மேஷ ராசி காரகத்துவங்கள் மற்றும் பாவ பலன்கள்

மேஷ ராசி

மேஷ ராசி கால புருஷனுக்கு முதலாவதாக ராசி. ராசி மண்டலத்தில் முதல் 30 பாகை கொண்டது. வெள்ளாட்டு வடிவத்தை உடையது. இது ஒரு நெருப்பு ராசி சர ராசி தத்துவத்தில் அறம் சார்ந்த தத்துவம் . அஸ்வினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் நட்சத்திரங்களை உடையது.

இதனுடைய அதிபதி செவ்வாய் பகவான். சூரியன் உச்சம் அடையும் ராசி. சனி பகவான் நீசம் அடையும் ராசி. உடல் பாகத்தில் தலையைக் குறிக்கும். இது ஒரு வறண்ட ராசி , மாநிறத்தை குறிக்கும். இந்த ராசிக்காரர்கள் உடல் உழைப்பால் உயர கூடியவர்கள். கடினமான வேலைகளை செய்து முடிப்பவர்கள். எதையும் தாங்கும் மனதை உடையவர்கள். தலமை தாங்கும் திறமை உடையவர்கள்.

Table of Contents

மேஷ ராசியின் காரகத்துவங்கள்

  • நெருப்பு ராசி
  • சர ராசி
  • ஆண் ராசி
  • இரவில் பலமுள்ள ராசி
  • சிவப்பு நிறம்
  • வீதியின் ஆரம்ப பகுதி
  • பள்ளமான இடங்கள்
  • காட்டுத்தீ (பரவக்கூடிய நெருப்பு)
  • செங்கல்
  • எரி பொருட்கள்
  • முருகன் (ஆதி தேவதை )
  • உலோகங்களை உருக்கி செய்யப்படும் பொருட்கள்
  • தலை
  • மூளை
  • மண்டை ஓடு
  • அறுவை சிகிச்சை நிபுணர்
  • ஆடு
  • குதிரை
  • பவழம்
  • பருத்தி
  • கோதுமை
  • கேழ்வரகு (ராகி)

இடங்கள்

  • மலைப்பகுதிகள்
  • முட்செடிகள் நிறைந்த இடங்கள்
  • உலோகங்களை உருக்கும் இடங்கள்
  • கரடு முரடான பாறைகள் நிறைந்த இடங்கள்
  • போர் செய்யும் இடங்கள்
  • விளையாட்டு மைதானங்கள்
  • திருடர்கள் தங்கும் இடம்
  • உழுத இடங்கள்
  • மேய்ச்சல் நிலங்கள்
  • நெருப்புள்ள இடங்கள்
  • சுரங்கம் அமைந்த பகுதிகள்

தொழில்கள்

  • அரசாங்க வேலை
  • காவல்துறை
  • தீயணைப்பு துறை
  • ராணுவ துறை
  • உலோகங்களை உருக்கி செய்யும் தொழில்கள்
  • பொறியியல் துறை
  • செங்கல் சூளை தொழில்
  • அறுவை சிகிச்சை மருத்துவர்
  • மட்பாண்ட தொழில்
  • விளையாட்டு துறை
  • ஆராய்ச்சி துறை
  • சிற்ப வேலை
  • ரசாயனம் சார்ந்த தொழில்கள்
  • வாகன உதிரிப்பாகம் செய்தல்

நோய்கள்

  • தலைவலி
  • மயக்கம்
  • தலையில் காயம்
  • மூளை சம்பந்தமான நோய்கள்
  • உஷ்ண சம்பந்தமான நோய்கள்

மேஷ ராசியின் பொதுவான குணங்கள்

தோற்றம்

  • இளஞ்சிவப்பு நிற உடம்பு
  • முட்டை வடிவ முகம்
  • நீண்ட கழுத்து
  • சுருண்ட முடி
  • சீரான பற்கள்
  • வலிமையான எலும்புகள்
  • கட்டுக்கோப்பான உடல்

