சிம்ம ராசி காரகத்துவங்கள் மற்றும் பாவ பலன்கள்

சிம்ம ராசி

  • சிம்ம ராசி கால புருஷனுக்கு இது ஐந்தாவது ராசியாக வரக்கூடியது. இது ஒரு ஆண் ராசி. நெருப்பு ராசி. ஸ்திர ராசி. அதிபதி சூரிய பகவான், கிழக்கு திசையை குறைக்கக்கூடியது. பலகால் ராசி, பகலில் பலம் உடைய ராசி. மகம் 4 பாதங்களும், பூரம் 4 பாதங்களும் உத்திரம் முதல் பாதம் இந்த ராசியில் அமைந்துள்ளது. இதன் பாகை 120 முதல் 150 வரை உள்ளது.
  • லக்னாதிபதி சூரியன், சம்பாத்திய காரகன் மற்றும் ஆத்ம காரகன். எனவே ஒரு ஜாதகத்தில் கேந்திர, திரிகோண ஸ்தான ஸ்தானங்களில் பலம் பெறுவது ஜாதகருக்கு நன்மையை பயக்கும். சூரியன் நீசமாகவோ அல்லது 6,8,12 போன்ற ஸ்தானங்களிலோ மறையக்கூடாது அவ்வாறு மறைவதால் ஜாதகர் கடைசி வரை கஷ்டப்படக் கூடிய சூழ்நிலை உண்டாகும்.
  • இந்த ராசியில் எந்த ஒரு கிரகமும் உச்சம் நீசம் அடைவதில்லை. வேகமானவர்கள், ஆற்றல் மிக்கவர்கள், செல்வாக்கு உடையவர்கள், மேன்மை, நேர்மையான குணம், கம்பீரம், தானதர்மம் செய்யக்கூடியவர்கள், தாராள மனப்பான்மை உடையவர்கள், புதிய உத்திகளை கடைபிடிப்பவர்கள். கலை, ஓவியம், இசை, இலக்கியம் போன்றவற்றில் ஈடுபாடு மிக்கவர்கள்.  மரபுகளை விரும்பக் கூடியவர்கள், சாத்துவிக குணம் உடையவர்கள், நீதி நெறி தவறாதவன், காடு மலை போன்ற வற்றை விரும்பக்கூடிய. கடுமையாக உழைக்க கூடியவர்கள். வாழ்க்கை வெளிப்படையாக இருக்கும். போஜன பிரியர்கள்.
  • பச்சை, மஞ்சள், சந்தனம் போன்ற வண்ணங்களால் நன்மை உண்டு. ஞாயிறு, புதன், வியாழன் போன்ற நாட்களில் நன்மை உண்டு. ஆவணி, மார்கழி, புரட்டாசி போன்ற தமிழ் மாதங்களில் நன்மை உண்டு.

Table of Contents

பொதுவான காரகத்துவங்கள்

  • நெருப்பு ராசி
  • வறண்ட ராசி
  • கற்பனையுள்ள ராசி
  • அரசாங்க வீடு
  • ஷேர் மார்க்கெட் ஈடுபாடு
  • மலைகள்
  • தீ விபத்து
  • பாலைவனம்
  • மாமிசம்
  • முதுகுத்தண்டு
  • கற்பிணிப்பெண்
  • குழந்தைகள்
  • சீமந்தம் செய்தல்
  • மனசாட்சி
  • புத்தக அறிவு
  • அமானுஷ்ய அறிவு
  • தொப்புள், மேல்வயிறு, முதுகு
  • சிங்கம்
  • எருது
  • எலி
  • மயில்
  • உணவு தானியங்கள்
  • பழ ரசங்கள்
  • கொழுக்கட்டை
  • தேங்காய்
  • அரசு அலுவலகங்கள்
  • மலை பிரதேசங்கள்
  • குகைகள்
  • மேடான காட்டு பகுதிகள்
  • கற்பாறைகள் நிறைந்த இடங்கள்
  • வன விலங்குகள் உள்ள இடங்கள்

