குரு காரகத்துவங்கள்

Table of Contents

குரு

பொன்னன் என்று அழைக்கப்படும் பிரகஸ்பதி அல்லது வியாழ பகவான் தேவர்களின் குரு ஆவார். நவக்கிரகங்களில் முழுமையான சுபராவார். சப்த ரிஷிகளில் அங்கிரஸ முனிவரின் மகனாவார். இவருக்கு தாரை என்கிற மனைவி உண்டு. குரு பகவான் தனம் மற்றும் புத்திர பாக்கியத்திற்கு காரக கிரகமாக வருகிறார். குரு ஸ்தானங்களில் உள்ள அனைவரும் குருவின் காரகமாவார்கள். ஜீவ காரகனும் குருவே ஆவார். குருவின் பார்வை அனைத்து தோஷமும் விலகும், ஜாதகத்தில் குரு பகவான் நல்ல நிலையில் இருந்தால் ஜாதகர் சகல சௌபாக்கியங்களையும் பெற்று வாழ்வார்கள். குரு பகவான் ஒழுக்கம்,மந்திர உச்சாடனம், ஞாபக சக்தி, சாஸ்திர அறிவு, ஆன்மீக சிந்தனை போன்றவற்றிற்கு காரகம் வகிக்கிறார்.

உடலில் உள்ள கொழுப்பு தன்மையை குரு பகவான் குறிக்கும், உறுப்புகளில் கல்லீரலை ஆளுமை செய்கிறது. பஞ்ச பூத தத்துவத்தில் ஆகாய தத்துவத்தை குறிக்கும்.குரு பகவான் புனர்பூசம், விசாகம் மற்றும் பூரட்டாதி நட்சத்திரத்தின் அதிபதியாக வருகிறார். இவரின் தசா காலங்கள் 16 ஆண்டுகள் ஆகும். வீட்டில் மங்கல காரியங்கள் நடக்க குருவின் அருள் தேவை. தனுசு மற்றும் மீனம் போன்றவை குருவின் வீடுகள். ஜாதகத்தில் குரு பகவான் தனித்து இல்லாமல் சுபருடன் சேர்ந்து இருப்பது வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் ஜாதகருக்கு தேடி தரும். ஜாதகத்தில் குரு பகவான் மறைவு ஸ்தனங்களான 6,8,12 பாவ சம்பந்தம் இல்லாமல் இருந்தால் ஜாதகருக்கு நற்பலன்களை வாரி வழங்குவார்.

அமைப்பு

சூரியனுக்கு சுமார் 48,00,00,030 KM தூரத்திற்க்கு அப்பால் இருந்து சூரியனை சுற்றி வருகிறது. தன்னை தானே 9 மணி 55 நிமிடங்களில் சுற்றி வருகிறது. மிகவும் பெரிய அளவில் உள்ள கிரகமாகும். வருடத்திற்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு குரு பெயர்ச்சி ஆகிறார். கோச்சார குரு ஜாதகரின் ராசிக்கு 1,3,5,7,9,11 பயணிக்கும்போது ஜாதகருக்கு திருமண யோகம் கூடி வரும். மேலும் பொருளாதாரம், புகழ், குழந்தை பாக்யம், கடன் நிவர்த்தி, நோய் தீருதல் போன்ற பலன்களை வழங்குவார்.

பரிகாரங்கள் மற்றும் புதன் பலம் அதிகரிக்க வழிமுறைகள்

ஜாதகத்தில் குருவின் பலம் அதிகரிக்க ஜாதகர் கொண்டைக்கடலையை படைத்தது வியாழக்கிழமைகளில் தானம் செய்யலாம். நவக்கிரக ஸ்தலங்களில் குரு ஸ்தலமான ஆலங்குடி சென்று வழிபடு செய்வதாலும் குரு பகவானின் அருளை பெற முடியும். பிரம்மாவை வழிபடுவதால் குரு பகவானின் பலம் ஜாதகத்தில் அதிகரிக்கும் மற்றும் குரு ஸ்தானத்தில் உள்ள சித்தர்கள், ஞானிகள் போன்றோர்களை வழிபடுவதாலும் குரு பகவானின் ஆசிர்வாதத்தை ஜாதகர் பெற்று நற்பலன்களை அடைய முடியும்.

