அடிப்படை ஜோதிடம் – 2
இந்த அடிப்படை ஜோதிடம் – 2ல் பஞ்சாங்கம் சார்ந்த அடிப்படை விளக்கங்களை காணலாம்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களை உடையது. அதாவது பஞ்ச + அங்கம் = பஞ்சாங்கம். பஞ்ச என்றால் ஐந்து, அங்கம் என்றால் உடல், ஐந்து அங்கங்களை உடையது என பொருள்படும். வாரம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் இந்த ஐந்து அங்கங்களை பற்றி கூறுவதே பஞ்சாங்கம்.
வாரம்
வாரம் பஞ்சாங்கத்தில் முதல் அங்கமாக வருவது. வாரம் என்பது கிழமைகளை குறிக்கும். ஞாயிறு முதல் சனி முடிய உள்ள வார கிழமைகளை குறிப்பதாகும் ராகு கேது தவிர மற்ற அனைத்து கோள்களுக்கும் கிழமைகள் உள்ளன. ஒவ்வொரு கிழமையும் அந்த அதிபதியின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.
கிழமைகளில் பிறந்தவர்களின் பலன்கள்
ஞாயிற்றுக்கிழமை
பலசாலி மாநில தேகம் உடையவர் உஷ்ண தேகம் உடையவர் கோபம் மிக்கவர் கர்வம் உள்ளவர் தானதர்மம் செய்யக்கூடியவர்.
திங்கட்கிழமை
உலகோடு ஒத்து வாழக்கூடியவர் அரசு வேலையில் இருக்க கூடியவர் பிறரோடு இனிமையாகப் பழகக் கூடியவர். இன்ப துன்பங்களை சமமாக கருதுபவர்.
செவ்வாய்க்கிழமை
ஆணவம் பிடிவாதம் விபத்துகளை சந்திக்கக் கூடியவர் விவசாயத்தில் ஆர்வம் உள்ள வரும்.
புதன்கிழமை
இளமையான தோற்றத்தை உடையவர்களாக இருப்பார்கள். மென்மையாக பேசக்கூடியவர்கள். கலைகளில் விருப்பமுடையவர்கள் நற்குணங்களை உடையவர்கள்.
வியாழக்கிழமை
நல்ல கல்வி கற்றவர்கள். குரு ஸ்தானத்தில் இருப்பவர்கள். அறிவுரை மற்றும் வழிகாட்டியாக உள்ளவர்கள். பிறரால் மதிக்கப்படுபவர்.
வெள்ளிக்கிழமை
சகஜமாக பழக கூடியவர்கள். நற்குணம் மிக்கவர்கள். நேர்மையான முறையில் வாழ்க்கையில் நடக்கக் கூடியவர்கள்.
சனிக்கிழமை
இளமையான தோற்றத்தை உடையவர்கள், சோம்பேறித்தனம் உடையவர்கள்.
திதி
பஞ்சாங்கத்தின் இரண்டாவது அங்கம் திதியாகும். திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரத்தை குறிக்கக்கூடியது. அதாவது சூரியனிலிருந்து ஒவ்வொரு 12 பாகை சந்திரன் நகரக்கூடிய தூரம் திதியாகும். இதில் அமாவாசை முதல் பௌர்ணமி வரை உள்ள திதிகள் வளர்பிறை திதிகள்(சுக்லபட்ஷம் ) எனவும் , பௌர்ணமி முதல் அமாவாசை வரை உள்ள திதிகள் தேய்பிறை திதிகள்(கிருஷ்ணபட்ஷம்) எனவும் மொத்தம் 30 திதிகள் உள்ளன.
திதிகள்
பிரதமை
துவிதியை
திருதியை
சதுர்த்தி
பஞ்சமி
சஷ்டி
சப்தமி
அஷ்டமி
நவமி
தசமி
ஏகாதசி
துவாதசி
திரயோதசி
சதுர்த்தசி
பௌர்ணமி/அமாவாசை
திரியில் பிறந்தவர்களின் தன்மைகள்
பிரதமை திதி
செல்வ வளம் மிக்கவர்கள், தானதர்மம் செய்யக்கூடியவர்கள்.
துவிதியை திதி
சுகவாசி, அழகானவர்கள், வண்டி வாகனம் உடையவர்கள்.
திருதியை திதி
ஆன்மீக ஈடுபாடு உடையவர்கள், நற்செயல்களை செய்பவர்கள், அறிவு மிக்கவர்கள்.
