தனுசுராசி காரகத்துவங்கள் மற்றும் பாவ பலன்கள்

Table of Contents

தனுசு ராசி

  • தனுசு ராசி கால புருஷனுக்கு இது ஒன்பதாவது ராசியாகும். இதன் பாகை 240 முதல் 270 வரை உள்ளது. இது உபய ராசி. நெருப்பு ராசி. ஆன் ராசி. இதன் அதிபதி குரு பகவான். இந்த ராசியில் மூலம் நட்சத்திரத்தின் 1,2,3,4 பாதங்களும், பூராடம் நட்சத்திரத்தில் 1,2,3,4 பாதங்களும், உத்திரம் நட்சத்திரத்தின் 1-ம் பாதமும் இந்த ராசியில் உள்ளன.
  • வில்லேந்திய மனிதனின் வடிவத்தை உடைய ராசி. இந்த ராசிக்காரர்கள் தன் வேலையை தானே செய்து முடிப்பவர்கள். தைரியம், கடின உழைப்பு, வேலையில் விருப்பம் போன்ற குணங்களை உடையவர்கள். வாழ்க்கையில் வெற்றி பெற்ற மனிதர்களாக திகழ்பவர்கள்.
  • அன்பு, கருணை, இரக்கம் போன்ற குணங்களை உடையவர்கள். வாழ்க்கையில் குரு ஸ்தானத்திற்கு உயரக்கூடிய நபர்கள். உபதேசம் செய்யக்கூடிய நிலையில் இருப்பவர்கள். எளிமையை விரும்பக் கூடியவர்கள். நம்பிக்கைக்கு உரிய நபர்கள். புத்திசாலிகள். அறிவாளிகள், நீதியும் நேர்மையும் கடைபிடிப்பவர்கள்.
  • நீலம், மஞ்சள், சிகப்பு, ஆரஞ்சு போன்ற நிறங்கள் நன்மைதரும். வியாழன், சனி, ஞாயிறு, வெள்ளி, செவ்வாய் போன்ற கிழமைகள் நன்மைகளைத் தரும். மார்கழி, பங்குனி, சித்திரை, ஆவணி, ஐப்பசி போன்ற தமிழ் மாதங்கள் நன்மையை தரும்.

பொதுவான காரகங்கள்

  • நெருப்பு ராசி
  • ஆஞ்சநேயர்
  • மஞ்சள் விநாயகர்
  • கோதண்ட ராமர்
  • சுய கௌரவம்
  • கோவில்கள், கோயில் தீர்த்தம்
  • நீண்ட தூர பயணம்
  • சேஃப்டி லாக்கர், பர்ஸ்
  • வெளிநாட்டு பயணம்
  • வேட்டி
  • எளிமையான தோற்றம்
  • பக்தி மார்க்கம்
  • இந்திரன்
  • இரட்டை தன்மை
  • வில், அம்பு, வில் வித்தை
  • போலீஸ் , ராணுவம்
  • கவரிங் நகை
  • பாரம்பரிய குணம்
  • காப்பீடு
  • போர் ஆயுதங்கள் (துப்பாக்கி, டாங்கிகள் )
  • அணு ஆயுதங்கள்
  • குரங்கு, நாய், யானை
  • தொடை பகுதி

உணவுப்பொருட்கள்

  • எள்
  • தயிர்வடை,லெஸ்ஸி
  • அவல்பொரி
  • அப்பம்
  • சுண்டல்
  • நெய்

இடங்கள்

  • கருவூலம்
  • போர்க்களம்
  • ஆயுத கிடங்கு
  • காவல் நிலையம்
  • நீதிமன்றம்
  • வங்கிகள்
  • ஆசிரமம்

தொழில்கள்

  • ஆன்மிக துறை
  • வங்கி சார்ந்த தொழில்
  • நீதி துறை
  • ஆயுத உற்பத்தி தொழில்
  • நிதி துறை
  • கல்வித்துறை
  • மர வியாபாரம்

நோய்கள்

  • தொடை வீக்கம்
  • தொடை வலி
  • தொடை அரிப்பு

பொதுவான குணங்கள்

தோற்றம்

  • சிவப்பான உடல்
  • முட்டை வடிவ முக தோற்றம்
  • பளிச்சிடும் கண்கள்
  • பருத்த வயிறு
  • சிரித்த முகம்