காரகத்துவங்கள்

முக்கிய காரகங்கள்

  • தன காரகன்
  • புத்திர காரகன்

உறவுகள்

  • குழந்தைகள்
  • பெரியப்பா

உடல் பாகங்கள்

  • வயிறு (குடல்) பகுதி
  • மூக்கு
  • தொடை பகுதி
  • கல்லீரல்
  • கிட்னி
  • கணையம்

உணவுப்பொருட்கள்

  • தேன்
  • கொண்டைக்கடலை
  • கரும்பு
  • வாழை
  • சீரகம்
  • பரங்கி காய்

நோய்கள்

  • மூலையில் ரத்தம் கட்டுதல்
  • வாயுத்தொல்லை
  • அஜீரணம்
  • மஞ்சள் காமாலை

தொழில்கள்

  • ஆலோசனை
  • பேராசிரியர்
  • ரியல் எஸ்டேட்
  • நீதிபதி
  • மத ஜபோதகர்
  • மருத்துவர்
  • கல்வி அமைச்சர்
  • ஜோதிடம்
  • குழந்தை மருத்துவர்
  • ஆன்மிக துறை சார்ந்த வேலைகள்
  • வங்கி மேலாளர்
  • ஆன்மிக நூல்கள் விற்பனை
  • ஆசாரி

பொதுவான காரகங்கள்

  • சுபம்
  • நல்லநேரம்
  • வளர்ச்சி
  • ஜீவன்
  • சுப நிகழ்ச்சிகள்
  • உண்மையானது
  • ஒழுக்கம்
  • மனித நேயம்
  • சுய சிந்தனை
  • வளர்ச்சி
  • தர்ம சிந்தனை
  • தெய்வ நம்பிக்கை
  • பட்டு துணி
  • கஜானா
  • பணம் புழங்கும் இடம்
  • மஞ்சள்
  • மிகப்பெரிய தொழில் நிறுவனம்
  • மத குரு
  • தங்கம் (கட்டி )
  • பணிவுடன் இருத்தல்
  • சாந்தம்
  • கௌரவம்
  • பாரம்பரியம்
  • தன்னம்பிக்கை
  • புத்தி கூர்மை
  • பொன் பொருட்கள்
  • பிறரை மதித்து பேசல்
  • கற்பித்தல்
  • பத்திரம் – பதிவு நிறைவுறுதல்
  • கல்வி மையங்கள்
  • யானை
  • வடக்கு திசை
  • முல்லை மலர்
  • கனக புஷ்பரகம்
  • அரச மரம்
  • பங்களா
  • சதை (கொழுப்பு)
  • இனிப்பு சுவை
  • பாதம்
  • பசு மாடு

மேலும் படிக்க : தனுசுராசி காரகத்துவங்கள் மற்றும் பாவ பலன்கள்

குரு 12 பாவங்களில் நிற்பதால் ஏற்படும் பலன்கள்

லக்னத்தில் நிற்பதால் ஏற்படும் பலன்கள்

  • ஜாதகர் பிறந்தவுடன் குடும்பம் வளர்ச்சி
  • ஜாதகர் சாந்தமானவர்
  • கௌரமான தோற்றம் உள்ளவர்
  • செல்வம் தேடி வரும்
  • வாழ்க்கையில் குரு நிலைக்கு உயரக்கூடியவர்
  • வீடு அருகில் கோவில் உண்டு
  • ஜாதகர் உயர் பதவி அடையக் கூடியவர்
  • அரசியல், அரசாங்கம் தொடர்பு உண்டு
  • சிறு வயதிலேயே வருமானம் வரும்
  • குருமார்கள் ஆசிர்வாதம் உண்டு
  • குலதெய்வ அருள் உண்டு
  • ஆயுள் பலம் உண்டு
  • ஆன்மிக ஈடுபாடு உண்டு
  • தந்தையின் உதவி ஜாதகருக்கு கிடைக்கும்

