மிதுன ராசி
மிதுன ராசி கால புருஷனுக்கு மூன்றாவது ராசியாகும். ராசி மண்டலத்தில் 60 பாகை முதல் 90 பாகை வரை உள்ளது. இது ஒரு காற்று ராசி. ஆன் ராசி. உபய ராசி. இதன் அதிபதி புதன் பகவான். இந்த ராசியில் எந்த ஒரு கிரகமும் உச்சம் நீசம் அடைவது இல்லை. மிருகசீரிஷம் 3,4 பாதமும், திருவாதிரையின் 4 பாதங்களும், புனர்பூசம் நட்சத்திரத்தின் முதல் 3 பாதங்களும் இந்த ராசியில் உள்ளன.
பொதுவாக மிதுன ராசிக்காரர்கள் அன்பானவர்கள், இரக்க சுபாவம் உடையவர்கள். புத்திசாலிகள் சந்தர்ப்பத்துக்கு தகுந்தவாறு செயல்படக்கூடியவர்கள். தனிமை விரும்பிகள். இரட்டைத் தன்மை உடையவர்கள். நல்ல பேச்சாளர்கள். இது நான்குகால் ராசி, இரவில் வலுவுள்ள ராசி, இரவில் செய்யும் காரியங்கள் வெற்றி. தெற்கு திசை முன்னேற்றத்தை தரும். அங்கத்தில் முகத்தை குறிக்கக்கூடிய ராசி. பூங்கா, காடு, விவசாய நிலங்களை குறிக்கும்.
மிதுன ராசியின் காரகத்துவங்கள்
- நடனம்
- வீதியின் முடிவு
- ஆராய்ச்சி
- சங்கீத கச்சேரிகள்
- கடை வீதி
- பூங்கா
- தோட்டம்
- வீட்டருகில் தோட்டம் அல்லது பள்ளிக்கூடம்
- வாசனை பொருட்கள்
- காகிதம்
- பத்திரிக்கை
- இரட்டை தன்மை
- விமான பயணங்கள்
- இசை கருவிகள்
- ஜன்னல்
- நகைச்சுவை
- பிரபஞ்ச ராசி
- காதல் ராசி
- வலது காது, தோள்பட்டை, கைகள்
- பூனை
- பச்சை கிளிகள், புறா
- நிலக்கடலை
- பயறு வகைகள்
- குங்குமப்பூ
- விதையில்லாத பழங்கள்
- பச்சை கீரைகள்
இடங்கள்
- வியாபார வீதி
- வியாபார மையங்கள்
- காலி நிலங்கள்
- நந்தவனம்
- பல்கலை கழகங்கள்
- விளையாட்டு மைதானங்கள்
- கல்லூரிகள்
- நகரங்கள்
தொழில்கள்
- தகவல் தொடர்பு துறை
- கல்வித்துறை
- தொலைபேசி துறை
- எழுத்து துறை
- தூதரகம்
- ஜோதிடம்
- கணக்கியல் துறை
- நெசவாலை தொழில்
- விமானப்படை
- செய்தி துறை
நோய்கள்
- நுரையீரல் சார்ந்த நோய்கள்
- தோள்பட்டை வலி
- கை மூட்டுகளில் வலி
- காது நோய்
மிதுன ராசியின் பொதுவான குணங்கள்
தோற்றம்
- உயரமான உடல்
- முட்டை வடிவ முகம்
- தெளிவான கண்கள்
- தடித்த கழுத்து
- நீண்ட மூக்கு
- கன்னத்தில் குழி விழும்
சிறப்பு குணங்கள்:
- புத்திசாலிகள்
- கருணையுடையவர்கள்
- பல கலைகளில் திறமையுள்ளவர்கள்
- சூழ்நிலைக்கு தக்கவாறு ஒத்து போதல்
- நகைசுவை உணர்வு
- திட்டமிடும் ஆற்றல்
- நண்பர்களுக்கு ஆபத்தில் உதவுபவர்கள்
