கடக ராசி காரகத்துவங்கள் மற்றும் பாவ பலன்கள்

Table of Contents

கடக ராசி

கடகராசி  கால புருஷனுக்கு நான்காவது ராசி. இதன் பாகை 90 முதல் 120 வரை உள்ளது இது ஒரு நீர் ராசி. இரட்டைப்படை ராசி மற்றும் பெண் ராசி. அதிபதி சந்திரன் இவர்கள் மதிநுட்பம் வாய்ந்தவர்கள், இரக்க குணம் உடையவர்கள், பிறர் துன்பங்களை கண்டு உதவுவார்கள். இரக்கம் கருணை போன்ற குணங்களை உடையவர்கள். கடின உழைப்பாளிகள் நீர் சார்ந்த விளையாட்டுக்களில் பிரியம் உடையவர்கள். குடும்பத்தின் மீது அக்கறை உள்ளவர்கள். பிடிவாத குணம் மிக்கவர்கள், பக்தி உள்ளவர்கள், துணிச்சலானவர்கள்.

லக்னங்களில் கடகம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நாட்டை ஆண்ட அரசியல்வாதிகள் பெரும்பாலோனோர் கடக லக்னம், உதாரணம் – ஸ்ரீராமர், ஜவஹர்லால் நேரு, அறிஞர் அண்ணா. பன்னிரண்டு ராசிகளில் தமிழ்நாட்டை குறிக்கக் கூடிய ராசியும் கடகம் தான். குரு கடகத்தில் உச்சமடைவதால்தான், தமிழ்நாடு கோவில்கள் அதிகம் உள்ள மாநிலமாக திகழ்கிறது.

புனர்பூசம் நட்சத்திரத்தின் 4-ம் பாதமும், பூசம் நட்சத்திரத்தின் 4 பாதங்களும், ஆயில்யம் நட்சத்திரத்தின் 4 பாதங்களும் உள்ளன. உடலில் இதயத்தை குறிக்கும். சர ராசி. இந்த ராசியில் குரு உச்சமடைவதால் இவர்களுக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு இருக்கும். செவ்வாய் இங்கு நீச்சமடைகிறார். வெண்மை,மஞ்சள் நன்மையை தரும். திங்கள், செவ்வாய், வியாழன், சனி போன்ற நாட்கள் நன்மையை தரும். சித்திரை, ஆடி, கார்த்திகை, பங்குனி போன்ற மாதங்கள் நன்மையை தரும்.

பொதுவான காரகத்துவங்கள்

  • அழகானது
  • அன்னதானம்
  • குளிர்பானங்கள்
  • வீதியின் ஆரம்பம்
  • பால் பண்ணை
  • பால், தயிர், மோர்
  • நீர் நிலைகள்
  • தெளிந்த நீரோடைகள், ஆறு
  • மணல் ராசி
  • படகு, கப்பல் பயணங்கள்
  • வயல்வெளி
  • வெளிநாட்டு ராசி
  • அரசாங்க வீடு
  • அரசியல் ஈடுபாடு
  • பொது நலனில் அக்கறை
  • நண்டு, தவளை
  • கீரிப்பிள்ளை
  • வாத்து, நீர் கோழி
  • அரிசி
  • அவரை
  • பேரிச்சை
  • கிழங்கு வகைகள்

இடங்கள்

  • குளம்
  • ஏரி
  • நதிகள் (ஜீவ )
  • கடல்
  • கடற்கரை
  • நதிக்கரை
  • புண்ணிய ஸ்தலங்கள்

தொழில்கள்

  • உணவு பொருட்கள் விற்பனை
  • ஏற்றுமதி, இறக்குமதி தொழில்கள்
  • கடல் தாண்டிய தொழில்கள்
  • வேளாண்மை தொழில்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஜோதிடம்
  • போக்குவரத்து துறை
  • கல்வித்துறை

