அடிப்படை ஜோதிடம் -3

Table of Contents

அடிப்படை ஜோதிடம் -3

இந்த பதிவில் நாம் யோகம், கரணம் மற்றும் பஞ்சாங்கம் சார்ந்த மற்ற அடிப்படை விஷயங்களை காணலாம்

யோகம்

ஜோதிடத்தில் நான்காவது அங்கமான யோகம் என்பது சூரியன் செல்லும் தூரத்தையும் சந்திரன் செல்லும் தூரத்தையும் கூட்டினால் கிடைப்பது ஆகும். ஒரு யோகத்தின் அளவு 13 பாகை 20 கலை ஆகும். மொத்தம் 27 யோகங்கள் உள்ளன. அவற்றைப் பற்றி கீழே காணலாம்.

  • விஷ்கம்பம்
  • ப்ரீத்தி
  • ஆயுஷ்மான்
  • சௌபாக்யம்
  • சோபனம்
  • அதிகண்டம்
  • சுகர்மம்
  • திருதி
  • சூலம்
  • கண்டம்
  • விருத்தி
  • துருவம்
  • வ்யாகாதம்
  • ஹர்ஷணம்
  • வஜ்ரம்
  • சித்தி
  • வியதிபாதம்
  • வரியான்
  • பரிகம்
  • சிவம்
  • சித்தம்
  • சாத்தியம்
  • சுபம்
  • சுக்கிலம்
  • பிரம்மம்
  • ஐந்திரம்
  • வைதிருதி

யோ கங்களில் செய்யத்தக்க வகைகள்

விஷ்கம்பம்

  •  விதை விதைத்தல்
  • பற்களை சரி செய்தல்
  • மர வேலைகளை செய்தல்
  • சண்டையிடுதல்

பிரீத்தி யோகம்

  • அணிகலன் அணிந்து கொள்ளுதல்
  • செல்வம் சேர்ப்பது
  • அரசு சார்ந்த வேலைகளை செய்வது
  • வாசனை திரவியங்கள் பயன்படுத்துதல்

ஆயுஷ்மான்

  • விதை விதைத்தல்
  • புத்தாடை உடுத்துதல்
  • திருமணம் செய்தல்
  • சகல சுப காரியங்களும் செய்யலாம்

சௌபாக்கிய யோகம்

  • எல்லா நற்செயல்களும் ஏற்றது
  • தேவதைகளை பூஜித்தல்
  • திருமணம் செய்தல்
  • புத்தாடை அணிதல்
  • ஆபரணம் அணிதல்

சோபன யோகம்

  • வீடு நிலம் வாங்குதல்
  • திருமணம் செய்தல்
  • தானம் செய்தல்
  • ஆபரணங்கள் அணிதல்
  • எல்லா நற்செயல்களும் ஏற்றது

அதிகண்ட யோகம்

  • கொலை செய்தல்
  • பில்லி சூனியம் செய்தல்
  • அழிவு சம்பந்தமான காரியங்களைச் செய்தல்
  • தீயிடுதல்
    சண்டையிடுதல்

சுகர்மம் யோகம்

  • எல்லா நற்செயல்களும் ஏற்றது
  • வீடு கட்டுதல்
  • திருமணம் செய்தல்
  • நிலம் வாங்குதல்
  • ஓவியம் வரைதல்

திருதி யோகம்

  • எல்லா காரியங்களுக்கும் ஏற்றது
  • ஆலயங்கள் அமைத்தல்
  • வீடு கட்டுதல்
  • காப்பு கட்டுதல்
  • தோரணவாயில் நடுதல்

சூல யோகம்

  • எந்த நற்செயலுக்கும் ஏற்றதல்ல

கண்ட யோகம்

  • இதுவும் எந்த செயலுக்கும் ஏற்றதல்ல.