சிறப்பான குணங்கள்

  • இரக்கம், கருணை உடையவர்கள்
  • அன்பானவர்கள்
  • தாமாக முன்வந்து பிறருக்கு உதவுபவர்கள்
  • நல்ல எண்ணங்களை உடையவர்கள்
  • எளிமை , அடக்கம், பக்தி உடையவர்கள்
  • பகட்டு இல்லாதவர்கள்

மாற்றிக்கொள்ள வேண்டிய குணங்கள்

  • பயத்தால் அதிக மனத்துயரம் அடைவார்கள்
  • தீர்மானம் செய்ய இயலாதவர்கள்
  • அலட்சியம், வாக்கால் பிறரை புண்படுத்துதல்

பொதுவான பாவ பலன்கள்

1-ம் பாவம் தனுசு ராசியாக அமைவதால் ஏற்படும் பலன்கள்

  • உயரமான தோற்றம் உடையவர்கள்
  • உழைப்புக்கேற்ற வருமானம் உண்டு
  • அதிகம் சம்பாதிக்க விருப்பமுடையவர்கள்
  • நீண்ட கழுத்தை உடையவர்கள்
  • உயர்கல்வி உண்டு
  • உண்மையான நண்பர்கள் கிடைக்க மாட்டார்கள்
  • குடும்பத்தில் ஏதாவது ஏமாற்றத்தைத் தரும்
  • பேச்சில் அதிகாரம் உண்டு
  • நிலத்தை முடிக்காமல் உறங்க மாட்டார்கள் எடுத்த காரியத்தை செய்து முடிக்க வேண்டுமென்று ஆற்றுவார் ஆற்றல் உடையவர்கள்
  • கோபம் தணிந்த பின் உண்மையை உணர கூடியவர்கள்
  • உண்மையுடன் பழகக் கூடியவர்கள்
  • ரகசியம் தங்காது
  • வெளிப்படையாகப் பேசக் கூடியவர்கள் மற்றவர்களை பாதிக்கும் படி கோபத்தால் பேசக்கூடியவர்கள்

2-ம் பாவம் தனுசு ராசியாக அமைவதால் ஏற்படும் பலன்கள்

  • அறிவாளிகள்
  • தனக்கு தெரிந்ததை எல்லாருக்கும் கற்றுத் தரக் கூடியவர்கள்
  • தவறுகளைத் தட்டிகேட்பவர்கள் தீயவர் என்று தெரிந்தால் உறவை துண்டித்துக் கொள்வார்கள்
  • மொழி மீது பற்று உண்டு, புலமை உண்டு
  • விளையாட்டுகளில் விருப்பம் கொண்டு
  • தீர்க்கதரிசி
  • தற்பெருமை உடையவர்கள்
  • புகழ்ச்சிக்கு மயங்குவார்கள்
  • பெரிய குடும்பத்தில் பிறந்தவர்கள்
  • மணவாழ்வில் சில சங்கடங்கள் உண்டு
  • வாழ்க்கைத் துணைக்கு ஒரு மனக்குறை அல்லது உடல் குறை இருந்து கொண்டே இருக்கும்
  • கலப்புத் திருமணம் அல்லது காதல் திருமணம் சிறப்பைத்தரும்
  • வெறித்தனமான அமைப்பு உள்ளவர்கள்
  • குடும்பத்தில் இருப்பார்கள் பணப்பற்றாக்குறை இருக்காது பணம் வாழ்நாள் முழுவதும் கிடைக்கும்
  • மருத்துவ செலவு இருக்கும்
  • பூமி சம்பந்தமான செலவு உண்டு
  • கடனால் லாபம் கடன் தீரும் பிரச்சினை உண்டு
  • தவறான பழக்க வழக்கம் உண்டு

3-ம் பாவம் தனுசு ராசியாக அமைவதால் ஏற்படும் பலன்கள்

  • சகோதர சகோதரிகள் உண்டு
  • இளைய சகோதரர் ஒற்றுமை குறைவு
  • மூத்த சகோதரன் எனக்குமான நட்பு உண்டு
  • மாமனார் ஆதாயமுண்டு
  • கமிஷன் காண்ட்ராக்ட் பெரிய அளவில் ஆயிரம்
  • வாகன யோகமுண்டு
  • பரிசு பெறும் யோகமுண்டு
  • சீட்டாட்டம் போன்ற போன்றவை லாபம் தரும் ஆனால் அவற்றால் இழப்பு ஏற்படும்
  • ENT பிரச்சினை உண்டு
  • பாட்டு, கவிதை, கட்டுரை திறமைகள் உண்டு
  • புத்தகம் எழுதுவார்
  • ஒயிலாட்டம், கம்ப்யூட்டர் டைப்பிங் போன்றவற்றில் ஆர்வம் உண்டு
  • குறுகிய வெளிநாட்டு பயணம் அடிக்கடி ஏற்படும்
  • பிற்காலத்தில் ஜாமீன் போட்டு பணம் எடுக்க கூடிய சூழ்நிலை உண்டாகும்
  • எளிதில் ஏமாற கூடியவர்கள்