தொழில்கள்

  • அரசியல்
  • மருத்துவம்
  • அரசு வேலை
  • நிர்வாக துறை
  • நெருப்பு தொழில் சார்ந்த வேலைகள்
  • சமூக சேவை
  • நடிப்பு துறை
  • ஓவியத்துறை

நோய்கள்

  • இருதய நோய்
  • முதுகு வலி
  • முதுகு தண்டுவட நோய்
  • வாயு தொல்லை

சிம்ம ராசியின் பொதுவான குணங்கள்

  • சிவப்பு அல்லது தாமிர நிற உடல்
  • பெரிய தலை மற்றும் பிரகாசமான முட்டை வடிவ முக தோற்றம்
  • கம்பீரமான நடையை உடையவர்கள்
  • சம உயரம் உடையவர்கள்
  • அகலமான தோல்களை உடையவர்கள்
  • தெளிவாக பேசக்கூடியவர்கள்

சிறப்பான குணங்கள்

  • புதிய கண்டுபிடிப்பில் ஆர்வம்
  • தைரியம் , வீரியம் நிறைந்தவர்கள்
  • சுறுசுறுசுப்பானவர்கள்
  • வள்ளல் குணமுடையவர்கள்
  • அதிக பலமுடையவர்கள்
  • நீதியை கடைபிடிப்பவர்கள்
  • கள்ளம், கபடமில்லாதவர்கள்
  • வெளிப்டையானவர்கள்

மாற்றிக்கொள்ள வேண்டிய குணங்கள்

  • பொறுமையின்மை
  • பிறர் கருத்துக்கு மதிப்பு கொடுக்காதவர்கள்
  • கர்வமுடையவர்கள்
  • தற்பருமை உடையவர்கள்

பொதுவான பாவ பலன்கள்

1-ம் பாவம்

  • உருண்டையான முகம் உடையவர்கள்
  • அசைவ பிரியர்கள்
  • தற்பெருமை விரும்பிகள்
  • கம்பீரமான தோற்றம் உடையவர்கள்
  • பிறரிடத்தில் சரளமாகப் பேசக்கூடியவர்கள்
  • இருதயத்தில் தழும்பு உண்டு
  • கூட்டுத் தொழிலில் பிரச்சினை ஏற்படும்
  • சூடான உணவுகளை விரும்பக் கூடியவர்கள்
  • புலால் உணவை விரும்பி சாப்பிடுவார்கள்
  • திறமையானவர்கள்
  • முன்கோபி
  • துணிச்சலானவர்
  • நியாயமானவர்கள்
  • வாழ்வில் தோல்வி பெற்றாலும் இறுதியில் வெற்றி காணக் கூடியவர்கள்
  • குளிர்பானங்களை விரும்பக் கூடியவர்கள்
  • மழையில் நனைவதை விரும்பக் கூடியவர்கள்
  • பிறரை அடக்கி ஆள கூடியவர்கள்

2-ம் பாவம்

  • வாதத்தில் சேர்ந்தவர்கள்
  • ஜோதிட துறையில் சிறப்பான முன்னேற்றம் உண்டு
  • பிறரை அலட்சியப்படுத்தி அதனால் பிரச்சனை சந்திக்கக் கூடியவர்கள்
  • பெரிய குடும்பத்தில் நபராக இருப்பார்கள்
  • குடும்பத்தை வழிநடத்த கூடியவர்கள்
  • பண வரவிற்கு பஞ்சம் இல்லை
  • கண் சார்ந்த பிரச்சனைகள் உண்டு
  • வாக்கு பலிதம்
  • வாக்கால் தொழில்

3-ம் பாவம்

  • சகோதரர்கள் இடையே கருத்து வேறுபாடு உண்டு
  • இவரால் சகோதரர்களுக்கு ஆதாயம் உண்டு
  • தீவிரமாக முயற்சி செய்யக்கூடியவர்கள்
  • வாகன யோகமுண்டு
  • சீட்டு பிடிப்பதால் ஆதாயம் உண்டு
  • விலை உயர்ந்த பொருட்களை விரும்பக் கூடியவர்கள்
  • கமிஷன், காண்ட்ராக்ட் போன்ற தொழில்களால் ஆதாயம் உண்டு
  • சகோதர, சகோதரிகள் புகழ் உண்டு
  • ஷேர் மார்க்கெட் ஆதாயம் உண்டு
  • கலை,நாட்டியம், எழுத்து தொழில்களால் ஆதாயம்