விருத்தி யோகம்

  • எல்லா செயல்களும் செய்யலாம்
  • விதை விதைத்தல்
  • செல்வம் சேர்த்தல்
  • தானியம் சேர்த்தல்
  • திருமணம் செய்தல்
  • குளம் வெட்டுதல்

துருவம் யோகம்

  • எல்லா நற்காரியங்களும் செய்யலாம்
  • புத்தாடை அணிதல்
  • ஆபரணம் அணிதல்
  • குளம் வெட்டுதல்
  • வீடு கட்டுதல்

வியாகாதம்

  • எந்த செயலுக்கும் ஏற்றதல்ல

ஹர்ஷன யோகம்

  • எல்லா செயல்களுக்கும் ஏற்றது
  • திருமணம் செய்தல்
  • போர்ப்பயிற்சி கற்றல்

வஜ்ர யோகம்

  • எந்த நற்செயலுக்கும் ஏற்றதல்ல

சித்தயோகம்

  • எல்லா நற்செயல்களும் செய்யலாம்
  • கல்வி பயிலுதல்
  • திருமணம் செய்தல்
  • காப்புக்கட்டுதல்
  • தீட்சை பெறுதல்.

வியாதிபாதம்

  • அடிமை வேலை செய்தல்
  • பொன் நகை செய்தல்
  • தானம் செய்தல்
  • தீர்த்த யாத்திரை செல்லுதல்
  • விதை உண்டு பண்ணுதல்
  • விஷ பிரயோகம் செய்தல்

வரியான் யோகம்

  • எல்லா நற்செயல்களும் செய்யலாம்
  • ஆடை அணிதல்
  • ரத்தினங்கள் செய்தல்

பரிகம் யோகம்

  • விவாதம் செய்தல்
  • போர்ப்பயிற்சி செய்தல்
  • தீய செயல்களில் ஈடுபடுதல்
  • பகையை உண்டு பண்ணுதல்

சிவயோகம்

  • எல்லா நற்செயல்களும் செய்யலாம்
  • ஆடை அணிகலன்கள் அணிதல்
  • திருமணம் செய்தல்
  • தீர்த்த யாத்திரை செல்லுதல்

சித்தயோகம்

  • எல்லா நற்செயல்களுக்கும் ஏற்றது
  • வீடு கட்டுதல்
  • உபநயனம் செய்தல்
  • திருமணம் செய்தல்
  • தேவதை பிரதிஷ்டை செய்தல்
  • யாத்திரை செல்லுதல்
  • யாகம் செய்தல்

சுபயோகம்

  • எல்லோருக்கும் ஏற்றது
  • மனதிற்கு உற்சாகம் அளிக்கும் செயல்களை செய்தல்
  • விதை விதைத்தல்
  • அணிகலன்களை அணிதல்

சுக்கிலம்

  • வீடுகளுக்கு பூச்சு பூசுதல்
  • அலங்காரம் செய்தல்
  •  உற்சவங்கள் நடத்துதல்
  • சாந்தி, கருமங்கள் செய்தல்
  • உடல் வலிமை சார்ந்த செயல்களில் ஈடுபடுதல்
  • பயிரிடுதல்
  • எல்லா சுப காரியங்களும் செய்யலாம்

ஐந்திரம் யோகம்

  • எல்லோருக்கும் ஏற்றது
  • கணிதம் கற்பித்தல்
  • எதிரிகளை அழித்தல்
  • கொடூரமான செயல்களை செய்தல்

கரணம்

பஞ்சாங்கத்தில் ஐந்தாவது அங்கமாக வரக்கூடியது கரணம் என்பது திதியில் பாதியாகும். அதாவது ஒரு திதிக்கு 2 காரணங்களாகும். ஒரு காரணத்தின் அளவு 6 பாகை ஆகும் மொத்தம் 16 வகையான காரணங்கள் உள்ளன.