4-ம் பாவம் தனுசு ராசியாக அமைவதால் ஏற்படும் பலன்கள்

  • அம்மா பிள்ளை
  • அம்மாவுக்கு ஆயுள் கண்டம் சர்ஜரி உண்டு
  • இவர் மேல் அம்மாவுக்கு அதிக அன்பு
  • தாய்க்கு நீர் கண்டம் உண்டு
  • பதவி யோகம் உண்டு
  • வாடகை வருமானம் உண்டு
  • வாகன விபத்து உண்டு
  • கல்வியில் தடை வரும் தடைகளை மீறி முடித்துவிடுவார்

5-ம் பாவம் தனுசு ராசியாக அமைவதால் ஏற்படும் பலன்கள்

  • குலதெய்வம் இடம் மாறி இருக்கும்
  • குலதெய்வம் குழப்பம் உண்டு
  • உயரமான குலதெய்வம் உண்டு
  • ஆனால் வரிசை பிரச்சினை உண்டு
  • பூர்வீக சொத்து உண்டு
  • தாத்தா வழியில் காணாமல் போனவர் உண்டு
  • உயர்கல்வி உண்டு மருத்துவத்துறையில் நல்ல முன்னேற்றம் உண்டு
  • கட்டிடம் சார்ந்த துறைகளில் முன்னேற்றம் உண்டு

6-ம் பாவம் தனுசு ராசியாக அமைவதால் ஏற்படும் பலன்கள்

  • உத்தியோகத்தில் அதிக லாபம் உண்டு
  • சிறிய பதவி சிறுவயதில் சேர்ந்தாலும் பெரிய சாதனைகளை செய்யக்கூடியவர்கள்
  • பெரிய பதவி உண்டு
  • இரட்டை வருமானம் இருந்து கொண்டே இருக்கும்
  • கடன் தீரும்
  • எதிரியை வெல்ல கூடியவர்கள்
  • சர்க்கரை நோய் கிட்னி ஹார்மோன்கள் சார்ந்த தொந்தரவுகள் இருக்கும்

7-ம் பாவம் தனுசு ராசியாக அமைவதால் ஏற்படும் பலன்கள்

  • திருமணம் சார்ந்த பிரச்சனை உண்டு
    திருமணத்தில் பிரச்சனை உண்டு
    மனைவியால் அல்லது மனைவி வழியில் பிரச்சனைகளை சந்தித்து வழக்கு வரும்
    வயது வேறுபாடு அல்லது தோற்ற வேறுபாடு உண்டு
    மனைவியிடம் ஏதாவது குறை அல்லது நோய் இருக்கும்
    இருதார யோகம் ஒரு சிலருக்கு உண்டு

8-ம் பாவம் தனுசு ராசியாக அமைவதால் ஏற்படும் பலன்கள்

  • அடிக்கடி விபத்து கண்டம் உண்டு
  • நீர் சார்ந்த நோய் அல்லது விபத்து உண்டு
  • உயிர் சொத்து உண்டு
  • நம்பி ஏமாற கூடியவர்கள்
  • வாடிக்கையாளர்கள் வருவார்கள்
  • திடீர் யோகம் உண்டு
  • மந்திரம் மாந்திரீகம் போன்றவற்றில் ஈடுபாடு உண்டு

9-ம் பாவம் தனுசு ராசியாக அமைவதால் ஏற்படும் பலன்கள்

  • தந்தையும் புகழ் பெற்றவராக இருப்பார்
  • தந்தைக்கு வருமானத்தில் பிரச்சனை இருக்கும்
  • இவர் பிறந்தவுடன் தந்தைக்கு பதவி அந்தஸ்து போன்றவை குறையும்
  • வெளிநாட்டுப் பயணம் உண்டு
  • உண்மையான ஆன்மீகம் உண்டு
  • தானம் செய்யக் கூடிய நபராக இருப்பார்
  • தந்தைவழியில் இரு வருமானம் உண்டு
  • தந்தைக்கு தீய பழக்கம் உண்டு
  • தந்தைக்கு சங்கம் சார்ந்த பதவிகளில் இருக்கும்
  • விவசாயம் உண்டு
  • தந்தைவழியில் ஆண்வாரிசு பிரச்சனை உண்டு