சிறப்பு குணங்கள்

  • வலிமையுடையவர்கள்
  • சுறுசுறுப்பானவர்கள்
  • எடுத்த காரியத்தை முடிக்காமல் விடமாட்டார்கள்
  • உயர்ந்த குறிக்கோள் உடையவர்கள்
  • கலை, அழகு போன்றவற்றை ரசிப்பவர்கள்
  • தைரியமானவர்கள்
  • அன்பானவர்கள்
  • சுதந்திரமானவர்கள்
  • நிர்வாக திறமை உடையவர்கள்

மாற்றிக்கொள்ள வேண்டிய குணங்கள்

  • முன்கோபம்
  • பிடிவாதம்
  • அவசரப்படுதல்
  • அதிக உணர்ச்சி வசப்படுதல்
  • வீண் சண்டை செய்தல்

பொதுவான பாவ பலன்கள்

1-ம் பாவம்

  • மேஷ லக்னக்காரர்களுக்கு வாழ்க்கை போராட்டமாக அமையும்
  • விபத்து, கண்டம், அவமானம் போன்றவை ஏற்படும்
  • வாழ்க்கையில் ஏற்ற இறக்கம் இருக்கும்
  • பிடிவாதம், ஆணவம் போன்றவை நிறைந்திருக்கும்
  • முன்கோபி
  • அவசர புத்தி காரர்கள்
  • தலையில் பிரச்சினை ஏற்படும்
  • அமைதியான தோற்றமும் கூர்ந்த அறிவும் உடையவர்கள்
  • சிக்கனவாதி
  • தற்பெருமை உடையவர்கள்
  • உலக ஞானம் உடையவர்கள்

2-ம் பாவம்

  • வீட்டில் உள்ள பெண்களை மதித்து சந்தோஷமாக வைப்பதால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்
  • திருமணத்திற்கு பின் வளர்ச்சி ஏற்படும்
  • பேச்சு சாமர்த்தியம் உள்ளவர்கள்
  • பிறர்க்கு பணம் கொடுத்தால் திரும்பி வராது
  • பூர்வீக சொத்தால் பயனில்லை
  • மனதில் பட்டதை நேரிடையாக பேசி விடுவார்கள்
  • பார்வை குறைபாடு ஏற்படும்
  • சேமிப்பில் பிரச்சனை உண்டு
  • ஆடம்பரத்தில் விருப்பம் உடையவர்

3-ம் பாவம்

  • தகவல் தொடர்பு எழுத்துத் துறை மூலம் அவர்களுக்கு ஆதாயம் உண்டு
  • வேகமான சிந்தனையும் செயல்பாடும் இவர்களுக்கு உண்டு
  • பக்கத்து வீட்டுக்காரர்களிடம் எப்போதும் பிரச்சனை இருந்து கொண்டே இருக்கும்
  • சகோதர ஒற்றுமை இருக்காது
  • சீட்டு தொழிலில் ஏமாற்றம் உண்டு
  • மாமனாருடன் கருது வேறுபாடு
  • வாகன விபத்து உண்டு
  • நகை கடன் உண்டு
  • ஜாமின் பிரச்னை உண்டு
  • கதை, கட்டுரை எழுத ஆர்வம் உண்டு
  • எவ்வளவு கஷ்டம் வந்தாலும் சளைக்காமல் உழைக்க கூடியவர்கள்
  • பத்திர பிரச்சனை உண்டு
  • பக்கத்து வீட்டுக்காரர்கள் பிரச்சனை உண்டு
  • கையெழுத்தால் பிரச்சினை ஏற்படும்
  • ஜாமின் பிரச்சினையை உண்டு
  • விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்கள்
  • ENT பிரச்சினை உண்டு

4-ம் பாவம்

  • வீட்டு அருகில் நீர் நிலைகள் உண்டு
  • வீடு கட்டும் போது மழை வரும்
  • அம்மாவின் அன்பு உண்டு
  • பிற்பகுதியில் பொருளாதார முன்னேற்றம் உண்டு
  • உயர்கல்வி பிரச்னை உண்டு
  • வாகன யோகம் உண்டு
  • சொத்தில் பிரச்னை உண்டு