4-ம் பாவம்

  • வீடு வாகனம் சொத்து பதவி உண்டு
  • சிறுவயதிலேயே வாகன வசதி ஏற்படும்
  • படிப்பில் தடை உண்டு
  • தந்தை மேல் அதிக பாசம் உடையவர்கள்
  • ஆரம்ப கல்வியில் தடை உண்டு
  • சிக்கனவாதி
  • சட்டத்தை மீறி வெற்றி காணக் கூடியவர்கள்
  • சுயநலவாதிகள்
  • தற்போது மாணவர்கள்
  • சொத்து, சுகம் உண்டு

5-ம் பாவம்

  • புத்திர பாக்கியம் உண்டு
  • திருமண யோகம் உண்டு
  • திருமணத்தால் தோழியின் ஏற்படும்
  • குலத்தொழில் சிறப்பு
  • குலதெய்வ வழிபாட்டில் தடை, குழப்பம் உண்டு
  • இரண்டு குலதெய்வம் உண்டு
  • குழந்தைகளுக்கு கஷ்டம் விபத்து உண்டு
  • பூர்வீக சொத்தில் பிரச்சினை உண்டு
  • அவற்றால் ஆதாயமும் இல்லை
  • தாத்தா வழியில் திருமணம் உண்டு
  • குழந்தை பிரிந்து வாழக்கூடிய சூழ்நிலை உண்டாகும்
  • மாமனாருக்கு கஷ்டம் கண்டம், விபத்து உண்டு
  • பிற்பகுதியில் குடும்ப பற்று குறையும்
  • பூர்வீக சொத்தில் வழக்கு
  • தாத்தா வழியில் ஜோதிடர் அல்லது குறிசொல்பவர்
  • திருமண தடை, தாமதம் உண்டு

6-ம் பாவம்

  • வயிறு சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிப்பு ஏற்படும்
  • மலச்சிக்கலுக்கு
  • அறுவை சிகிச்சை செய்யக்கூடிய சூழ்நிலை உண்டு
  • கடன் இருந்து கொண்டே இருக்கும்
  • இதயம் சார்ந்த பிரச்சனைகள் உண்டு
  • பங்காளி சண்டை உண்டு

7-ம் பாவம்

  • மனைவியுடன் கருத்து வேறுபாடு உண்டு
  • மணவாழ்வில் திருப்தி இருக்காது
  • வெளிநாட்டு வருமானம் உண்டு
  • மனைவி உத்தியோகம் செல்லக்கூடிய நபராக இருப்பார்
  • கூட்டு தொழில் முன்னேற்றம் தராது

8-ம் பாவம்

  • நீண்ட ஆயுள் உண்டு
  • கபத்தால் பிரச்சனை உண்டு
  • சொத்து உண்டு
  • LIC, PF போன்றவற்றால் ஆதாயம் உண்டு
  • திடீர் அதிர்ஷ்டம் உண்டு
  • வம்பு வழக்கு இவற்றால் பிரச்சினை ஏற்படும்
  • ஆன்மிக ஈடுபாடு உண்டு
  • வாழ்வின் பிற்பகுதியில் தனிமையில் வாழக்கூடிய சூழ்நிலை உண்டாகும்

9-ம் பாவம்

  • சிறு வயதிலேயே தகப்பனார் பிரியக் கூடிய சூழ்நிலை உண்டாகும்
  • தந்தையை ஆன்மீகவாதியாக இருப்பார்
  • தந்தையின் தொழில் செய்யக்கூடிய நபராக இருப்பார்
  • விவசாயத் தொழிலில் ஆதாயம் உண்டு
  • பிரபலமாகும் யோகம் உண்டு தந்தை உண்டு அதனால் பிரச்சனை ஏற்படும்
  • ஜாதகருக்கு யாத்திரை செல்லும் யோகம் உண்டு
  • நெருப்பு வழிபாடு யோகத்தை தரும்
  • தந்தையால் ஆதாயம் இல்லை

