மீன ராசி காரகத்துவங்கள் மற்றும் பாவ பலன்கள்

Table of Contents

மீன ராசி

மீன ராசி கால புருஷனுக்கு இரண்டாவது ராசியாகும். இதன் பாகை 330 முதல் 360 வரை உள்ளது. இது ஒரு நீர் ராசி. உபய ராசி. இரட்டைப்படை ராசி. பெண் ராசி.
இரட்டை மீனின் வடிவத்தை உடையது. இந்த ராசியில் பூரட்டாதி நட்சத்திரத்தின் 4ம் பாதமும், உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 1, 2, 3, 4 பாதங்களும்
ரேவதி நட்சத்திரத்தில் 1, 2, 3, 4 பாதங்களும் உள்ளன.

இந்த ராசிக்காரர்கள் உண்மையானவர்கள் வீரம் உள்ளவர்கள் செல்வாக்கு உள்ளவர்கள். தர்மம் செய்யும் எண்ணம் உள்ளவர்கள். ஆன்மீக ஈடுபாடு உள்ளவர்கள்.
அமைதியை விரும்பும் கூடிய நபர்கள். பழக்கவழக்கங்களை மதிக்கக் கூடியவர்கள். நுட்பமானவன். அன்பு, கருணை, இரக்கம், மனிதாபிமானம் போன்ற குணங்களை உடையவர்கள். பண்டைய ஆன்மீக நூல்களைப் படிக்க விருப்பமுள்ளவர்கள். அதிகமாக செலவு செய்யக் கூடியவர்கள். மதப்பற்று உடையவர்கள். ஒரு விஷயத்தையும் ஆராய்ந்து பின்னே அதனை ஏற்றுக் கொள்ளல். எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள்.

திங்கள் வியாழன், செவ்வாய் போன்ற கிழமைகள் நன்மை தரும். வெண்மை, மஞ்சள், சிவப்பு போன்ற நிறங்களும், சித்திரை, பங்குனி, ஆடி, கார்த்திகை போன்ற தமிழ் மாதங்ககளும் நன்மையைத் தரும்.

பொதுவான காரகத்துவங்கள்

  • நீர் ராசி
  • உபய ராசி
  • மௌன ராசி
  • காம தேனு
  • சயன பெருமாள்
  • மதுரை மீனாட்சி
  • கடலில் இருந்து கிடைக்கும் பொருட்கள்
  • பூஜைக்குரிய பொருட்கள்
  • புத்தகம்
  • விளம்பரம்
  • மங்கள காரியங்கள்
  • நாடோடி
  • ஜெயில்
  • கணவன் மனைவி பிரிவு
  • குடும்ப பாரம்
  • இரு தாரம் யோகம்
  • மளிகை கடை (பலசரக்கு)
  • இரட்டை எண்ணம்
  • ஐஸ்வர்ய யோகம்
  • அறிவானது
  • இயற்கையிலேயே வாக்கு பலமுள்ள ராசி
  • கற்பனை உள்ள ராசி
  • நீரோட்டம்
  • வெளிநாட்டு பயணம்
  • சுடுகாடு
  • எதிர்பாராத விபத்து
  • ஏமாற்றம்
  • திவால் ஆகுதல்
  • நஷ்டம்
  • அவமானம்
  • ஊரை விட்டு ஓடுதல்
  • தற்கொலை செய்தல்
  • ஜோதிட அறிவு உள்ள ராசி
  • கப்பல், தோணி, படகு
  • கடல் விலங்குகள்(திமிங்கலம், டால்பின்)
  • முத்து
  • பசு
  • யானை
  • கால்விரல்
  • பாதம்

உணவுப்பொருட்கள்

  • லட்டு
  • புளியோதரை
  • வாழை, கொய்யா

இடங்கள்

  • கடற்கரை
  • நதிக்கரை
  • குளக்கரை

தொழில்கள்

  • கப்பற்படை
  • நீர்நிலைகள் சார்ந்த வேலைகள்
  • ஆன்மீகம்
  • நீதித்துறை
  • வங்கி பணி
  • கல்வி துறை
  • மருத்துவம்
  • ஏற்றுமதி, இறக்குமதி தொழில்கள்
  • உணவுத்தொழில்கள்
  • கலைத்தொழில்
  • குளிர்பான தொழில்கள்