சதுர்த்தி திதி
பிறரை துன்புறுத்தக் கூடிய செயல்களைச் செய்யக்கூடியவர்கள், மந்திரம், தந்திரம் அறிவதில் விருப்பமுடையவர்கள். முரட்டு சுபாவம் உடையவர்கள்.
பஞ்சமி திதி
கல்வி கற்பதில் ஆர்வம், பொறுமைசாலி, அன்பானவர்கள், கருணை மற்றும் புகழை அடைய கூடியவர்கள்.
சஷ்டி திதி
உடல் வலிமை உடையவர்கள். புகழ் பெறக்கூடியவர்கள். கோபம் உடையவர்கள். பிறரை எளிதில் வெல்ல கூடியவர்கள். நிர்வாக திறமை மிக்கவர்கள்.
சப்தமி திதி
அறிவாளி, நல்ல குணங்களை உடையவர்கள். கற்பதில் ஆர்வம் உள்ளவர்கள். நிர்வாக திறமை மிக்கவர்கள்.
அஷ்டமி திதி
பிறருக்கு துன்பத்தை விளைவிக்கக் கூடியவர்கள். கோபம் மிக்கவர்கள்.
நவமி திதி
இறைசிந்தனை இல்லாதவர்கள். புகழ் பெறக்கூடியவர்கள். பெரும் செல்வம் மிக்கவர்கள்.
தசமி திதி
எல்லா செல்வங்களும் உடையவர்கள். நல்ல நண்பர்களை உடையவர்கள். அறிவாளி மற்றும் சத்தியம் பேசக்கூடியவர்கள்.
ஏகாதசி திதி
நற் முயற்சி உடையவர்கள், வெற்றியை விரும்பக்கூடிய நபர்கள். எடுத்த செயலை முடிப்பதில் வல்லவர்கள்.
துவாதசி
சாந்தகுணம் மிக்கவர்கள். வீரம் மிக்கவர்கள். தைரியசாலி, கலையில் ஆர்வம் உடையவர்கள். அழகானவர்கள். சலன புத்தி உள்ளவர்கள். வண்டி வாகனம் உடையவர்கள்.
சதுர்த்தசி திதி
மந்த புத்தி உடையவர்கள், செல்வம் மிக்கவர்கள் எளிதில் கோபப்பட கூடியவர்கள்.
பௌர்ணமி/அமாவாசை திதி
நற்குணம் மிக்கவர்கள். சந்தமானவர்கள். அனைத்து செல்வங்களையும் பெற்று வாழக்கூடியவர்கள்.
திதியில் செய்ய தக்க வகைகள்
பிரதமை திதி
சித்திர வேலைகள், சித்திரங்கள் வரைதல், போர்க்கருவிகள் செய்தல், உலோக வேலைப்பாடுகள்.
துவிதியை திதி
திருமணம், யாத்திரை, தேவதைகளை பிரதிஷ்டை செய்தல், ஆபரணம் செய்தல். வீடு கட்டுதல்.
திருதியை திதி
இசை மற்றும் ஓவியம் பயிலுதல், புதுமனை புகுதல், வீடு கட்டுதல்.
சதுர்த்தி திதி
ஆயுதப்பயிற்சி, விஷ பிரயோகம் முதலியன செய்தல். மங்கள காரியங்கள் தவிர்த்தல் நல்லது. அழிவை தரக்கூடியது.
பஞ்சமி திதி
திருமணம், தேவதைகளை செய்தல், யாத்திரை செல்லுதல். பஞ்சமி திதியில் ஒரு காரியம் செய்தால் வெகு காலம் நிலைத்து நிற்கும்.
சஷ்டி திதி
ஆபரணம் செய்தல், மனை வாங்குதல, மருந்து தயாரித்தல், வேலை செய்தல்.
சப்தமி திதி
தீர்மானம், தேவதைகளைப் பிரதிஷ்டை செய்தல், பயிரிடுதல், ஆபரணம் செய்தல், வீடு கட்டுதல்.
அஷ்டமி திதி
போர் புரிதல், விவசாயம் செய்தல், சிற்ப வேலைகள் செய்தல், ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் செய்தல்.
நவமி திதி
போர் புரிதல், கருத்துவேறுபாடு உண்டு பண்ணுதல்.
தசமி திதி
திருமணம் செய்தல் , புதுமனை புகுதல், நீர் சார்ந்த விஷயங்களை செய்தல்
ஏகாதசி திதி
திருமணம் செய்தல், விவசாயம் செய்தல், தொழில் தொடங்குதல், விரதமிருத்தல், சிற்ப வேலைகள் செய்தல்.
துவாதசி திதி
செல்வத்தை பெருக்கும் தர்ம காரியங்களை செய்தல்.