5-ம் பாவம்

  • புத்ர பாக்யம் உண்டு
  • பூர்விக சொத்தால் ஆதாயம் இல்லை
  • குலதெய்வ அருள் உண்டு
  • திட்டம் தீட்டி வெற்றி காணக்கூடியவர்கள்
  • குழந்தைகள் புகழ் பெறுவார்கள்
  • குழந்தை பிறந்த பின் நல்ல முன்னேற்றம் ஏற்படும்
  • தன் குழந்தைகளுக்காக பொருளாதாரம் புகழ் போன்றவற்றை தேடி வைப்பவர்கள்

6-ம் பாவம்

  • போஜன பிரியர்கள்
  • கடன் வாங்கக்கூடாது, வாங்கினால் அதனால் சிரமம் உண்டு
  • குடல் தொந்தரவு, முதுகு வலி தொந்தரவு உண்டு
  • உயர்பதவிக்கு தடை
  • எதிரிகள் கடன் போன்றவை உண்டு
  • வம்பு வழக்கு போன்றவை உண்டு

7-ம் பாவம்

  • மனைவியால் சொத்து உண்டு
  • திருமணத்திற்கு பின் முன்னேற்றம் உண்டு
  • சிறுநீரக பிரச்னை உண்டு
  • மனைவி வழியில் பிரச்சினைகள் ஏற்படும்
  • மனைவிக்கு நோய்கள் ஏற்படும்
  • இருதார அமைப்பு இவர்களுக்கு உண்டு அல்லது காதல் திருமணம் ஏற்படும்

8-ம் பாவம்

  • நீண்ட ஆயுள் உண்டு
  • திடீர் அதிர்ஷம் உண்டு
  • குழந்தைகளால் அவமானம் உண்டு
  • மலசிக்கல் பிரச்னை உண்டு
  • நீர் சார்ந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
  • இவர்களுக்கு நீரினால் கண்டம் ஏற்படும்
  • பூர்வீக சொத்து ஆதாயம் இல்லை கிடைத்தாலும் ஏற்கமாட்டார்கள்
  • அமானுஷ்ய அறிவு உண்டு
  • சாமியாடுதல் குறிசொல்லுதல் போன்றவற்றில் ஈடுபாடு உண்டு

9-ம் பாவம்

  • பக்திமான்
  • தீர்த்த யாத்திரை செல்ல விருப்பம்
  • தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்
  • பெற்றோரை பிரிந்து வாழக்கூடிய சூழ்நிலை உண்டாகும்
  • வாழ்க்கையில் முன்னேறும் போது கவனம் தேவை
  • ஆன்மீக நாட்டம் உண்டு
  • அவசரமாக முடிவுகளை எடுத்து விட்டு பின் பிரச்சினைகளை சந்திப்பவர்கள்
  • அரசியல் ஈடுபாடு உண்டு

10-ம் பாவம்

  • செய்யும் தொழில் ஈடுபாட்டோடு செய்யக்கூடியவர்கள் அதில் வெற்றியும் காணக் கூடியவர்கள்
  • வேலையாட்கள் பிரச்னை உண்டு
  • எந்திரங்கள் சார்த்த தொழில்கள் சிறப்பில்லை
  • தொழிலால் வம்பு வழக்கு உண்டு
  • மாமியாருக்கு சொத்து உண்டு
  • மாமியார் ஆதிக்கம் உள்ள வீடு
  • உண்டு தொழில் கடன் ஏற்படும் தொழில் முன்னேற்றம் அடையும் யோகம் உண்டு
  • ஜவுளித்துறை சுரங்கத் துறை வாகனத் துறை போன்றவற்றில் முன்னேற்றம் உண்டு