நோய்கள்

  • பாத வலி
  • பாத வீக்கம்
  • பாத வெடிப்பு

மேலும் படிக்க : கும்ப ராசி

மீன ராசியின் பொதுவான குணங்கள்

தோற்றம்

  • அழகான முட்டை வடிவ முகத்துடன் கூடிய மாநிற உடல்
  • அமைதியுடன் தோற்றம்
  • பெரிய தலை மற்றும் வட்ட வடிவ தோளை உடையவர்கள்
  • சராசரி உயரம் உடையவர்கள்
  • அழகான கண்கள்
  • வேகமான பேச்சு மற்றும் நடை உடையவர்கள்

சிறப்பான குணங்கள்

  • நீதி, நேர்மையை கடைபிடிப்பவர்கள்
  • அன்பானவர்கள்
  • மென்மையானவர்கள்
  • குறிக்கோளை உடையவர்கள்
  • பயணத்தில் ஆர்வம்
  • உள்ளுணர்வு உள்ளவர்கள்

மாற்றிக்கொள்ள வேண்டிய குணங்கள்

  • முடிவெடுக்க தயங்குவார்கள்
  • தன்னம்பிக்கை இல்லாதவர்கள்
  • சுயநலம்
  • ஏமாற்றும் குணம்

மீன ராசியின் பொதுவான பாவ பலன்கள்

1-ம் பாவம் மீன ராசியாக அமைவதால் ஏற்படும் பலன்கள்

  • பளபளப்பான மேனி உடையவர்கள்
  • பிறர்க்கு உதவி செய்ய விருப்பம் உண்டு
  • மாநிலம் உடையவர்கள்
  • நிதானமானவர்கள்
  • கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று இருப்பவர்கள்
  • நம்பிக்கைக்குரியவர்கள்
  • பெருந்தன்மை அவர்கள்
  • சகஜமாக அனைவரிடத்திலும் பழகக்கூடியவர்
  • பொறுப்பை ஏற்க தயங்குவது
  • ஞாபகசக்தி அதிகம் உடையவர்கள்
  • பிறரை மன்னிக்கும் பக்குவம் உடையவர்கள்
  • எந்த ஒரு காரியத்திலும் சாதுர்யமாக செயல்பட்டு வெற்றி பெறக் கூடியவர்
  • சுகவாசி

2-ம் பாவம் மீன ராசியாக அமைவதால் ஏற்படும் பலன்கள்

  • சிரிப்பால் அனைவரையும் தன்வசப்படுத்த கூடியவர்
  • சாமர்த்தியசாலி
  • விட்டுக் கொடுத்து காரியத்தை சாதிப்பவர்கள்
  • நடுநிலையாளர்கள்
  • நேர்மையானவர்கள்
  • குடும்பத்தில் பிறந்த பின் வளர்ச்சி ஏற்படும்
  • பல் பிரச்சனை உண்டு
  • கண்ணாடி அணிவார்கள்
  • குடும்பத்தில் ஆசிரியர் அல்லது ஆசிரியர் வேலைக்கு செல்பவர்கள் உண்டு
  • சீருடை பணி துறையில் உள்ளவர்கள் குடும்பத்தில் உண்டு
  • உணவு, மருத்துவம், இன்ஜினியரிங், காண்ட்ராக்ட் துறை சார்ந்த வருமானம் உண்டு
  • இவர்கள் பெரும்பாலும் கடைசிப் பிள்ளையாக இருப்பார்கள்

3-ம் பாவம் மீன ராசியாக அமைவதால் ஏற்படும் பலன்கள்

  • சகோதர சகோதரிகள் உண்டு
  • செல்லப் பிள்ளையாக இருப்பார்கள்
  • கம்யூனிகேஷன் துறைகளில் சிறப்பு
  • அதிகமாக பேச மாட்டார்கள்
  • குடும்பத்தில் தற்கொலை முயற்சி செய்தவர்கள் உண்டு
  • ஜாதகருக்கு தற்கொலை எண்ணம் உண்டு
  • மாமனார் வழியில் துர்மரணம் இருக்கும்
  • அத்தையின் மணவாழ்வு சரி இருக்காது
  • வாகன யோகமுண்டு பத்திர பிரச்சினை உண்டு
  • பெண்களுக்கு ஜாமுன் படுவதால் பிரச்சினை ஏற்படும்
  • தீய பழக்கம் உண்டு அதனால் பாதிப்பு ஏற்படும்

