவாதிரை
புனர்பூசம்
பூசம்
ஆயில்யம்
மகம்
பூரம்
உத்திரம்
அஸ்தம்
சித்திரை
சுவாதி
விசாகம்
அனுஷம்
கேட்டை
பூராடம்
உத்திராடம்
மூலம்
திருவோணம்
அவிட்டம்
சதயம்
பூரட்டாதி
உத்திரட்டாதி
ரேவதி
ராசிக்கட்டம்
ராசிக்கட்டம் என்பது ஒருவர் பிறந்த தேதி, நேரம் மற்றும் ஊரை அடிப்படையாகக்கொண்டு கணிக்கப்படுவது ஆகும். இந்த கட்டத்தை கொண்டு ஒருவருக்கு ஜாதக பலன்கள் கூறப்படுகின்றன. பிறந்தபோது சூரியன் எந்த ராசியை பார்க்கிறாரோ அதுவே அவர்களுடைய ஜென்ம லக்கினம் ஆகும். சந்திரன் எந்த நட்சத்திரத்தில் உள்ளாரோ அதுவே அவருடைய ஜென்ம நட்சத்திரம் ஆகும். இதனை இப்போதுள்ள மென்பொருள் கொண்டு எளிமையாக கணித்து விடலாம். பின்வரும் தகவல்களை ராசிக்கட்டம் கொண்டு அறியலாம்
- லக்கினம்
- ஜென்ம நட்சத்திரம்
- கோள்களின் நிலை
- தசா இருப்பு மற்றும் நடப்பு புத்தி
- பிறந்த திதி
- கரணம்
- யோகம்
மனிதர்களுக்கு நிகழும் பலாபலன்கள் ராசி மண்டலத்தில் கிரகங்கள் நின்ற இடத்தை பொறுத்தே நடக்கின்றன. ஒருவர் பிறந்தது முதல் இறப்பு வரை இடைப்பட்ட காலங்களில் கிரகங்கள் எந்த நிலையில் உள்ளனவோ அவற்றிற்குத் தகுந்தவாறு பலன்களை ஜாதகருக்கு தருகின்றன. முக்கியமாக ஒருவருடைய ஜனனம் அவருடைய, வாலிபப் பருவம், கல்வி திருமணம், புத்திரம், தொழில், குடும்பம் போன்றவை இந்த பன்னிரண்டு பாவங்களைப் பொறுத்து அமைகின்றன
மேஷம் – தோற்றம், மனமகிழ்ச்சி, ஆன்ம பலம்
ரிஷபம் – தனம், வாக்கு, குடும்பம்
மிதுனம் – இளைய சகோதரம், காரிய வெற்றி, வீரியம்
கடகம் – தாய், வீடு, வாகனம், சுகம்
சிம்மம் – பூர்வ புண்ணியம், புத்திரம், மனோதிடம்
கன்னி – கடன், நோய், எதிரி
துலாம் – களத்திரம், வெகுமதி, சிற்றின்பம், கூட்டாளி
விருச்சிகம் – மாங்கல்ய ஸ்தானம், ஆயுள், வழக்கு, விபத்து
தனுசு – தர்மசிந்தனை, ஆன்மீகம், விசுவாசம்
மகரம் – தொழில், தர்மம், புகழ்
கும்பம் – லாபம், மூத்த சகோதரம்
மீனம் – விரயம், அயன சயன போகம்
நவாம்ச கட்டம்
ராசி கட்டம் என்பது ஒருவர் பிறந்த தேதி, நேரம் மற்றும் ஊரை அடிப்படையாகக்கொண்டு 30 பாகை கொண்ட பன்னிரண்டு கட்டங்களாக பிரிப்பது ஆகும். இந்த கட்டத்தை கொண்டு ஒருவருக்கு ஜாதக பலன்கள் கூறப்படுகின்றன. பிறந்தபோது சூரியன் எந்த ராசியை பார்க்கிறாரோ அதுவே அவர்களுடைய ஜென்ம லக்கினம் ஆகும். சந்திரன் எந்த நட்சத்திரத்தில் உள்ளாரோ அதுவே அவருடைய ஜென்ம நட்சத்திரம் ஆகும். இதனை இப்போதுள்ள மென்பொருள் கொண்டு எளிமையாக கணித்து விடலாம். பின்வரும் தகவல்களை ரசிக்கட்டம் கொண்டு அறியலாம்.