10-ம் பாவம்

  • விவசாயம், துணிக்கடை, பால் சார்ந்த தொழில்கள் ஆதாயம் உண்டு
  • நிதி சார்ந்த தொழில்கள், ஆசிரியர் போன்ற தொழில்கள் அமையும்
  • அரிசி, மளிகைக்கடை போன்றவற்றால் ஆதாயம் உண்டு
  • கமிஷன் சார்ந்த தொழிலில் ஆதாயம் உண்டு

11-ம் பாவம்

  • சங்கம், டிரஸ்ட் போன்றவற்றால் ஆதாயமுண்டு
  • எண்ணங்கள் ஈடேறும் பணம் சார்ந்த சிந்தனை
  • எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்
  • மூத்த சகோதர சகோதரிகளால் ஆதரவு உண்டு
  • சித்தப்பா அதனை உண்டு
  • நண்பர்களால் ஆதாயம் உண்டு
  • திட்டங்களை சிறப்பாக தீட்டி அதனால் வெற்றியடைய கூடியவர்கள்
  • வளர்ப்பு பிராணிகள் உண்டு

12-ம் பாவம்

  • பாவம் வெளிநாட்டு யோகம் உண்டு
  • குழந்தைகள் வெளிநாடு செல்லும் யோகம் உண்டு
  • தாய் தந்தை மீது அதிக பாசம் உடையவர்கள்
  • குட்டி தூக்கம் தூங்க கூடியவர்கள்

சிம்மத்தில் நவ கிரகங்கள் நிற்பதால் ஏற்படும் பலன்கள்

கேது நிற்பதால் ஏற்படும் பலன்கள்

  • ஆன்மீகத்தில் ஈடுபாடு ஏற்படும்
  • அரசு சார்ந்த வம்பு, வழக்கு உண்டு
  • தந்தைவழி சொத்துக்கள் மீது பிரச்சினை உண்டு

சுக்கிரன் நிற்பதால் ஏற்படும் பலன்கள்

  • வாழ்க்கைத் துணை சிறப்பாக அமையும்
  • தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ளக் கூடியவர்கள்
  • அவசர புத்தியால் நஷ்டத்தை அடைய கூடியவர்கள்
  • நண்பர்களால் பிரச்சனைகளை சந்திக்கக் கூடியவர்கள்
  • கம்பீரமானவன்
  • தன்னம்பிக்கை உள்ளவர்கள்

சூரியன் நிற்பதால் ஏற்படும் பலன்கள்

  • முரட்டு சுபாவம் உள்ளவர்கள்
  • ஸ்திரமான முடிவை எடுக்கக் கூடியவர்கள்
  • பெரும்பான்மையானவர்கள்
  • பேரும் புகழும் பெறக்கூடியவர்கள்
  • ஆன்மிகத்தில் ஈடுபாடு உள்ளவர்கள்
  • மாமிச பிரியர்கள்
  • பலசாலிகள்
  • சுதந்திரமாக முடிவெடுக்க கூடியவர்கள்
  • நிர்வாகத் திறமை மிக்கவர்கள்
  • மனிதாபிமானம் நிறைந்தவர்கள்
  • ராஜதந்திரம் அறிந்தவர்கள்

சந்திரன் நிற்பதால் ஏற்படும் பலன்கள்

  • வசீகரமான தோற்றம் உடையவர்கள்
  • மலை காடு போன்ற இடங்களுக்குச் செல்வது விருப்பமானவர்கள்
  • பெரிய நிலையை அடைய ஆசை உடையவர்கள்
  • எதிர்பார்த்த நிலையை அடையக் கூடிய சூழ்நிலை அமையாது
  • தைரியசாலிகள்
  • தாராள குணம் மிக்கவர்கள்
  • சிக்கனவாதி
  • வயிறு யோகமுண்டு