  • பவம்
  • பாலவம்
  • கௌலவம்
  • தைதுலை
  • கரசை
  • வணிசை
  • பத்திரை
  • சகுனி
  • சதுஷ்பாதம்
  • நாகவம்
  • கிம்ஸ்துக்னம்

சர கரணங்கள்

சர கரணங்கள் என்பது தொடர்ந்து சுழற்சி முறையில் மாறி மாறி வரக்கூடிவை. அதாவது பவம், பாலவம், கௌலவம், தைதுலை, கரசை, வணிசை வரை தொடர்ந்து வந்து மீண்டும் பவம் முதல் துவங்கி வணிசை வரை தொடர்ந்து வரும்

ஸ்திர கரணங்கள்

அமாவாசையை ஒட்டிய நாட்களில் மட்டுமே நடப்பிலிருக்கும். அதாவது கிருஷ்ணபட்ச சதுர்தசி திதியின் இரண்டாவதாக சகுனி கரணமும், அமாவாசை திதியன்று சதுஷ்பாதம், நாகவம் கரணங்களும், பிரதமை திதியின் முதல் கரணம் கிம்ஸ்துக்னம் கரணமாகவும் நடப்பிலிருக்கும்.

கரணங்களில் செய்யத்தக்கவைகள்

பவ கரணம்

  • எல்லா நற்காரியங்களை செய்யலாம்
  • புது ஆடைகள் அணிதல்
  • தானியம் சேர்த்தல்
  • சுரங்கம்முதலிய சம்பந்தப்பட்ட சேவைகள்
  • பிரயாணம் செய்தல்

பாலவ கரணம்

  • மங்கள காரியங்கள்
  • திருவிழாக்கள்
  • பிரயாணம்
  • வீடு சம்பந்தமான செயல்கள்
  • போர் புரிதல்

கௌளவம் காரணம்

  • யானை மற்றும் குதிரை ஏற்றம் சம்பந்தமான செயல்களில் ஈடுபடுதல்
  • மங்களகரமான காரியங்கள் செய்தல்
  • மந்திர தீட்சை பெறுதல்
  • யுத்தம்
  • பிரயாணம் செய்தல்

தைதுலம் கரணம்

  • சமாதானம் செய்தல்
  • போருக்கான முயற்சி
  • போருக்காக புறப்படுதல்
  • விலைக்கு வாங்குதல் விற்றல்
  • கிணறு வெட்டுதல்

கரசை கரணம்

  • பயிரிடுதல்
  • திருமணம் செய்தல்
  • பூமி வாங்குதல்
  • வாஸ்து செய்தல்
  • புதுமனை புகுவிழா செய்தல்

வனிசை கரணம்

  • நற்செயல்களுக்கும் சிறந்தது
  • மங்களகரமான செயல்களும் செய்யலாம்
  • தாது பொருட்கள் சம்பந்தமான செயல்கள் செய்தல்
  • மூலப்பொருட்களை தகவல்கள் அனைத்தும் செய்யலாம்

பத்திரை கரணம்

  • சிறை எடுத்தல்
  • விளையாடுதல்
  • ஆயுதங்களால் காயப்படுத்த
  • உச்சாடனம் செய்தல்
  • எருமை, காளை, குதிரை சம்பந்தமான காரியங்கள் செய்வதற்கு உகந்தது

சகுனி கரணம்

  • சாந்தி கருமங்கள்
  • மந்திர உபதேசம்
  • மருந்து கொடுத்தல்
  • தேவதைகளை பூஜித்தல்

சதுஷ்பாத கரணம்

  • பசுக்கள் சம்பந்தமான காரியங்கள் செய்தல்
  • திருமணம் செய்தல்
  • உணவிடுதல்
  • தேவைகளை திருப்திபடுத்தும் செயல்களில் ஈடுபடுதல்

நாகவ கரணம்

  • செயல்கள் செய்தல்
  • எதிரிகளை ஒடுக்குதல்
  • வசியம் செய்தல்
  • தண்டனை தருதல்
  • கொடூர செயல்களை செய்தல்

கிம்ஸ்துக்னம்

  • புது அரிசியில் சமைத்தால்
  • புத்தாடை,ஆபரணங்கள் அணிதல்
  • பூமி வாங்குதல்
  • மங்களகரமான காரியங்கள் செய்தல்