11-ம் பாவம்

  • நண்பர்கள் அதிகம் உண்டு
  • நண்பர்களை நேசிக்கக் கூடியவர்கள்
  • ஆபத்தில் நண்பர்களே உதவி செய்வார்கள்
  • பெரிய லாபங்களை ஈட்டக்கூடியவர்கள்
  • மூத்த சகோதரர்களுக்கு மணவாழ்வில் பிரச்சினை உண்டு

12-ம் பாவம்

  • வெளிநாட்டு சுற்றுப்பயணம் உண்டு
  • காலில் பாதிப்பு ஏற்படும்
  • தூங்குவதில் பிரச்சினை ஏற்படும்
  • தாம்பரத்தில் திருப்தியற்ற நிலை உண்டாகும்
  • எப்போதும் சேமிப்பு இவரிடம் இருக்கும்
  • மருத்துவத் துறையில் சாதிக்க கூடிய நபர்கள்
  • சொத்து சம்பந்தமான இறப்பு இருக்கும்
  • கூட்டாளிகளால் விரையம் உண்டு

மேஷத்தில் ஒன்பது கோள்கள் நிற்பதால் ஏற்படும் பலன்கள்

மேஷத்தில் கேது நிற்பதால் பலன்கள்

  • இங்கு கேது பகவான் இருப்பது நன்மையான பலன்களையே தரும்
  • ஜாதகருக்கு ஆன்மீக ஈடுபாடு உண்டு
  • மருத்துவம் சார்ந்த அறிவியல் ஜாதகருக்கு இருக்கும் அல்லது குடும்பத்தில் மருத்துவர்கள் இருப்பார்கள்
  • ஜாதகருக்கு உள்ளுணர்வு அதிகம் இருக்கும்
  • தலை சார்ந்த வியாதிகள் ஏற்படும்

சுக்கிரன் நிற்பதால் ஏற்படும் பலன்கள்

  • சுக்கிரன் இருப்பது நல்ல பலன்களைத் தரும்
  • ஜாதகருக்கு அழகான முகத்தோற்றம் உடையவர்
  • பொருளாதார முன்னேற்றம் உண்டு
  • கலையில் ஆர்வம் உடையவராக இருப்பார்கள்
  • குடும்ப வாழ்வில் பற்று உடையவராக இருப்பார்கள்
  • வீண் செலவு செய்யக் கூடிய நபர்களால்
  • சங்கீதம் அதை முதலில் கைதேர்ந்த நபராக இருப்பார்கள்
  • நேர்மையான நபர்கள்
  • மனைவிமீது பற்று உடையவர்கள்
  • வேலை தொழில் அடிக்கடி மாற்றக் கூடிய நபர்கள்
  • மனைவியால் முன்னேற்றம் உண்டு
  • மனைவியால் ஆதாயம் உண்டு
  • மனைவிக்கு சொத்து உண்டு
  • மனைவிக்கு கண்டம் விபத்து உண்டு
  • மனைவி நிர்வாகத் திறமை உடையவர்
  • மனைவி பிடிவாத குணம் உடையவர்

சூரியன் நிற்பதால் ஏற்படும் பலன்கள்

  • மேஷ ராசியில் சூரியன் இருப்பது சிறப்பான அமைப்பாகும்
  • இது சூரியன் உச்ச ராசியாக இருப்பதால் ஜாதகருக்கு பலவிதமான முன்னேற்றம் ஏற்படும்
  • ஜாதகருக்கு பேரும் புகழும் ஏற்படும்
  • அரசாங்க அரசியல் தொடர்பு உண்டு
  • பொதுநலத்தில் அக்கறை உடையவராக இருப்பார்
  • தந்தை மீது அதிக பற்று உடையவராக இருப்பார்
  • யாத்திரையில் அதிகம் விருப்பமுடையவர்கள் கோபமாக இருக்கும்
  • சுறுசுறுப்பானவர்கள் பணத்திற்கு பஞ்சமிருக்காது
  • பல திட்டங்களை தீட்ட கூடியவர்கள் தந்தையின் ஆதரவு இவர்களுக்கு உண்டு
  • தந்தை பெரிய குடும்பத்தைச் சேர்ந்த நபராக இருப்பார்கள்
  • தந்தையால் முன்னேற்றம் உண்டு
  • தந்தை வழி ஆதாயம் உண்டு
  • தந்தைக்கு சொத்து உண்டு
  • தந்தைக்கு கண்டம் விபத்து உண்டு
  • தந்தை நிர்வாகத் திறமை உடையவர்
  • தந்தை பிடிவாத குணம் உடையவர்