நோய்கள்

  • மார்பக கோளாறு
  • மனம் சார்ந்த நோய்கள்

கடக ராசியின் பொதுவான குணங்கள்

தோற்றம்

  • இளஞ்சிவப்பு நிற தோற்றம்
  • சந்திரன் போன்ற வட்ட வடிவ முகம்
  • சம உயரம் உடையவர்கள்
  • வேகமாக நடக்ககூடியவர்கள்
  • நீண்ட கைகளை உடையவர்கள்

சிறப்பு குணங்கள்

  • மதிநுட்பம் வாய்ந்தவர்கள்
  • இரக்க குணமுடையவர்கள்
  • தாய் போன்ற சேவை உள்ளம் கொண்டவர்கள்
  • பிறர் துன்பம் கண்டு உதவுபவர்கள்
  • சுறு சுறுப்பானவர்கள்
  • கடின உழைப்பாளிகள்
  • நேர்மையானவர்கள்

மாற்றிக்கொள்ள வேண்டிய குணங்கள்

  • அதிக மதிநுட்பம் மற்றும் அதிக கற்பனை காரணமாக குழப்பமடைதல்
  • பிடிவாத குணம்சபல புத்தி
  • சிறிய விஷயங்களுக்கு கூட கவலையடைதல்
  • அதிகமாக உணர்ச்சிவசப்படுதல்

கடக ராசியின் பொதுவான பாவ பலன்கள்

1-ம் பாவம்

  • அழகிய முகத்தோற்றம்
  • கண், பல் நன்றாக இருக்கும்
  • தாயைப் பற்றிய கவலை உண்டு
  • உணர்ச்சிவசப்பட கூடியவன்
  • சுயதொழில் பிரச்சனை உண்டு
  • மெல்லிய தேகம் வசீகரமான கண்களும் உண்டு
  • குறுகுறுப்பான பார்வை
  • எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய தன்மை
  • தீர ஆலோசித்து முடிவு எடுப்பவர்
  • உணர்வு மிக்கவர்கள்
  • உடல் சக்தி உண்டு
  • சேமிப்பு வைப்பதில் விருப்பம்
  • ஆரம்பத்தில் சந்தேகிப்பது பிறகு பழகியபின் அவர்களுக்காக எதையும் செய்யக்கூடியவர்கள்
  • கோழி தூக்கம் தூங்க கூடியவர்
  • பால் சார்ந்த உணவு பொருளில் விருப்பம்

2-ம் பாவம்

  • பிரமாண்ட பேச்சு
  • தற்பெருமை அதிகம்
  • பேசுவதில் விருப்பமுடையவர்
  • குடும்பத்தின் மீது அக்கறை உடையவர்
  • முன்கோபம் உண்டு
  • பிறந்த பின் குடும்ப வளர்ச்சியடையும்
  • கொடுத்த வாக்கை தவறமாட்டார்
  • அதிக செலவு அளிப்பவர்
  • கண்ணாடி அணிய கூடியவர்
  • திருமணத்திற்காக அதிகம் செலவு செய்யக் கூடிய சூழ்நிலை உண்டாகும்

3-ம் பாவம்

  • விரல்களில் சேதம்
  • சகோதரனால் விரையம்
  • ENT பிரச்சினை உண்டு
  • கம்யூனிகேஷன் பிரச்னை இருக்கும்
  • சகோதர சகோதரிகள் உறவு ஒத்துவராது
  • பதவிக்காக வேலையை கஷ்டம் வராமல் செய்யக்கூடியவர்
  • பிறருக்கு உதவி செய்யக் கூடியவர்கள்
  • சீட்டு இவற்றில் ஏமாறும் சூழ்நிலை உண்டாகும்
  • கமிஷன், ஏஜென்ஸி, காண்ராக்ட் போன்றவற்றில் ஆதாயம் உண்டு
  • வாகன யோகமுண்டு
  • பக்கத்து வீட்டு பிரச்சினை உண்டு
  • பத்திரத்தில் பிரச்சனை உண்டு
  • சகோதரர் தற்கொலை முயற்சிக்கு ஈடுபடலாம்
  • பேச்சில் ஒரு கம்பீரம் ஆணவம் தெரியும்