4-ம் பாவம் மீன ராசியாக அமைவதால் ஏற்படும் பலன்கள்

  • தாயார் ஆதரவு உண்டு
  • தாயாருக்கு பிற்பாதியில் உடல் நலம் பாதிப்பு ஏற்படும்
  • சுகவாசி
  • கல்வி யோகம் உண்டு
  • வெளிநாட்டு கல்வி சிறப்பு தரும்
  • கலை, விஞ்ஞானம், உடற்கூறு ஆராய்ச்சி இவற்றில் ஆர்வமுண்டு
  • ஆரம்பத்தில் நல்ல உத்தியோகம் கிடைக்கும்
  • கடன் வாங்கி வீடு கட்டுவதால் தொல்லைக்கு ஆளாக நேரிடும்
  • சிக்கனமாக வீடு கட்டுவது பிரச்சினைகளைக் குறைக்கும்
  • தாயாருக்கு கண்டம் உண்டு, நீரில் கண்டம் உண்டு

5-ம் பாவம் மீன ராசியாக அமைவதால் ஏற்படும் பலன்கள்

  • முதல் குழந்தையால் பிரச்சனை உண்டு
  • முதல் குழந்தை சிறப்பாக இருக்கும்
  • பெண் குழந்தை பிறந்தாலும் ஆண் குழந்தை போல் வளர்ப்பார்கள்
  • குழந்தை பிறப்பில் தாமும் உண்டு
  • பூர்வீக சொத்து கிடைக்கும் ஆனால் அதை விட்டு புதிய சொத்து ஏற்படுத்துவார்
  • காதல் உண்டு அதனால் வெற்றியும் உண்டு
  • குலதெய்வம் பெண் தெய்வமாக இருக்கும்
  • இடம் மாறி வந்ததாக இருக்கும் பலி கொடுக்கும் தெய்வமாக இருக்கும்
  • தாத்தா மன பாதிப்பு உள்ளவர்
  • தாத்தா வழியில் இருதார யோகம் உண்டு
  • தாத்தாவுக்கு வருமானம் சரியாக இருக்காது
  • தாய்மாமன் அரசு பணியில் இருப்பார்

6-ம் பாவம் மீன ராசியாக அமைவதால் ஏற்படும் பலன்கள்

  • உத்தியோகம் அரசு பணி, அரசு ஒப்பந்தகாரர் முதலிய தொடர்புகள் உண்டு
  • கல்வி சார்ந்த துறைகள் வருமானம் உண்டு
  • மருத்துவம் சார்ந்த துறைகளில் ஆர்வம் உண்டு
  • மஞ்சள்காமாலை, காய்ச்சல், தலைவலி முதுகெலும்பு, பிரச்சனை உண்டு
  • அரசாங்க வழக்கு உண்டு
  • ஒரு நாளாவது காவல் நிலையம் செல்லும் சூழ்நிலை உண்டாகும்
  • வாடகை வருமானம் உண்டு
  • அரசாங்க குடியிருப்பு கிடைக்கும் மாடி வீடாக அமையும்
  • தந்தையே எதிரி போல் நடந்து கொள்வார்
  • வீட்டில் திருடு போகும்
  • தீ விபத்து நடக்கும்
  • குழந்தைகளுக்கு அரசாங்க உத்தியோகம் உண்டு

7-ம் பாவம் மீன ராசியாக அமைவதால் ஏற்படும் பலன்கள்

  • களத்திரம் தன்னை விட வசதியாக இடத்தில் இருந்து வரும்
  • படித்த அழகான களத்திரம் அமையும்
  • எந்த விஷயத்திற்கும் யோசித்து செயல்படுவார்
  • கல்வியில் தடை உண்டு
  • கடன் உண்டு நீண்ட நாட்களாக இருக்கும்
  • ஜாதகருக்கு உடல் அல்லது வைரஸ் மனநோய் கொண்டு
  • தொழில் கடன் எளிதில் கிடைக்கும்
  • களத்திர வழியில் சகோதரர் இறப்பு உண்டு
  • பத்திர பிரச்சினை உண்டு
  • வெளிநாட்டு யோகம் உண்டு
  • மாமனார் மாமியார் வகையில் தொல்லைகள் உண்டு

8-ம் பாவம் மீன ராசியாக அமைவதால் ஏற்படும் பலன்கள்

  • ஜாதகர் நீண்ட ஆயுளை உடையவர்
  • உயிர் சொத்து உண்டு
  • திடீர் அதிர்ஷ்டம் உண்டு
  • மறைமுக வருமானம் உண்டு
  • மர்ம ஸ்தானங்களில் பிரச்சினை உண்டு
  • கிட்னி சம்பந்தமான பிரச்சினை இருக்கும்
  • உயில் சொத்து நிலைப்பதில்லை
  • இன்சூரன்ஸ் லாபம் உண்டு
  • MLM போன்றவற்றில் ஏமாற்றமே மிஞ்சும்
  • கருப்பையில் நீர்க்கட்டி சமமான பிரச்சனை உண்டு