மாற்றிக்கொள்ள வேண்டிய குணங்கள்
- தேவையில்லாதவற்றை தெரிந்துகொள்ள நேரத்தை வீணாக்குதல்
- தீய நண்பர்களை தேர்ந்தெடுப்பதால் பிரச்சனையில் சிக்கிக்கொள்வார்கள்
- முன்கோபம்
- உணர்ச்சிவசப்படுதல்
பொதுவான பாவ பலன்கள்
1-ம் பாவம்
- இரட்டை குணம் கொண்டவர்கள்
- கற்பதில் ஆர்வம் அதிகம்
- மனதிற்குப் பிடித்த தொழில் அமைவதில் சிக்கல்
- காந்த பார்வை உடையவர்கள்
- உடல் மாநிறம் அல்லது கருப்பு நிறம் உடையவர்கள்
- பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள்
- தனது நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றக்கூடிய நபர்கள்
- கபட பேர்வழிகள். சந்தேக குணம் உண்டு
- எளிதில் பிறரை நம்ப மாட்டார்கள்
- பயந்த சுபாவம் உடையவர்கள்
- சிரித்த முகத்தோடு உலாவக் கூடிய நபர்கள்
- சிரித்தே காரியத்தை சாதிக்க கூடிய நபர்கள்
2-ம் பாவம்
- தந்திரமாக பேசக்கூடிய நபர்கள்
- பிறரை ஏழாம் நய்யாண்டி செய்வதில் பல்லவர்கள்
- தன்னை வெளிக்காட்டிக் கொள்வதில் விருப்பம் உடையவர்கள்
- இப்படி பேசக்கூடிய நபர்கள்
- பட்டிமன்றம் போன்றவற்றில் பேசுவதில் ஈடுபாடு உடையவர்கள்
- குடும்பப் பொறுப்பை சிறுவயதிலேயே ஏற்கக்கூடிய நபர்கள்
- வருமானத்தில் ஏற்றத்தாழ்வு உண்டு
- கையில் எப்போதும் பணம் இருக்கும்
- ஆடம்பர செலவு செய்வதால் பிரச்சினைகள் ஏற்படும்
- பணம் சார்ந்த பிரச்சனை ஏற்படும்
3-ம் பாவம்
- சகோதரர்கள் உண்டு
- அவர்களால் பிரச்சனை ஏற்படும்
- தகவல் தொடர்பு துறையில் முன்னேற்றம் ஏற்படும்
- ENT பிரச்சனை இருக்கும்
- மாமனார் கருத்து வேறுபாடு உண்டு ஆதாயம் இல்லை
- MLM, சிட்பண்ட் போன்றவற்றால் ஏமாற்றம் உண்டு
- அதிக வட்டி கட்ட கூடிய நபர்கள்
- ஜாமீன் பிரச்சனை உண்டு
- கமிஷன், காண்ட்ராக்ட் போன்ற துறைகளில் லாபம் உண்டு
- கற்பனை வளம் மிக்கவர்கள்
4-ம் பாவம்
- தாய் மீது பற்று அதிகம்
- அறிவாளி
- ஜாதகருக்குக் கல்வியில் தடை உண்டு
- அனுபவ அறிவு அதிகம்
- ஆடம்பரத்தை விரும்பக்கூடிய நபர்கள்
- விளைந்த பொருட்களை விரும்பக் கூடியவர்கள்
- வீடு வாகன யோகம் உண்டு
5-ம் பாவம்
- குலதெய்வம் இடம் மாறி வந்திருக்கும்
- குழந்தைகள் வெளியூர் வெளி மாநிலத்தில் தங்கிப் படிப்பது வேலை பார்ப்பது முன்னேற்றத்தை தரும்
- குழந்தைகளுக்கு மருத்துவ செலவு உண்டு
- குழந்தைகளுக்கு காதல் திருமணம் அமைய வாய்ப்பு உண்டு