2-ல் நிற்பதால் ஏற்படும் பலன்கள்

  • அரசு வருமானம் உண்டு
  • வாக்கு பலிதம் உண்டு
  • சாந்தமான முகம்
  • உயர்கல்வி உண்டு
  • இரண்டு வயதில் குடும்பம் வளர்ச்சி
  • சிறுவயதிலேயே வருமானம் உண்டு
  • கல்வி , ஜோதிடம், சட்டம், வங்கி போன்ற துறைகளில் இருந்து வருமானம் அமையும்
  • குழந்தை பிறந்தவுடன் வருமானம் ஏற்படும்
  • பிறருக்கு உபதேசம் செய்யக்கூடியவர்கள்
  • கண் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும்
  • அன்னதானம், டிரஸ்ட் போன்றவற்றில் ஈடுபட உண்டு
  • உயில் சொத்து உண்டு
  • இளமையில் திருமணம்
  • அன்பானவர்கள்

3-ல் நிற்பதால் ஏற்படும் பலன்கள்

  • சகோதர, சகோதரிகள் உண்டு
  • ஜாதகர் படிப்புக்காக பயணம் செய்யக்கூடிய சூழ்நிலை ஏற்படும்
  • ஜாதகரின் உடன்பிறப்புகள் வசதியாக இருப்பார்கள்
  • தந்தை பதவியை வகிக்க கூடியவர்
  • ஜாதகருக்கு குரல் இனிமையாக இருக்கும்
  • ஜாதகரின் மூன்று வயதுக்கு மேல் குடும்ப வளர்ச்சி அடையும்
  • வீட்டில் ஆன்மீக நூல்கள் உண்டு
  • வீட்டில் ஆசிரியர், ஜோதிடர் உண்டு
  • ஜாதகருக்கு ENT பிரச்சனை இருக்கும்

4-ல் நிற்பதால் ஏற்படும் பலன்கள்

  • ஜாதகர் சுகவாசி
  • பட்டப்படிப்பில் தேர்ச்சி
  • வேதாந்தத்தில் ஆர்வம்
  • அரசாங்கத்தால் அணுகுலம் உண்டு
  • வீடு, வாகனம், சொத்து யோகம் உண்டு
  • மத ஈடுபாடு உண்டு
  • செல்வம் சேரும்
  • ஆயுள் பலம் உண்டு
  • வெளிநாட்டு யோகம் உண்டு
  • திடீர் அதிர்ஷ்டம் உண்டு
  • மறை பொருள் சார்ந்த அறிவு உண்டு
  • PF,பென்ஷன் போன்றவற்றால் ஆதாயம் உண்டு
  • வீட்டு அருகில் கோவில் உண்டு
  • ஆச்சாரம் மிக்கவர் உண்டு
  • தாயார் கௌரவமானவர்
  • தாய் வழியில் ஆசிரியர்,ஜோதிடர் உண்டு