திரயோதசி திதி
புண்ணிய செயல்கள் அனைத்தும் செய்யலாம். நாட்டியம் பயிலுதல், கட்டுரை, கதை எழுதுதல்.
சதுர்த்தசி திதி
பயணம் செய்தல், எண்ணெய் தேய்த்து குளித்தல். சுப காரியங்களை செய்யக்கூடாது.
பௌர்ணமி திதி
மங்களகரமான செயல்கள் அனைத்தும் செய்யலாம். போர் புரியும் செயல்கள், வீடு சம்பந்தமான செயல்கள், திருமணம் மற்றும் சிற்பக் கலைகள் ஆபரணங்கள் செய்தல்.
அமாவாசை திதி
பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய காரியங்களைச் செய்தல். வேறு எந்த சுபகாரியம்மும் செய்யக் கூடாது.
நட்சத்திரம்
பஞ்சாங்கத்தின் மூன்றாவது அங்கம் நட்சத்திரமாகும். ஒவ்வொரு நட்சத்திரமும் 13 பாகை 20 கலைகள் கொண்டது ஒரு ராசியில் மொத்தம் ஒன்பது நட்சத்திர பாதங்கள் உள்ளன மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன. 12 ராசிகளில் முதல் நட்சத்திரம் அஸ்வினி பரணி ஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு பாகங்களாக பிரிக்கப்பட்டு ராசியில் உள்ளன ஒரு ராசியில் 9 பாதங்கள் வீதம் மொத்தம் 12 ராசிகளுக்கு 108 பாதங்கள் உள்ளன.
ஒரு குழந்தை பிறக்கும்போது சந்திரன் எந்த நட்சத்திரத்தில் உள்ளாரோ அதுவே அவர்களின் ஜென்ம நட்சத்திரம் ஆகும். நட்சத்திரங்களில் முழு நட்சத்திரம் மற்றும் உடைபட்ட நட்சத்திரங்கள் உண்டு. ஒரே நட்சத்திரம் இரண்டு ராசிகளில் இருக்கும்
ஆனால் அவைகள் உடைபட்ட நட்சத்திரங்கள்.
உதாரணத்திற்கு மிருகசீரிஷம் நட்சத்திரம் முதல் 2 பாதங்கள்ரிஷப ராசியில் உள்ளது. 3 , 4ம் பாதங்கள் மிதுன ராசியில் உள்ளன. அதேபோல் சூரியனின் நட்சத்திரமான கார்த்திகை மேஷ ராசியில் 1ம் பாதம், கடைசி 3 பாதங்கள் ரிஷப ராசியிலும் அமைகிறது.
நட்சத்திரங்களில் செய்யத்தக்க வகைகள்
அஸ்வினி நட்சத்திரம்
தேர் ரதங்கள் செய்தல், தேவதைகளை பிரதிஷ்டை செய்தல், பயணம் செய்தல், பட்டாபிஷேகம் செய்தல், தீட்சை பெறுதல் கர்ம காரியங்கள் செய்தல்.
பரணி நட்சத்திரம்
போர் புரிதல் ,நெருப்பு மற்றும் தளவாடங்கள் செய்தல், சண்டையிடுதல், திருடுதல், சூதாடுதல், மந்திரம், வசியம் மற்றும் பில்லி சூனியம் செய்தல்.
கார்த்திகை நட்சத்திரம்
அக்னி சம்பந்தமான காரியங்கள் செய்தல், ஹோமம் வளர்த்தல், ஆபரணங்கள் செய்தல், மந்திர சித்தி பெறுதல், மருந்து செய்தல் முதலியன கார்த்திகை நட்சத்திரத்தில் செய்யலாம்.
ரோகிணி நட்சத்திரம்
பட்டாபிஷேகம் செய்தல், புதுமனை புகுதல், ஹோமம் செய்தல், திருமணம் செய்தல், விவசாயம் – விதை விதைத்தல், ஆபரணம் அணிதல்,.
மிருகசீரிஷம்
மங்களகரமான காரியம் செய்தல், தவம் செய்தல், விரதமிருத்தல், பயணம் செய்தல், பித்ருக்கள் வழிபாடு பண்ணுதல்,
திருவாதிரை
சமாதானம் செல்லுதல், தீயினால் அழித்தல்.
புனர்பூசம் நட்சத்திரம்
சீமந்தம், வளைகாப்பு, கல்வியை தொடங்குதல், தொட்டிலிடுதல், ஆபரணம் அணிதல்.