- ஜாதகர் திடீர் அதிர்ஷ்டம் உடையவராக இருப்பார்
- வெளியூர் சென்று வருமானம் ஈட்டக்கூடிய அமைப்பு யோகத்தை தரும்
- பிற்பகுதியில் புத்திரர்களால் துன்பம் கவலை ,மன வேதனை போன்றவை ஏற்படும்
- தந்தை வழியில் இருதார அமைப்பு உண்டு
- குடும்பத்தில் கருக்கலைப்பு உண்டு
6-ம் பாவம்
- ரத்தம் தொடர்பான பாதிப்பு
- ஜாதகருக்கு ஏற்படும் சர்ஜரி உண்டு
- உடல் சார்ந்த பிரச்சனை இருக்கும்
- கடன் உண்டு அவற்றுள் அவமானம் ஏற்படும்
- சகோதர சகோதரிகளால் கடன் ஏற்படும்
- வம்பு வழக்கு ஏற்படும்
- எதிரிகளால் பிரச்சனை உண்டு
- வீட்டுக் கடன் ஏற்படும் அவற்றால் வம்பு வழக்கு போன்றவை ஏற்படும்
- லாபம் உண்டு
- மருத்துவம், ஜோதிடம், காவலர் பணி போன்றவற்றில் குடும்ப நபர்கள் இருப்பார்கள்
- காரமான உணவை விரும்பக்கூடிய நபர்கள்
- அசைவ விரும்பிகள்
7-ம் பாவம்
- கூட்டுத்தொழில் ஆகாது
- கூட்டாளிகளால் ஏமாற்றம் மிஞ்சும்
- திருமண வாழ்வில் பிரச்சினை ஏற்படும்
- இரண்டாவது குழந்தைகள் பிரச்சனை உண்டு
- மனைவி வழியில் ஆதாயம் உண்டு
- மனைவி வேலை செய்யக்கூடிய நபராக இருப்பார்
- மனைவி வழியில் திருமணம் செய்தவர்களை இருப்பார்கள்
8-ம் பாவம்
- LIC,PF ஆதாயம் உண்டு
- தந்தை வழி சொத்துக்கள் கிடைக்கும்
- மருத்துவத் துறையில் முன்னேற்றம் உண்டு
- சாமியாடுதல், குறிசொல்லுதல் போன்றவற்றில் ஈடுபாடு உண்டு
- அவர்கள் ஆதாயம் உண்டு டெபாசிட் எப்போதும் உண்டு
- திடீர் அதிஷ்டம் ஏற்படும்
- விபத்து, கண்டம் உண்டு
- தந்தைக்கு ஆயுள் கண்டம் உண்டு
- எலும்பு பாதிப்பு ஏற்படும்
9-ம் பாவம்
- தந்தை மீது பற்று அதிகம்
- தந்தைக்கு சொத்து அமைவதில் தாமதம்
- உயர் பதவி உண்டு
- தந்தை மேல் வழக்கு உண்டு
- தந்தைக்கு நீண்ட கால நோய் ஏற்படும்
- ஜாதகருக்கு குழந்தை பெறுவதில் தாமதம் உண்டு
- ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டு
- ஜீவசமாதி வழிபாடு முன்னேற்றத்தை தரும்
10-ம் பாவம்
- நீர் சம்பந்தப்பட்ட துறைகளில் முன்னேற்றம் உண்டு
- வெளிநாட்டு வருமானம் உண்டு
- சினிமா துறைகளில் முன்னேற்றம் உண்டு
- பேராசிரியர், சட்ட வல்லுனர், நீதிபதி போன்ற பதவி வைக்க வாய்ப்பு ஏற்படும்
- மாமியாரால் ஆதாயம் உண்டு
- ஏஜென்சி, மார்க்கெட்டிங் போன்ற துறைகளில் முன்னேற்றம் உண்டு
- அடகு கடை, மருந்து கடை, மளிகை கடை இவற்றால் ஆதாயம் உண்டு