சந்திரன் நிற்பதால் ஏற்படும் பலன்கள்

  • இதனால் ஜாதகருக்கு நல்ல பலன்கள் ஏற்படும்
  • தாய் வகையில் ஜாதகருக்கு அனுகூலமான பலன்கள் ஏற்படும்
  • வீடு வாகன யோகம் உண்டு பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும்
  • நிலபுலன்கள் சேர்க்கை உண்டு அழகான கண்களை உடையவர்கள்
  • காய்கறி பழங்களை விரும்புவார்கள்
  • நீரினால் கண்டம் ஏற்படும்
  • தாய்ப்பாசம் உண்டு
  • தலையில் பாதிப்பு ஏற்படும் சந்தேக குணம் உடையவர்கள்
  • மனக்கோட்டை கட்ட கூடியவர்கள்
  • அவசர முடிவை எடுத்து பிறகு கஷ்டப்பட கூடியவர்கள்
  • அலட்சிய மனப்பான்மை உடையவர்கள்
  • வீட்டு அருகில் நீர் நிலைகள் உண்டு
  • வீடு கட்டும் போது மழை வரும்
  • தாய் பெரிய குடும்பத்தைச் சேர்ந்த நபராக இருப்பார்கள்
  • தாயார் முன்னேற்றம் உண்டு
  • தாய்வழி ஆதாயம் உண்டு
  • தாய்க்கு சொத்து உண்டு
  • தாய்க்கு கண்டம் விபத்து உண்டு
  • தாய் நிர்வாகத் திறமை உடையவர்
  • பிடிவாத குணம் உடையவர்

செவ்வாய் நிற்பதால் ஏற்படும் பலன்கள்

  • ஜாதகருக்கு தைரியத்தையும் தன்னம்பிக்கையின் தரக்கூடியது
  • சுறுசுறுப்பானவர்கள் சகோதரர் மீது அதிக பாசம் உடையவர்களாக இருப்பார்கள்
  • நிர்வாகத்திறமை சிறப்பாக உண்டு
  • சிக்கனத்தைக் கடைப்பிடிக்க கூடியவர்கள்
  • திறந்த மனதோடு பேசக்கூடியவர்கள்
  • கம்பீரமான தோற்றமும் நடையும் உள்ளவர்கள்
  • பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு
  • உடம்பில் காயம் வடுக்கள் உண்டு
  • கடினமான மனப்போக்கு உடையவர்கள்
  • சண்டை போடுவதில் விருப்பமுடையவர்கள்
  • பிரிவிற்கு உற்சாகமூட்டும் கூடியவர்கள்
  • சகோதரனால் முன்னேற்றம் உண்டு
  • ன் வழி ஆதாயம் உண்டு
  • சகோதரனுக்கு சொத்து உண்டு,  கண்டம் விபத்து உண்டு
  • சகோதரனுக்கு நிர்வாகத் திறமை உடையவர்
  • சகோதரன் பிடிவாத குணம் உடையவர்

ராகு நிற்பதால் ஏற்படும் பயன்கள்

  • ஜாதகர் இதனால் அடிக்கடி நோய்வாய்ப்பட கூடிய சூழல் உருவாகும்
  • இந்த அமைப்பு பொதுவாக ஜாதகருக்கு பிரச்சினையை உண்டாக்க கூடிய அமைப்பாகும்
  • ஜாதகர் அடிக்கடி நோய்வாய்ப்படுவர்
  • விபத்து கண்டம் உண்டு
  • முன்னேற்ற தடை ஏற்படும்