பூசம் நட்சத்திரம்
தெய்வங்களை வழிபடுதல், அரசு சம்பந்தமான வேலைகளை செய்தல், சாந்தி காரியம் செய்தல், மருந்து சம்பந்தமான வேலைகளை செய்தல்.
ஆயில்யம் நட்சத்திரம்
ஏவல், பில்லி சூனியம் முதலியன செய்தல், ஆயுதம் சம்பந்தமான பயிற்சி செய்தல், உடற்பயிற்சி மற்றும் விஷ சம்பந்தமான பொருட்கள் தயாரித்தல்.
மகம் நட்சத்திரம்
அதிசயமான காரியங்களை செய்தல், மந்திரப் பிரயோகம் செய்தல், சூதாட்டம் , போர் வேலைகளை செய்தல்.
பூரம் நட்சத்திரம்
பயணம், செய்தல் விஷ பிரயோகம் செய்தல், மருந்து தயாரித்தல்.
உத்திரம் நட்சத்திரம்
ஆறு, கிணறு, குளம் ஏரி வெட்டுதல், நகரம் அமைத்தல், புதிய ஆபரணங்கள் அணிதல், மங்கல ஸ்நானம் செய்தல், திருமணம் விவசாயம் செய்தல்.
அஸ்தம் நட்சத்திரம்
மங்களகரமான செயல்களை செய்தல், யாத்திரை செல்லுதல், கோவில் தேவாலயம் அமைத்தல், புதிய ஆடை அணிகலன்கள் அணிதல்.
சித்திரை நட்சத்திரம்
புதிய ஆடை அணிகலன்கள் அணிதல், காது குத்துதல், பவளம் அணிவது, இசை மற்றும் நாட்டிய பயிற்சி பெறுதல்.
சுவாதி நட்சத்திரம்
திருமணம், ஆபரணம் அணிதல், கல்வி பயில துவங்குதல், பயிரிடுதல், வீடு கட்டுதல், குதிரை ஏற்றம் பயிலுதல்.
விசாகம் நட்சத்திரம்
யாகம் செய்தல், விரதமிருத்தல், குரு பூஜை செய்தல், ஆடை அணிகலன்கள் அணிதல்.
அனுஷம் நட்சத்திரம்
பெண்மணிகளை சோதித்தல், குதிரையில் சவாரி செய்தல், மருந்து எடுத்துக்கொள்ளுதல், யாத்திரை செல்லுதல்.
கேட்டை நட்சத்திரம்
சிற்ப வேலை செய்தல், சட்டம் பயிலுதல், கொள்ளையடித்தல்.
மூல நட்சத்திரம்
தானியங்கள் சேமித்தல், மரம், கரும்பு, நெல், உளுந்து போன்றவை பயிரிடுதல், உச்சாடனம் செய்தல், மருந்து செய்தல்.
பூராடம் நட்சத்திரம்
குளம், குட்டை, ஏரி வெட்டுதல், முத்து, பவளம் முதலியவர்களை சேகரித்தல், ஆயுதங்களை கூர்மையாக்கும்.
உத்திராடம் நட்சத்திரம்
வீடு கட்டுதல், தேவதைகளை பிரதிஷ்டை செய்தல், அலங்காரம் அபிஷேகம் செய்தல், ஆடை அணிகலன்கள் அணிதல், சுப காரியங்களை செய்தல்.
திருவோணம் நட்சத்திரம்
கல்வி பயில துவங்குதல், சாந்தி முகூர்த்தம், காதுகுத்துதல், பயணம் செய்தல், தேவதை பிரதிஷ்டை செய்தல், யாகங்கள் வளர்த்தல்.
அவிட்டம் நட்சத்திரம்
கல்வி பயில ஆரம்பித்தல், மருந்துகள் தயாரித்தல், யாகம் செய்தல், பரிகாரம் செய்தல்.
சதயம் நட்சத்திரம்
பூந்தோட்டம் அமைத்தல், முத்து பவளம் சேகரித்தல், ஹோமம் செய்தல், குளம் வெட்டுதல்.
பூரட்டாதி நட்சத்திரம்
வசியம் செய்தல், வாதம் செய்தல், சூதாடுதல், சாஸ்திரங்களை பயிலுதல்.
உத்திரட்டாதி நட்சத்திரம்
திருமணம், யாகம், புதிய ஆடை அணிதல், ஆபரணங்கள் அணிதல்.
ரேவதி நட்சத்திரம்
திருமணம் செய்தல், புதுமனை புகுதல், யானை மற்றும் குதிரை ஏற்றம், சுப காரியங்களை செய்தல்.
மேலும் படிக்க : அடிப்படை ஜோதிடம் -1