- திட்டங்கள் தீட்டி அவற்றால் லாபம் சம்பாதிக்க கூடிய நபர்கள்
- கல்வித்துறையில் முன்னேற்றம் உண்டு
- பல தொழில்களை செய்யக்கூடியவர்கள்
11-ம் பாவம்
- மூத்த சகோதரர்களால் கருத்து வேறுபாடு உண்டு
- அவர்களுக்கு கண்டங்கள் ஏற்படும்
- போலீஸ் துறை சார்ந்த நண்பர்கள் உண்டு
- பூமி சார்ந்த தொழில்களில் நஷ்டம் ஏற்படும்
- நண்பர்களால் லாபம் உண்டு
12-ம் பாவம்
- ரத்த சம்பந்தப்பட்ட உறவுகளால் பிரச்சினை ஏற்படும்
- மனைவி வழியில் அதிக விரையம் ஏற்படும்
- பெண் குழந்தைகளால் செலவு ஏற்படும்
- குழந்தைகள் வெளியூர், வெளிநாடுகளில் படிக்கும் யோகமுண்டு
- குழந்தைகள் மருத்துவ செலவு ஏற்படும்
- இன்ப சுற்றுலாவில் அதிக ஈடுபாடு
- கண் பாதிப்பு ஏற்படும்
மிதுனத்தில் நவ கிரகங்கள் நிற்பதால் ஏற்படும் பலன்கள்
கேது நிற்பதால் ஏற்படும் பலன்கள்
- முன்னேற்றத்திற்கு தடை ஏற்படும்
- கைகளில் பாதிப்பு உண்டாகும்
- கிடைக்க வேண்டிய உதவிகள் வேண்டிய நேரத்தில் கிடைக்காது
- ஜாதகருக்கு தோல்களில் பிரச்சனை ஏற்படும்
- சகோதரர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும், பிரச்சனை உண்டு
- வங்கிக்கணக்கு சம்பந்தமான பிரச்சினை உண்டு
- காதல் வயப்பட கூடியவர்கள்
சுக்கிரன் இருப்பதால் ஏற்படும் பலன்கள்
- செல்வத்திற்கு குறைவிருக்காது
- அன்புகருணை உள்ளவர்கள்
- சேமிப்பு செய்வதில் விருப்பம் உடையவர்கள்
- இருதார யோகமுண்டு
- சுய விளம்பரம் தேடிக் கொள்பவர்கள்
- வாதம் புரிவதில் வல்லவர்கள்
- வசீகரமாக பேசக்கூடிய நபர்கள்
- மணவாழ்வில் பிரச்சினை உண்டு
மிதுனத்தில் சூரியன் நிற்பதால் ஏற்படும் பலன்கள்
- கற்றவர்கள் வித்வான்கள்
- திறமையானவர்கள்
- பெரிய பதவி வகிக்க கூடிய நபர்கள்
- எளிதில் புரிந்து கொள்ளும் சக்தி உடையவர்கள்
- பயந்த சுபாவம் உள்ளவர்கள்
- பிறர் குற்றங்களை வெளிப்படையாக சொல்லக் கூடியவர்கள்
- வாதத்தில் கெட்டிக்காரர்கள்
- மனப்பான்மை இல்லாதவர்கள்
மிதுனத்தில் சந்திரன் நிற்பதால் ஏற்படும் பலன்கள்
- இதில் பிறந்தவர்கள் சாஸ்திர ஞானம் உள்ளவர்கள்
- மேடைப்பேச்சில் சிறந்தவர்கள்
- கடின உழைப்பாளிகள்
- இசைத் துறையில் ஆர்வம் உள்ளவர்கள்
- சுகவாசி
- அடிக்கடி தோல்வியை சந்திக்க கூடிய நபர்கள்
- உள்ளுணர்வு மிக்கவர்கள்
- பிறரை சந்தோஷப்படுத்தி அதில் விருப்பமுள்ளவர்கள்