ராசிகளின் வடிவம்
ஒவ்வொரு ராசியும் ஒவ்வொரு வடிவத்தை கொண்டுள்ளன, இதில் மேஷத்திற்கு ஆண் ஆடும் , ரிஷபத்திற்கு காளை மாடும், மிதுனத்திற்கு ஆண் பெண் சேர்ந்த வடிவமும், கடகத்திற்கு நண்டும், சிம்மத்திற்கு சிங்கமும், கன்னிக்கு கதிர் ஏந்திய பெண்ணும் , துலாத்திற்கு தராசு ஏந்திய மனிதனும், விருச்சகத்திற்கு தேளும், தனுசுக்கு குதிரை உடலுடன் வில் ஏந்திய மனிதனும், மகரத்திற்கு ஆண் ஆடு அல்லது முதலையையும், கும்பம் பானை ஏந்திய மனிதனையும், மீனம் ஒன்றன் பின் ஒன்றாக உள்ள இரு மீன்களையும் வடிவமாக கொண்டுள்ளன.
ராசிகளின் நிறங்கள்
மேஷத்திற்கு சிவப்பு நிறமும், ரிஷபத்திற்கு வெண்மை நிறமும், மிதுனத்திற்கு கருப்பு நிறமும், கடகத்திற்கு வெண்மை நிறமும், சிம்மத்திற்கு சிவப்பு நிறமும், கன்னிக்கு கருப்பு நிறமும், துலாத்திற்கு வெண்மை நிறமும், விருச்சகத்திற்கு மாநிறமும் (பச்சை), தனுசுக்கு சிவப்பு நிறமும், மகரதிற்கு கருப்பு நிறமும், கும்பம் மற்றும் , மீனத்திற்கு மாநிறமும் சொல்லப்பட்டுள்ளன.
உடல் நிறத்தை ராசிகளின் நிறத்தை கொண்டு அறியலாம்.
ஆண்/பெண் ராசிகள்
மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் போன்ற ராசிகள் ஆண் ராசிகள். ரிஷபம், கடகம், கன்னி, விருச்சகம், மகரம் மற்றும் மீனம் போன்ற ராசிகள் பெண் ராசிகளாகும்.
இயற்கையில் ஒருவர் எந்த தன்மையோடு செயல்படுவார் என தெரிந்துகொள்ள இவை உதவுகின்றன.
ராசிகளின் பஞ்ச பூத தத்துவம்
பஞ்சபூத தத்துவம் ஒருவரின் குண இயல்பை பற்றி கூறும். இவற்றில் மேஷம், சிம்மம் மற்றும் தனுசு நெருப்பு தத்துவத்தையும், ரிஷபம், கன்னி மற்றும் மகரம் மண் தத்துவத்தையும், மிதுனம், துலாம் மற்றும் கும்பம் காற்று தத்துவத்தையும், கடகம், விருச்சகம் மற்றும் மீனம் நீர் தத்துவத்தையும் கொண்டுள்ளது.
நெருப்பு தத்துவ ராசிக்காரர்களுக்கு ஆளுமைத்திறன், சுறுசுறுப்பு, தைரியம் மிக்கவர்கள். அனால் பிடிவாதம் மற்றும் ஆணவம் உள்ளவர்கள்.
ராசிகளின் திசைகள்
மேஷம் சிம்மம் தனுசு போன்ற ராசிகள் கிழக்கு திசையையும் ரிஷபம் கன்னி மகரம் போன்ற தெற்கு திசையையும் மிதுனம் துலாம் கும்பம் போன்ற ராசிகள் மேற்கு திசையையும் கடகம் விருச்சிகம் மீனம் போன்ற ராசிகள் வடக்கு திசையையும் குறிக்கும்
ராசிகளின் பலன் தன்மை
மேஷம், சிம்மம் மற்றும் தனுசு போன்ற ராசிகள் மலட்டு ராசிகளாகும். ரிஷபம், கன்னி மற்றும் மகரம் போன்ற ராசிகள் பாதி பலனை தரக்கூடிய ராசிகளாகும். மிதுனம் துலாம் மற்றும் கும்பம் போன்ற ராசிகள் வறண்ட ராசிகளாகும். கடகம், விருச்சிகம் மற்றும் மீனம் போன்ற ராசிகள் முழு பலனை தரக்கூடிய ராசிகளாகும்.
மேலும் படிக்க : அடிப்படை ஜோதிடம் -2