5-ல் நிற்பதால் ஏற்படும் பலன்கள்

  • ஜாதகருக்கு குலதெய்வ அருள் உண்டு
  • குருமார்கள் ஆசிர்வாதம் உண்டு
  • முதல் குழந்தை பெண் குழந்தையாக பிறப்பது சிறப்பு
  • ஜாதகருக்கு ஆன்மீகத் துறையில் ஈடுபாடு உண்டு
  • மனிதநேயமிக்கவர்
  • குழந்தைகள் அறிவாளியாக இருப்பார்கள்
  • குழந்தைகள் பிறந்தவுடன் வளர்ச்சி உண்டு
  • பிற்பகுதியில் படிக்கத் தோன்றும்
  • ஜோதிடம் சிறப்பு
  • மனோபலம் உண்டு
  • அறிவாளிகள்
  • ஆயுள் பலம் உண்டு
  • நுட்பமான விஷயங்ளில் ஆர்வம்
  • அனுபவ அறிவு மிக்கவர்கள்
  • தாய்மாமனுக்கு வளர்ச்சி உண்டு
  • சீட்டு தொழில், ஜவுளி தொழில், கலைத்துறை சார்ந்த தொழில்கள் ஜாதகருக்கு முன்னேற்றத்தை தரும்
  • வாழ்வின் பிற்பகுதியில் வளர்ச்சி உண்டு
  • ஆயுள் பலம் உண்டு

6-ல் நிற்பதால் ஏற்படும் பலன்கள்

  • ஜாதகருக்கு நிரந்தர வருமானம் உண்டு
  • குழந்தை தாமதம் உண்டு
  • பொருளாதாரத்தில் தடை தாமதம் உண்டு
  • சுப காரியங்களில் தடை உண்டு
  • உறவினர்களிடம் கருத்து வேறுபாடு உண்டு
  • ஜாதகருக்கு கடன் அதிகரிக்கும்
  • ஜாதகரே கடனை ஏற்படுத்திக் கொள்வார்
  • வயிறு சார்ந்த பிரச்சனை, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் உண்டு
  • எதிரிகளை வெற்றிகொள்வார்கள்
  • பொருளாதார தடை, தாமதம்
  • சோம்பேறிகள்
  • நோய்களால் பிரச்னை உண்டு

7-ல் நிற்பதால் ஏற்படும் பலன்கள்

  • வாழ்க்கை துணை ஆச்சாரமிக்கவர், கௌரவமாணவர்
  • திருமணத்திற்கு பின் ஜாதகருக்கு வளர்ச்சி உண்டு
  • சொத்து சேர்க்கை உண்டு
  • வாழ்வின் பிற்பகுதியில் சிறப்பான வளர்ச்சி உண்டு
  • மனைவி பெயரில் தொழில் செய்வதால் ஆதாயம் உண்டு
  • இரண்டாவது குழந்தை பிறந்த பின் ஜாதகருக்கு முன்னேற்றம் உண்டு
  • சுயதொழில் முன்னேற்றத்தை தரும்
  • மூத்த சகோதரத்தால் ஆதாயம் உண்டு
  • புகழ், கீர்த்தி உண்டு

8-ல் நிற்பதால் ஏற்படும் பலன்கள்

  • ஜாதகருக்கு வெளிநாட்டு யோகம் உண்டு
  • சட்டம், மருத்துவம், இரவு நேர பணிகள் போன்றவற்றால் ஜாதகருக்கு முன்னேற்றம் உண்டு
  • குழந்தை பிறப்பதில் தடை தாமதம் உண்டு
  • குழந்தைகளுக்கு மருத்துவ செலவு உண்டு
  • ஆயுள் பலம் உண்டு
  • மஞ்சள் காமாலை, வயிற்றுப்போக்கு பிரச்சனை உண்டு
  • குழந்தைகளை பற்றிய கவலை உண்டு
  • ஜோதிடம் சிறப்பு
  • கொழுப்பு கட்டி சார்ந்த பிரச்னை உண்டு
  • விவேகமற்றவர்கள்
  • அவமானம் உண்டு