10-ம் பாவம் தனுசு ராசியாக அமைவதால் ஏற்படும் பலன்கள்

  • கம்யூனிகேஷன் கட்டிடம் சுரங்கத் தொழில் போன்றவை உண்டு
  • புத்தகம் சார்ந்த தொழில்கள், நடனம் சார்ந்த தொழில்கள், கல்வி நிறுவனங்கள் நடத்துதல்,
    மருத்துவ ஆராய்ச்சி, விவசாய பண்ணை, வங்கி, நிதி போன்ற துறைகளில் தொழில் அமையும்
  • ஜவுளித் துறை சார்ந்த தொழில்கள் அல்லது தொழிற்சாலைகளில் தொழில்கள் அமையும்

11-ம் பாவம் தனுசு ராசியாக அமைவதால் ஏற்படும் பலன்கள்

  • பெண் நண்பர்கள் அதிகம்
  • ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்
  • சித்தப்பாவின் உதவி உண்டு
  • நீர் துறையில் புகழ் பெற்ற நபர்கள்
  • மூத்த சகோதரர்களுக்கு கடன் பிரச்சனை அல்லது சொத்து இழப்பு பிரச்சனை உண்டு

12-ம் பாவம் தனுசு ராசியாக அமைவதால் ஏற்படும் பலன்கள்

  • செய்வதற்காக விட்டுக் கொடுப்பார்
  • மைத்துனருக்கு விட்டுக் கொடுப்பார்
  • வெளிநாட்டில் செட்டில் ஆகும் யோகம் உண்டு
  • வெளிநாட்டு செட்டில்மென்ட் வருவதற்கு விருப்பம் இருக்காது
  • தூக்க பிரச்சனை உண்டு
  • தாமதமாக கூடியவர்கள்
  • குறட்டை பிரச்சனை இருக்கும்
  • கனவுத் தொல்லை உண்டு
  • சொத்து இழப்பு உண்டு

மேலும் படிக்க : விருச்சிக ராசி

தனுசு ராசியில் நவகிரகங்கள் நிற்பதால் ஏற்படும் பலன்கள்

கேது நிற்பதால் ஏற்படும் பலன்கள்

  • ஆன்மீக ஈடுபாடு உண்டு
  • உயர்கல்வியில் தடை உண்டு
  • தந்தையின் மணவாழ்வில் பிரச்னை உண்டு
  • தனிமையை விரும்பக்கூடியவர்கள்
  • மலசிக்கல் பிரச்னை உண்டு
  • தர்ம சிந்தனை உடையவர்கள்

சுக்கிரன் நிற்பதால் ஏற்படும் பலன்கள்

  • தைரியசாலிகள்
  • யாருக்கும் அடங்காதவர்கள்
  • மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர்
  • தான தர்மங்களை செய்யக்கூடியவர்கள்
  • உயர்ந்த தத்துவங்களை பேசுகிறார்கள்
  • குடும்ப வாழ்க்கையில் சந்தோஷமாக வரக்கூடியவர்கள்
  • அதிர்ஷ்டம் உள்ள குழந்தைகளை பெறக்கூடியவர்கள்
  • யாரையும் அதிகம் நம்பாதவர்கள்
  • ஒத்துப்போகும் தன்மை உள்ளவர்கள்
  • எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாதவர்கள்

சூரியன் நிற்பதால் ஏற்படும் பலன்கள்

  • பிடிவாதக்காரர்கள்
  • நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள்
  • மத ஈடுபாடு உள்ளவர்கள்
  • தனது காரியத்தை சாதித்துக் கொள்வார்கள்
  • பிறருக்கு உதவ கூடியவர்கள்
  • ஜீரண சக்தி குறைபாடு உண்டு
  • முன்கோபி
  • பிடிவாதக்காரர்
  • சகிப்பு தன்மை உள்ளவர்கள்

சந்திரன் நிற்பதால் ஏற்படும் பலன்கள்

  • சாந்தமான தோற்றம் உடையவர்கள்
  • ஓவியம் சங்கீதம் போன்ற கலைகளில் ஆர்வம் உள்ளவர்கள்
  • அறிவாளிகள்
  • நல்ல பேசும் குணம் உள்ளவர்கள்
  • நேர்மையானவர்கள்
  • திருமண வாழ்க்கை சிறப்பாக அமையும்
  • மனைவி மற்றும் குடும்பத்தார் குடும்பத்தில் உள்ள பெண்களால் முன்னேற்றம் உண்டு
  • முகஸ்துதிக்கு அடிமையாக கூடியவர்கள்
  • குழந்தைகள் அதிகமாக இருக்கும்
  • தாராளமான சொத்து இருக்கும்
  • எதிர்பார்க்காத பரிசுகள் வந்து சேரும்
  • எதையும் கண்டு பயப்பட மாட்டார்கள்