9-ம் பாவம் மீன ராசியாக அமைவதால் ஏற்படும் பலன்கள்

  • தந்தையின் வருமானம் உண்டு
  • தந்தையின் சொத்துக்கள் கிடைக்கும்
  • தந்தைக்கு அரசாங்கம் அரசியல் மருத்துவம் பெரிய நிறுவனங்களில் பணிபுரியும் அமைப்பு உண்டு
  • அதன் மூலம் வருமானம் உண்டு
  • ஆசிரியர் ஜோதிடம் உள்ள குடும்பம்
  • தந்தைக்கு விபத்து உண்டு
  • தந்தைக்கு இரண்டு வருட வருமானம் உண்டு
  • தந்தைக்கு மின்சாரம் அல்லது தீவிபத்தில் காயம் உண்டு
  • தந்தை ஊரின் முக்கிய மனிதராக இருப்பார்
  • தந்தைவழியில் காணாமல்போனவர்கள் உண்டு
  • தந்தை வழியில் கண்டு தந்தையின் சொத்து உண்டு
  • ஜாதகம் சொத்துக்களை சகோதரர்களுக்கு விட்டுக் கொடுத்து விட்டு தனிமையில் வாழ்வார்கள்

10-ம் பாவம் மீன ராசியாக அமைவதால் ஏற்படும் பலன்கள்

  • பொறியியல் மருத்துவம் நீதித்துறை போஸ்ட் ஆபீஸ் ஆடிட்டர்
  • மத சம்பந்தப்பட்ட ஆசிரியர், போக்குவரத்துத்துறை, நகை கடை, புத்தகங்கள் மூலம் வருமானம் உண்டு
  • சினிமா துறையில் டிஸ்ட்ரிபியூட்டர் வருமானம்
  • மாமியார் பிரச்சனை இருந்து கொண்டே இருக்கும்
  • மாமியாரால் பிரச்சனை உண்டு
  • பதவி உயர்வு அடிக்கடி உண்டு
  • எங்கு போனாலும் தலைமைப்பதவி கொண்டு

11-ம் பாவம் மீன ராசியாக அமைவதால் ஏற்படும் பலன்கள்

  • மூத்த சகோதரர, சகோதரிகள் உண்டு
  • சகோதர, சகோதரிகளுக்கு கல்வியில் தடை உண்டு
  • தடையை மீறி படிப்பார்கள்
  • இவரின் உதவி அவர்களுக்கு கிடைக்கும்
  • ஜாதகருக்கு ஆசை நிறைவேறுவதில் போராட்டம் உண்டு
  • நண்பர்கள் சரியாக அமைய மாட்டார்கள்
  • நண்பர்களுக்கும், சகோதரர்களுக்கும் வீட்டுக்கு தெரியாமல் உதவி செய்வார்கள்

12-ம் பாவம் மீன ராசியாக அமைவதால் ஏற்படும் பலன்கள்

  • தூக்கம் நன்றாக வரும்
  • வெளிநாட்டு யோகம் உண்டு
  • சேமிப்பு உண்டு
  • காலில் பிரச்சனை உண்டு
  • காலில் வெடிப்பு உண்டு
  • தாம்பத்திய உறவில் பிரச்சினை உண்டு

மீன ராசியில் நவகிரகங்கள் நிற்பதால் ஏற்படும் பலன்கள்

கேது நிற்பதால் ஏற்படும் பலன்கள்

  • காலி மனை சார்ந்த பிரச்சனை உண்டு
  • காலில் பிரச்சனை உண்டு
  • தூக்க பிரச்சனை உண்டு
  • காதல் உண்டு
  • அரசாங்கத்திற்கு தண்டம் கட்டவேண்டி வரும்

சுக்கிரன் நிற்பதால் ஏற்படும்

  • நன்கு படித்தவர்கள்
  • அளவாக பேசக்கூடியவர்கள்
  • உணவிலும், உடையிலும் அதிக கவனத்தை செலுத்த கூடியவர்கள்
  • கூச்ச சுபாவம் நிறைந்தவர்கள்
  • உயர் பதவியை வகிக்க கூடியவர்கள்
  • வசனத்தை விரும்பக் கூடியவர்கள்
  • நல்ல புகழை உடையவர்கள்
  • நேர்மையானவர்கள்
  • அடக்கம் உள்ளவர்கள்
  • பொறுப்பானவர்கள்
  • அதிக சொத்துக்கள் உள்ளவர்கள்
  • சுகபோக வாழ்வில் அதிக விருப்பம் உடையவர்கள்