4-ம் பாவம்

  • வீடு சொத்து வாகன யோகமுண்டு
  • தாயிடம் அதிக பாசம் உடையவர்
  • கருத்து வேறுபாடு உண்டு
  • அவசரபுத்திகாரன்
  • நேரத்தை வீணாகக் கழிக்க மாட்டார்கள்
  • பிறந்த பின் குடும்ப மலர்ச்சி
  • வெளிநாட்டு யோகம் உண்டு
  • அரசியல் அரசாங்க தொடர்பால் ஆதாயம் உண்டு
  • கல்விக்கு தடை உண்டு
  • ஆடம்பரமான வாழ்க்கையை விரும்பக் கூடியவர்கள்

5-ம் பாவம்

  • குழந்தை தாமதம் அல்லது பிரிந்து வாழ்தல்
  • கோயில் கணக்கு பார்ப்பவர்கள்
  • குலத்தொழில் நன்று
  • ஜோதிடம் நன்று
  • ஜீவசமாதி வழிபாடு நன்று
  • வீடு சொத்து விற்றால் லாபம் உண்டு
  • பேரும் புகழும் வந்து சேரும்
  • தாத்தா பிரபலமானவராக இருப்பார்
  • தாத்தாவுக்கு ஆயுள் உண்டு
  • விருப்ப திருமணம்
  • குலதெய்வம் வேட்டைக்கார தெய்வமாக இருக்கும்
  • குழந்தைக்கு விபத்து கண்டம் ஏற்படும்
  • மாமனார் புகழ்பெற்ற நபராக இருப்பார்

6-ம் பாவம்

  • கடன் வாங்குதல் கூடாது
  • ஜாமீன் போடக்கூடாது
  • உத்தியோகம் தேடி வரும்
  • யூரின் பிரச்சனை ஏற்படும்
  • உடல் சார்ந்த நோய்கள் வந்து சேரும்
  • முதுகெலும்பு சார்ந்த பிரச்சினை உண்டு
  • கடன் அவமானம் பிரச்சனை உண்டு
  • தலைமைப் பதவி தேடிவரும்
  • வாடகை வருமானம் உண்டு
  • வாய்வு மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்

7-ம் பாவம்

  • திருமணம் தடை, தாமதம்
  • கடினமாக உழைக்கக் கூடிய வாழ்க்கைத் துணை அமையும்
  • வீட்டில் மனைவி ஆதிக்கமே ஓங்கியிருக்கும்
  • நண்பர்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள்
  • நண்பர்களுக்காக பிரச்சனையில் முதலில் நிற்பவர்
  • மனைவியால் ஆதாயம் இல்லை
  • பதவி உயர்வு தேடி வரும்
  • கூட்டாளிகளுக்கு தொழிலை விட்டு கொடுப்பார்
  • வாழ்க்கைத்துணை படித்தவராக இருப்பார்

8-ம் பாவம்

  • பழைய பொருட்களை விரும்பி வாங்க கூடியவர் அவற்றால் ஆதாயம் உண்டு
  • நீரில் கண்டம் உண்டு
  • மனைவிவழி உறவால் பிரச்சினைகள் ஏற்படும்
  • நண்பர்களால் கஷ்ட நஷ்டங்கள் ஏற்படும்
  • கடன் பிரச்சனை உண்டு
  • LIC,PF போன்றவற்றால் ஆதாயம் உண்டு
  • இரண்டாம் குழந்தைக்கு கண்டம் உண்டு
  • மனைவி இனவாதியாக இருப்பார்