செவ்வாய் நிற்பதால் ஏற்படும் பலன்கள்

  • தானதர்மம் செய்யக்கூடியவர்கள்
  • எழுத்து வல்லுனர்கள்
  • ஜோதிடம் குறி சொல்லுதல் மாந்திரீகம் இவற்றில் வல்லுநர்கள்
  • பிறரை மதித்து நடக்கக் கூடியவர்கள்
  • அமைதியை விரும்பும் கூடியவர்கள்
  • சுதந்திர மனப்பான்மை உடையவர்கள்
  • ஞாபக சக்தி உள்ளவர்கள்
  • எடுத்த காரியத்தில் வெற்றி அடைய கூடியவர்கள்
  • உதவி செய்யக் கூடியவர்கள்
  • வயிறு சார்ந்த பிரச்சினையும் வாயுத் தொந்தரவு போன்ற பிரச்சினைகள் உண்டு

ராகு நிற்பதால் ஏற்படும் பலன்கள்

  • புத்திர பாக்கியம் ஏற்படும் தடை தாமதம் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும்
  • தந்தைக்கு கண்டம் பூர்வீக சொத்தில் பிரச்சனை
  • தந்தைக்கு வெளிமாநில வருமானமும் உண்டு வெளிநாட்டு வருமானம் உண்டு
  • அரசியலில் தந்தைக்கே பெரும் புகழும் உண்டு
  • நெருப்பில் கண்டம் உண்டு

குரு நிற்பதால் ஏற்படும் பலன்கள்

  • கம்பீரமானவன் சுறுசுறுப்பானவர்கள்
  • சாஸ்த்ர ஞானம் உள்ளவர்கள்
  • பகுத்தறிவுவாதிகள்
  • பரந்த மனப்பான்மை உள்ளவர்கள்
  • அன்பு கருணை குணம் கொண்டவர்கள்
  • முன் கோபக்காரர்கள் முன்னேற்றத்திற்காக கூடியவர்கள்

புதன் நிற்பதால் ஏற்படும் பலன்கள்

  • ஆடம்பரமான வாழ்க்கையை வாழ விரும்புகிறவர்கள் அதற்கான முயற்சிகளை எடுக்க கூடியவர்கள்
  • உலகம் சுற்றும் மனிதர்கள்
  • சுறுசுறுப்பு அற்றவர்கள்
  • மேடைப்பேச்சில் கெட்டிக்காரர்கள்
  • சொந்த முயற்சியால் முன்னுக்கு வரக் கூடியவர்கள்
  • அதிக ஞாபகசக்தி உள்ளவர்கள்
  • சுதந்திரமாக முடிவெடுக்கக் கூடியவர்கள்
  • நேர்மையானவர்கள்
  • தெய்வ பக்தி மிக்கவர்கள்
  • தான தர்மத்தில் நம்பிக்கை உடையவர்கள்
  • சிறுவயதிலேயே திருமணம்
  • கவிதை எழுதுதல் போதனை செய்த இவற்றில் ஆர்வம் மிக்கவர்கள்

சனி இருப்பதால் ஏற்படும் பலன்கள்

  • பிடிவாத குணமும் ஆணவம் மிக்கவர்கள்
  • பிறரை மதிக்காதவர்கள் முரட்டு சுபாவம் மிக்கவர்கள்
  • தன்னை நம்பி அவர்களுக்கு மோசம் செய்யக்கூடியவர்கள்
  • கடின உழைப்பாளிகள்
  • தொழிலாளிகள்
  • கதை கட்டுரை நாவல் போன்றவற்றில் ஈடுபாடு மிக்கவர்கள்
  • சிறிய விஷயங்கள் பெரிய முயற்சி செய்ய வேண்டியிருக்கும்
  • அரசு துறைகளில் பெரிய பதவிகளை வகிக்கக்கூடிய அவர்கள்

மேலும் படிக்க : கடக ராசி காரகத்துவங்கள் மற்றும் பாவ பலன்கள்

மேலும் படிக்க : மிதுன ராசி காரகத்துவங்கள் மற்றும் பாவ பலன்கள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top