9-ல் நிற்பதால் ஏற்படும் பலன்கள்

  • தந்தை கௌரமானவர், பெரிய பதவியை வகிக்க கூடியவர்
  • ஜாதகர் குறிக்கோள் மிக்கவர்
  • தர்ம சிந்தனை மிக்கவர்
  • புத்ர யோகம் உண்டு
  • செல்வம் தேடி வரும்
  • நேர்மையானவர்கள்
  • குருமார்கள் ஆசிர்வாதம் உண்டு
  • இஷ்டதெய்வ அருள் உண்டு
  • ஆராய்ச்சி படிப்பில் ஆர்வம் உண்டு
  • ஆன்மிக ஈடுபாடு உண்டு
  • வெளிநாட்டு யோகம் உண்டு
  • அரசால் ஆதாயம் உண்டு
  • களத்திரத்தால் முன்னேற்றம் உண்டு

10-ல் நிற்பதால் ஏற்படும் பலன்கள்

  • ஜாதகருக்கு உயர் பதவி உண்டு
  • நிலையான வருமானம் உண்டு
  • ஆண் வாரிசு உண்டு
  • தொழிலில் வளர்ச்சி உண்டு
  • நிதி துறை சார்ந்த துறையில் வேலை உண்டு
  • அற வழியில் பொருள் ஈட்டுவார்கள்
  • ஆன்மீக துறையில் வேலை உண்டு
  • குழந்தைகளுக்காக சேமிக்க கூடியவர்கள்
  • பிற்பகுதியில் சுகமாக வாழ்க்கை உண்டு
  • ஷேர் மார்க்கெட் துறையில் முன்னேற்றம் உண்டு
  • தான தர்மம் செய்யக் கூடியவர்கள்
  • ஆன்மீகத்தின் ஈடுபாடு உண்டு
  • ஆன்மீக தேடல் மிக்கவர்கள்
  • கோவில் திருப்பணி செய்வதில் ஆர்வம் உண்டு

11-ல் நிற்பதால் ஏற்படும் பலன்கள்

  • மூத்த சகோதரத்தால் ஆதாயம் உண்டு
  • செல்வம் சேர்ந்து கொண்டே இருக்கும்
  • பணம் பல வழிகளில் வரும்
  • நல்ல நண்பர்கள் உண்டு
  • நண்பர்களால் ஆதாயம் உண்டு
  • ஆன்மீகத்தில் ஈடுபட உண்டு
  • பிற்பகுதியில் படிப்பதில் ஆர்வம் உண்டாகும்
  • குழந்தைகளால் ஆதாயம் உண்டு
  • ஆசிரியர், ஜோதிடர், நீதிபதி போன்ற தொழில்களோ முன்னேற்றம் உண்டு
  • ஆயுள் பலம் உண்டு
  • நினைத்த காரியம் கைகூடும்
  • எடுத்த முயற்சியில் வெற்றி காண்பார்கள்

மேலும் படிக்க : மீன ராசி காரகத்துவங்கள் மற்றும் பாவ பலன்கள்

12-ல் நிற்பதால் ஏற்படும் பலன்கள்

  • சேவை மனப்பான்மை உள்ளவர்கள்
  • ஆன்மிக ஈடுபாடு மிக்கவர்கள்
  • வசதியானவர்கள்
  • தர்ம சிந்தனை உள்ளவர்கள்
  • சொத்து உண்டு
  • வாழ்வின் பிற்பகுதியில் சிறப்பாக அமையும்
  • குழந்தைகளால் விரயம் உண்டு
  • அலைச்சல் உண்டு
  • வீடு, வாகனம், சொத்து போன்றவை உண்டு
  • ஜோதிடம், சட்டம், ஆபரணத் தொழில் போன்றவை ஜாதகருக்கு முன்னேற்றத்தை தரும்
  • தான தர்மத்தில் ஈடுபாடு உண்டு
  • தாத்தா நல்ல பதவியில் இருந்தவர்கள்
  • புனித யாத்திரை செல்லுதல்
  • இரண்டு தொழில்கள் செய்தல்
  • சயன சுகம் உண்டு
  • பொருளாதாரத்தில் தடை, தாமதம் உண்டு
  • சந்நியாசத்தில் நாட்டம்

மேலும் படிக்க : புதன் காரகத்துவங்கள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top