9-ம் பாவம்

  • பக்திமான்
  • குரு மேல் பக்தியுடையவர்
  • தான தர்ம சிந்தனை உடையவர்
  • பிறந்தபின் குடும்பத்தில் வளர்ச்சி உண்டு
  • தாய் தந்தையிடம் மிகுந்த பாசம் உடையவர்
  • தந்தையால் அதிர்ஷ்டம் உண்டு
  • தந்தை அரசாங்க பதவியில் இருப்பார்
  • தந்தையால் கடன் உண்டு
  • தந்தைக்கு வாடகை வருமானம் உண்டு
  • தந்தை ஆழ்ந்த மத நம்பிக்கை உடையவர்
  • தீர்த்தயாத்திரை செல்லக்கூடியவர்

10-ம் பாவம்

  • போலீஸ் ராணுவம் போன்ற தொழில்களில் விருப்பம் உண்டு
  • நகைக்கடை ஓவியம் சார்ந்த தொழிலில் ஆர்வம் உண்டு
  • குறைந்த நேரத்தில் அதிக லாபம் ஈட்டக்கூடிய
  • அவர்கள் உட்கார்ந்த இடத்தில் அதிக பணம் சம்பாதிப்பார்கள்
  • வாகன தொழில் இவற்றால் ஆதாயம் உண்டு
  • ஜோதிடம் சிறப்பைத்தரும்
  • உயர் பதவி தேடிவரும்
  • நிலம் சார்ந்த தொழிலால் ஆதாயம் உண்டு

11-ம் பாவம்

  • மூத்த சகோதரிகளால் ஆதாயம் உண்டு
  • மூத்த சகோதரர்கள் தொழில் செய்வார்கள்
  • லாபம் நன்றாக இருக்கும்
  • அதிக லாபம் எதிர்பார்க்க கூடியவர் இதனால் பாதகம் ஏற்படும்
  • இசை கலை நடனம் போன்றவற்றில் ஆர்வம் உண்டு

12-ம் பாவம்

  • தூக்கப் பிரச்சினை உண்டு
  • இரவில் கண்விழித்து வேலை செய்தல்
  • கண் பாதிப்பு உண்டு
  • வெளிநாட்டு யோகம் உண்டு
  • ஜோதிடத்தில் ஆர்வம் உண்டு
  • புதிய கலை மற்றும் இலக்கியத்தில் புதிய கருத்துக்களை உருவாக்க கூடியவர்கள்

கடகத்தில் நவ கிரகங்கள் நிற்பதால் ஏற்படும் பலன்கள்

கேது நிற்பதால் ஏற்படும் பலன்கள்

  • தாய் பாசம் கிடைப்பதில்லை
  • தாயோடு கருத்து வேறுபாடு
  • கல்வியில் தடை
  • வீடு, சொத்து அமைவதில் தடை தாமதம்
  • சொத்தால் வம்பு,வழக்கு உண்டு

சுக்கிரன் நிற்பதால் ஏற்படும் பலன்கள்

  • பயந்த சுபாவம் உடையவர்கள் மிக்கவர்கள்
  • மனைவியால் சொத்து அமையும்
  • அழகிய வீடு அமையும்விரும்பத்தகாத
  • செயல்களை செய்யக்கூடியவர்கள்
  • அதிக குழந்தைகளை உடையவர்கள்
  • படிப்பாளிகள்
  • உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள்
  • மணவாழ்க்கையில் பிரச்சனை உண்டு

சூரியன் நிற்பதால் ஏற்படும் பலன்கள்

  • கல்வி, கேள்விகளில் சிறந்தவர்கள்
  • தாய் தந்தை மீது பாசம் அதிகம்
  • பூர்வீக செத்தல் ஆதாயம் உண்டு
  • தீர்த்த யாத்திரையில் விருப்பமுள்ளவர்கள்
  • ENT சார்ந்த பிரச்சினை உண்டு