பஞ்சாங்கத்தில் பயன்படுத்தப்படும் சொற்கள்

நட்சத்திர தியாஜ்யம்

தியாஜ்யம் என்றால் சுபகாரியங்கள் விளக்கும் நேரமாகும்.  பஞ்சாங்கத்தில் உள்ள நட்சத்திர தியாஜ்யம் என்று குறிப்பிடப்பட்டுள்ள நேரம் தியாஜ்யம் துவங்கும் நேரம் ஆகும். குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தில் தொடங்கி நான்கு நாழிகை யாக காலமாகும்.எனவே அந்த நேரத்தில் சுப காரியங்கள் தவிர்க்கப்பட வேண்டும்

நேத்திரம் ஜீவன்

சூரியன் நிற்கும் நட்சத்திரம் முதல் சந்திரன் நிற்கும் நட்சத்திரம் வரை எண்ணி அந்த எண்ணிக்கையின் அடிப்படையில் நேத்திரம் ஜீவன் கணிக்கப்படுகிறது.
ஒரு குறிப்பிட்ட நாள் பலமாக இருக்கிறதா இல்லையா என்பதை அறிய உதவுகிறது.

வாரசூலை

சூலம் அல்லது வாரசூலை என்று குறிப்பிடப்பட்டிருக்கும் திசையில் பிரயாணம் செய்தால் பயணத்தின் நோக்கம் வெற்றி பெறாது தோல்வியையே தரும். ஆலயங்கள் நவகோள்கள் அமைந்துள்ள அமைப்பு முறையை நோக்கினாள் நோக்கி நிற்கும் திசைக்கு எதிர் திசையில் சூலம் என்று எளிதில் அறியலாம்.

உதாரணத்திற்கு குரு வடக்கு நோக்கி நிற்கும் கோலாகும். எனவே குருவின் ஆதிக்கம் மிக்க வியாழக்கிழமையன்று சூலம் தெற்கு ஆகும். அடுத்து சுக்கிரன் கிழக்கு நோக்கி நிற்கும் வெள்ளிக்கிழமையன்று சூலம் மேற்கு என்பதை வாரசூலை என்ற வரிசையில் காணலாம். பிரயாணம் துவங்கும்போது கவனிக்க வேண்டியதாகும். சூலம் மதத்தை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படுகிறது. யோகி அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படுகிறது.

அக்னி நட்சத்திரம்

சூரியன் தனது பயணத்தில் பரணி நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் பிரவேசிக்கும் நாள் தொடங்கி ரோகிணி நட்சத்திரம் முதல் பாதத்தில் சஞ்சரிக்கும் நாள் வரை உள்ள காலத்தை அக்னி நட்சத்திரம் என்கிறோம். தோராயமாக ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் 21-ஆம் தேதி முதல் வைகாசி 11-ஆம் தேதி வரை இருக்கும்

கர்ப்ப ஓட்டம்

சூரியன் பூராடம் நட்சத்திரத்தில் பயணிக்கும் காலத்தை கர்ப்பம் என்கிறோம் ஒவ்வொரு வருடமும் மார்கழி 13 முதல் 26 ஆம் தேதி வரை இருக்கும்.

மலமாதம்

ஒரு மாதத்தில் இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பௌர்ணமிகள் நிகழ்ந்தால் அம்மாதத்தை மலமாதம் என்கிறோம். இம்மாதத்தில் சுப காரியங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.

ஆகாத நட்சத்திரங்கள்

பரணி, கார்த்திகை, திருவாதிரை, ஆயில்யம், மகம், பூரம், சித்திரை, சுவாதி, விசாகம், கேட்டை, பூராடம், பூரட்டாதி ஆகிய பன்னிரண்டு நட்சத்திரங்கள் நடப்பிலிருக்கும் நாட்களில் கடன் வாங்கிக் கொண்டவர்கள் திருப்பித் தர மாட்டார்கள். பிரயாணம் செய்பவர்களுக்கு கஷ்டம் உண்டாகும் நோய் உண்டானால் குணமாக காலதாமதம் ஆகும். அதாவது பாம்பின் வாயில் அகப்பட்ட தேரை போல் கஷ்டப்பட நேரிடும்.