குரு நிற்பதால் ஏற்படும் பலன்கள்

  • இது குருவிற்கு நட்பு விடவும் இது ஒரு சிறப்பான அமைப்பாகும்
  • ஜாதகருக்கு வாழ்வில் எல்லா விதமான அனுகூலமான விஷயங்களும் நடக்கும்
  • பொதுவாக இறைவன் பெற்ற ஜாதகர்கள்
  • இறைவனுடைய அருள் பரிபூரணமாக இருக்கும்
  • தான தர்மத்தில் அதிக ஈடுபாடு உடையவர்கள்
  • பொதுநல வாழ்வில் ஈடுபாடு உண்டு
  • பிறந்தபின் குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்படும்
  • இயற்கையை நேசிக்கக் கூடியவர்கள் குருபக்தி உள்ளவர்கள்
  • பெரிய பதவி அடைய கூடியவர்கள் யாரையும் புண்படுத்த விரும்பாதவர்கள்
  • கௌரவமான குடும்பத்தை சேர்ந்தவராக இருப்பார்
  • குழந்தையால் முன்னேற்றம் உண்டு
  • குழந்தையால் ஆதாயம் உண்டு
  • குழந்தைக்கு சொத்து உண்டு
  • குழந்தைக்கு கண்டம் விபத்து உண்டு
  • குழந்தைகள் நிர்வாகத் திறமை உடையவர்கள்
  • குழந்தைகள் பிடிவாத குணம் உடையவர்கள்

சனி நிற்பதால் ஏற்படும் பலன்கள்

  • இது சனி பகவானின் நீச்ச வீடாகும்
  • எனவே இந்த அமைப்பு ஒரு சாதகமான அமைப்பு இல்லை
  • ஜாதகரின் உடல் நலம் அடிக்கடி பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம்
  • சோம்பேறியாக இருப்பார் உடலுழைப்பை விரும்பக்கூடிய கூறிய நபராக இருக்க மாட்டார்
  • உடல் வலிமை குறைந்து காணப்படுவார் மந்த புத்தி உடையவராக இருப்பார்
  • கடுப்பான முகத்தோற்றம் உடையவர்களாக இருப்பார்கள்
  • பிறர் பேச்சை கவனிக்க கூடிய பொறுமை இல்லாதவர்கள்
  • குறும்புத்தனமான நடக்கக் கூடியவர்கள்
  • வேலை செய்வதற்கு விரும்பாத நபர்கள்
  • ஏமாற்றுப் பேர்வழிகள்
  • குறிக்கோள் இல்லாத நபர்கள்
  • தொழிலில் தடை தாமதம்
  • சொந்த தொழிலால் விரயம்

புதன் நிற்பதால் ஏற்படும் பலன்கள்

  • புதனுக்கு இது பகை வீடாகும்
  • கடன் பகை நோய் போன்ற பலன்களை ஜாதகர் அனுபவிப்பார்
  • பொறுமைசாலிகள்
  • எதையும் தைரியமாக செய்யக் கூடிய நபர்கள்
  • கெட்டிக்காரர்கள் நிலையான மனதை இல்லாதவர்கள்
  • பிடிவாதக் காரர்கள்
  • பேராசைக்காரர்கள்
  • சகிப்புத்தன்மை இல்லாத நபர்கள்
  • ரகசியத்தைக் காக்க முடியாதவர்கள்
  • துணிச்சல் அற்றவர்கள்
  • தாய்மாமனால் முன்னேற்றம் உண்டு
  • தாய்மாமனால் ஆதாயம் உண்டு
  • தாய்மாமனுக்கு சொத்து உண்டு
  • தாய்மாமனனுக்கு கண்டம் விபத்து உண்டு
  • தாய்மாமன் நிர்வாகத் திறமை உடையவர்
  • தாய்மாமன் பிடிவாத குணம் உடையவர்

மேலும் படிக்க : அடிப்படை ஜோதிடம் -3

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top