சூரியன் நிற்பதால் ஏற்படும் பலன்கள்

  • அமைதியை விரும்புபவர்கள்
  • சுகத்தை விரும்பாதவர்கள்
  • சுற்றுப்புறத்தை பகைத்துக் கொள்ளக் கூடியவர்கள்
  • எதிர்காலத்தை அறியும் திறமை உள்ளவர்கள்
  • வீண் வம்புக்கு போகாதவர்கள்
  • பாட்டு, சங்கீதம் இவற்றில் ஈடுபாடு உள்ளவர்கள்
  • எதிலும் லாபம் இல்லாமல் செய்யமாட்டார்கள்

சந்திரன் நிற்பதால் ஏற்படும் பலன்கள்

  • மனைவியிடம் ஆழ்ந்த அன்பு உள்ளவர்கள்
  • உடற்கட்டு உள்ளவர்கள்
  • மேன்மையான வாழ்வு வாழக்கூடியவர்கள்
  • நல்ல சரீரம் உள்ளவர்கள்
  • ஆடம்பரம் விரும்பமாட்டார்கள்
  • குடும்பத்தை பற்றி கவலைப்படாமல் இருப்பார்கள்

செவ்வாய் நிற்பதால் ஏற்படும் பலன்கள்

  • குடும்பத்தின் மீது பாசம் உள்ளவர்கள்
  • ஒரு காரியத்தை முடிக்காமல் நிம்மதியாக இருக்க முடியாது
  • வாழ்க்கையில் தோல்விகள் அதிகமாக காணக் கூடியவர்கள்
  • நன்றி உடையவர்கள்
  • யாரையும் நம்ப மாட்டார்கள்
  • சோம்பேறித்தனம் மிக்கவர்கள்
  • கோடீஸ்வரர்கள்
  • தான தர்மங்களை செய்யக்கூடியவர்கள்
  • மிகப்பெரிய பதவிகளை வகிக்க கூடியவர்கள்

ராகு நிற்பதால் ஏற்படும் பலன்கள்

  • ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டு
  • பிறரை எளிதில் நம்புவதால் ஏமாற்றம் உண்டு
  • ஜோதிடத்தில் ஞானம் உண்டு
  • காலில் பிரச்சனை உண்டு
  • சுப விரயம் உண்டு

குரு நிற்பதால் ஏற்படும் பலன்கள்

  • தெய்வ பக்தி உள்ளவர்கள்
  • சுநலமிக்கவர்கள்
  • அரசியலில் ஆழ்ந்த ஈடுபாடு உள்ளவர்கள்
  • ஏமாளிகள்
  • சாந்தமானவர்கள்
  • சீதள நோய்களால் அவதி உண்டு

சனி நிற்பதால் ஏற்படும் பலன்கள்

  • கடவுள் அருளை பெற்றவர்கள்
  • மனக் கோட்டை கட்டுபவர்கள்
  • சுய முயற்சியால் முன்னேற்றம் அடைகிறார்கள்
  • திட்டமிட்டு செய்யக்கூடியவர்கள்
  • பணக்கார வாழ்வில் திருப்தி இல்லாதவர்கள்
  • நம்பிக்கையை ஒரே மனைவியை உடையவர்கள்
  • மாந்திரீகம் தந்திரம் இவற்றில் கெட்டிக்காரர்கள்
  • பல தொழில்களை ஒரே சமயத்தில் செய்யக்கூடியவர்கள்

புதன் நிற்பதால் ஏற்படும் பலன்கள்

  • தெய்வ பக்தி உள்ளவர்கள்
  • பெரியவர்களை வயது முதிர்ந்தவர்கள் மதிக்கக் கூடியவர்கள்
  • அல்ப புத்தி உள்ளவர்கள்
  • சிலசமயம் அசட்டுத்தனமாக நடந்து கொள்வார்கள்
  • ஆர்வமுள்ளவர்கள்
  • தற்பெருமை உள்ளவர்கள்
  • வியாபாரத்தில் கெட்டிக்காரர்கள்
  • வாய்ப்புகளை நழுவ விட்டுவிடுவார்கள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top