செவ்வாய் நிற்பதால் ஏற்படும் பலன்கள்

  • பெரிய பதவியை வகிக்க கூடியவர்கள்
  • நிறுவன தலைவர் பேராசிரியர் மந்திரி போன்ற பதவிகளை வகிக்கக்கூடிய
  • வெளிநாடு சென்று பணம் சம்பாதிப்பவர்கள்
  • பெருந்தன்மையால் அவர்கள் மறைத்து பேசாதவர்கள்
  • நேர்மையானவர்கள்
  • கௌரவத்துடன் நடப்பவர்கள்
  • சில சமயம் ஒவ்வாத காரியங்களை செய்யக் கூடியவர்கள்
  • துல்லியமாக எடை போடக் கூடியவர்கள்
  • அவசர புத்தி உள்ளவர்கள்
  • சகிப்புத்தன்மை இல்லாதவர்கள்
  • வீண் சண்டைக்கு போகக்கூடியவர்கள்
  • கோர்ட் விவகாரங்களில் அடிக்கடி மாற்றிக் கொள்வார்கள்
  • அதிக குழந்தைகளை இருக்காது

ராகு நிற்பதால் ஏற்படும் பலன்கள்

  • தந்தைக்கு விபத்து/கண்டம் உண்டு
  • மதமாற்றம் சார்ந்த எண்ணம் உண்டு
  • வெளிநாடு சென்று பொருள் எட்டும் யோகம் உண்டு
  • யோகா-தியானம் போன்றவற்றில் ஈடுபாடு உண்டு

குரு நிற்பதால் ஏற்படும் பலன்கள்

  • செல்வந்தர்கள் உள்ளவர்கள்
  • பெருந்தன்மை உடையவர்கள்
  • அதிக சொத்துக்களை உடையவர்கள்
  • தான தர்மத்தில் விருப்பமுள்ளவர்கள்
  • நிர்வாகத்திறமை உள்ளவர்கள்
  • கலை உணர்வு மிக்கவர்கள்
  • வாக்குவாதத்தில் திறமையானவர்கள்
  • தனது பொறுப்பை சிறப்பாக செய்யக்கூடியவர்கள்
  • மனம் வாக்கு சித்தி உள்ளவர்கள்
  • பொறாமை குணமும், பொறுமையும் உள்ளவர்கள்
  • சிறிய தோல்விகளைக் கண்டு அஞ்ச மாட்டார்கள்

சனி நிற்பதால் ஏற்படும் பலன்கள்

  • பேரும் புகழும் அடைய கூடியவர்கள்
  • அமைதியை விரும்புபவர்கள்
  • நன்றி உள்ளவர்கள்
  • அதிக குழந்தைகளை பெறக்கூடியவர்கள்
  • மனைவியுடன் ஒத்துப்போகும்
  • உபசரிக்கும் தன்மை உள்ளவர்கள்
  • சுய முயற்சியால் முன்னுக்கு வந்தவர்கள்
  • சுலபமாக எந்த காரியத்தையும் சமாளிக்க கூடியவர்கள்
  • தொழிலில் முன்னேற்றம் காணக் கூடியவர்கள்
  • மனைவியால் பேரும் புகழும் அடைய கூடியவர்கள்
  • அரசியலில் பெரிய பதவியை அடைய கூடும்

புதன் நிற்பதால் ஏற்படும் பலன்கள்

  • எதையும் ஆராய்ந்து பார்க்க கூடியவர்கள்
  • பணக்காரர்கள்
  • கௌரவமான நடந்துகொள்வார்கள்
  • தாராள மனப்பான்மை உள்ளவர்கள்
  • அவர்கள் நம்பிக்கை உள்ளவர்கள்
  • சுயநலக்காரர்கள் எடுத்த காரியத்தை முடிக்காமல் விட மாட்டார்கள்
  • மருத்துவர் அறுவை சிகிச்சை நிபுணர் போன்ற தொழில்கள் சிறப்பாக அமையும்
  • புராணங்கள் மற்றும் கதைகள் ஈடுபாடு உள்ளவர்கள்
  • விடாமுயற்சி உள்ளவர்கள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top