குளிகன்

குளிகன் எனப்படுவது சனியின் உபகிரகமாகவும், சனியன் பிள்ளை என்றும் கூறுவர். பொதுவாக தீய பலன் தரும் கிரகமாகும். பஞ்சாங்கத்தில் கொடுக்கப்பட்டு உள்ள குளிகை உதய நாழிகையை சாதகர் பிறந்த உதய நாழிகையாக பாவித்து இலக்கணம் கணித்து, அந்த ராசிகள் குறிப்பிட வேண்டும்.

ராகு காலம்

ராகு காலம் என்பது ராகு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்த நேரமாக கருதப்படுகிறது. ராகுகாலம் ஒவ்வொரு நாளும் ஒன்றரை மணி நேரம் இருக்கும். திங்கள் கிழமை துவங்கி சனி, வெள்ளி, புதன், வியாழன், செவ்வாய், ஞாயிறு கிழமை வரிசையில் ராகு காலம் அமையும்.

எமகண்டம்

எமகண்டம் என்றால் எமனுக்கே முள்ளாக கூடியது என்று பொருள். எமகண்டம் குருவுக்கு உபகிரகம் என்றும் குருவின் பிள்ளை என்றும் கூறுவர். இதுவும் ஒவ்வொரு நாளும் ஒன்றரை மணி நேரம் இருக்கும்.

தனிஷ்டா பஞ்சமி

தனிஷ்டா பஞ்சமி என்பது மரணத்திற்கு ஆகாத நாட்கள் ஆகும். அவிட்ட நட்சத்திரத்திற்கு வடமொழியில் தனிஷ்டா என்று பெயர். பஞ்சமி என்றால் ஐந்து என்று பொருள். அவிட்டம், சதயம், போராட்டதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய ஐந்து நட்சத்திரங்களில் ஒருவர் மரணம் அடைந்தால், அந்த வீட்டுக்கு ஆறு மாதங்கள் தோஷம் உண்டு. எனவே ஆறு மாதங்கள் அந்த வீட்டை உபயோகப்படுத்தாமல் மூடி வைக்க வேண்டும்.

ரோகிணி நட்சத்திரத்தில் மரணம் நிகழ்ந்தால், நான்கு மாதத்திற்கு அந்த வீட்டை மூடி வைக்க வேண்டும். கார்த்திகை, உத்திரம் நட்சத்திரங்களில் மரணம் நிகழ்ந்தால் மூன்று மாதத்திற்கு அந்த வீட்டை மூடி வைக்க வேண்டும். மிருகசீரிஷம், சித்திரை, புனர்பூசம், விசாகம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்களில் மரணம் நிகழ்ந்தால் இரண்டு மாதத்திற்கு அந்த வீட்டை மூடி வைக்க வேண்டும்.

இருப்பினும் மரணம் நிகழ்ந்த அந்த வீட்டுக்குள்ளேயே கதவுடன் கூடிய சிறிய மாடம் அமைத்து அதற்குள் வெண்கல கிண்ணம் வைத்து நல்லெண்ணெய் விட்டு விளக்கு போட்டு தினமும் காலையில் கற்பூர ஆரத்தி செய்து வர வேண்டும். மாடத்திற்குள் இருக்கும் அந்த நல்லெண்ணெய் விளக்கு இரவு பகல் எந்நேரமும் இருந்து கொண்டே இருக்க வேண்டும். இவ்வாறு மரணம் நிகழ்ந்த நட்சத்திரத்திற்கு தக்கவாறு அந்த குறிப்பிட்ட மாதங்கள் கால அளவிற்கு செய்து வந்தால் தோஷம் பரிகாரம் ஆகிறது.

மேலும் படிக்க : அடிப்படை ஜோதிடம் -2

2 thoughts on “அடிப்படை ஜோதிடம் -3”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top