- சாஸ்த்ர ஞானம் உள்ளவர்கள்
- விடாமுயற்சி காரர்கள்
செவ்வாய் இருப்பதால் ஏற்படும் பலன்கள்
- குடும்பத்தின் மீது பற்றுள்ளவர்கள் எடுப்பான தோற்றம் உள்ளவர்கள்
- நல்ல உடற்கட்டும் சுறுசுறுப்பான தோற்றம் உள்ளவர்கள்
- படிப்பில் கெட்டிக்காரர்கள் அவசர முடிவை எடுப்பவர்கள்
- துணிச்சல் மிக்கவர்கள் பயன்படுத்துபவர்கள்
- சண்டை எண்ணமுடையவர்கள்
- தனது கொள்கைப்படி படக்கூடிய நபர்கள்
- தைரியமானவர்கள் ஆடம்பர வாழ்வு விரும்பக் கூடியவர்கள்
- எந்த ஒரு விஷயத்தையும் எளிதில் நம்பாதவர்கள்
ராகு இருப்பதால் ஏற்படும் பலன்கள்
- இசைத்துறையில் நல்ல புகழ் பெறக்கூடியவர்கள்
- ஜாதகருக்கு கவிதை, கட்டுரை, எழுத்துத்துறை இவற்றால் ஆதாயம் உண்டு
- ஜாதகன் பலரது உதவியை பெறக்கூடிய நபராக இருப்பார்
- கல்வியில் தடை, தொழில்களின் தடை
- காலி நிலத்தில் பிரச்சினை
- தோல் சம்பந்தமான வியாதிகள், போராட்டமான வாழ்க்கை
- தகவல் தொடர்பு தொழில் ஈடுபாடு
மிதுனத்தில் குரு இருப்பதால் ஏற்படும் பலன்கள்
- சிறந்த பேச்சாளர்கள்
- நல்ல உடல் வாகும் சாந்தமான முகமும் உள்ளவர்கள்
- சாஸ்திர ஞானம் உள்ளவர்கள்
- அன்பு, தயவு, மனிதாபிமானம், பண்பாடு போன்ற நற்குணங்களை உடையவர்கள்
- ராஜதந்திரமும், எடுப்பான தோற்றம் உள்ளவர்கள்
- பிறருக்கு நன்மை செய்வதில் ஆர்வம் உள்ளவர்கள்
- கவிதை கட்டுரை போன்றவற்றில் விருப்பமுள்ளவர்கள்
சனி இருப்பதால் ஏற்படும் பலன்கள்
- மெலிந்த தேகம் உடையவர்கள்
- கௌரவத்தை காப்பாற்ற கூடியவர்கள்
- அவதானமாக நடந்து கொள்ளக் கூடியவர்கள்
- இரசாயனம், பொறியியல், விஞ்ஞான துறைகளில் தேர்ச்சி மற்றும் ஈடுபடுபவர்கள்
- மனம் போன போக்கில் செயல்படக்கூடியவர்கள்
புதன் இருப்பதால் ஏற்படும் பலன்கள்
- இசைத்துறையில் நாட்டம் உள்ளவர்கள்
- பேரும் புகழும் தேடி வரும்
- பிறருக்குத் தீங்கு விளைவிக்க மாட்டார்கள்
- நாகரிகத்தையும், பண்பாட்டையும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்
புத்தக பிரியர்கள், பயணத்தை விரும்பக் கூடியவர்கள் - குறிக்கோளை அடைய கடும் முயற்சி செய்யக்கூடியவர்கள்
- ENT பிரச்சினை உண்டு
- காசநோய், இருமல் போன்ற பிரச்சினைகளால் அவதிப்படுவார்கள்
மேலும் படிக்க : ரிஷப ராசி காரகத்துவங்கள் மற்றும் பாவ பலன்கள்
மேலும் படிக்க : மேஷ ராசி காரகத்துவங்கள் மற்றும் பாவ பலன்கள்