 சந்திரன் இருப்பதால் ஏற்படும் பலன்கள்

  • நல்ல படிப்பாளிகள்
  • அவர்கள் விடாமுயற்சி உள்ளவர்கள்
  • மேடைப்பேச்சில் வல்லுநர்கள்
  • கடினமாக உழைக்க கூடியவர்கள்
  • சங்கீதம் உள்ளவர்கள்
  • பிறர் மனம் சந்தோஷ படுமாறு நடக்கக் கூடியவர்கள்
  • நிதான புத்தி உள்ளவர்கள்
  • விஞ்ஞானரீதியாக ஒரு விஷயத்தை ஆராய கூடியவர்கள்
  • வாழ்க்கையில் வெற்றியடைய கூடியவர்கள்
  • தாயின் அன்பு முழுமையாக கிடைக்கும்
  • தாய் குடும்பத்தை வழிநடத்துபவராக இருப்பர்

செவ்வாய் நிற்பதால் ஏற்படும் பலன்கள்

  • புத்திசாலிகள் வெளிநாட்டு யோகம் உள்ளவர்கள்
  • சூழ்ச்சி செய்வதில் வல்லவர்கள்
  • மருத்துவம், அறுவை சிகிச்சை, இயற்கை வைத்தியம் போன்றவை படிப்பவர்கள்
  • கண்களில் பாதிப்பு
  • தைரியசாலிகள்
  • பங்குச்சந்தை வியாபாரத்தில் ஆதாயம் உண்டு
  • முடிவை அடிக்கடி மாற்றக் கூடியவர்கள்
  • அவசரக்காரர்கள்

ராகு நிற்பதால் ஏற்படும் பலன்கள்

  • தாயோடு கருத்து வேறுபாடு
  • மனம் சார்ந்த பிரச்னை உண்டு
  • திருமண வாழ்வில் பிரச்சனை
  • கல்வியில் தடை
  • வீடு, சொத்து அமைவதில் சிக்கல்

குரு நிற்பதால் ஏற்படும் பலன்கள்

  • வீடு, வாகன யோகமுண்டு
  • பெருந்தன்மை உள்ளவர்கள் பணக்காரர்கள்
  • பணம் சம்பாதிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர்கள்
  • கணக்கில் வல்லவர்கள்
  • படிப்பாளி அரசியலில்
  • பேரும் புகழும் பெறக்கூடிய யோகமுண்டு
  • மணவாழ்வில் சந்தோஷமாக இருக்கக்கூடியவர்கள்
  • மாமனாரால் ஆதாயம் உண்டு

சனி நிற்பதால் ஏற்படும் பலன்கள்

  • தனிமையை விரும்பக் கூடியவர்கள்
  • கடின உழைப்பாளிகள்
  • பற்களில் நோய் உள்ளவர்கள் உடையவர்கள்
  • எதையும் பொறுமையாக செய்யக்கூடியவர்கள்
  • தாயின் அன்பு கிடைக்காது
  • பிடிவாத குணம் மிக்கவர்கள்
  • நேர்மையானவர்கள்
  • இவரால் பிள்ளைகளுக்கு ஆதாயம் உண்டு

புதன் நிற்பதால் ஏற்படும் பலன்கள்

  • சொந்த பந்தங்கள் மூலம் பிரச்சனை உண்டு
  • நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள்
  • மனக் கோட்டை கட்டுபவர்கள்
  • கல்வியில் தடை
  • தந்திரசாலிகள்
  • புத்திசாலித்தனமாக பேசக்கூடியவர்கள்
  • விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை உள்ளவர்கள்
  • பரபரப்பானவர்கள்
  • தாய் தந்தை மீது பாசம் உள்ளவர்கள்
  • தெய்வ நம்பிக்கை உள்ளவர்கள்
  • சிற்றின்பத்தில் ஈடுபாடு மிக்கவர்கள்
  • நுரையீரல் சார்ந்த பிரச்சனை உண்டு
  • பிறரிடம் அன்பு , அனுசரணையாக இருக்கக்கூடியவர்கள்
  • பூர்விக சொத்தில் பிரச்னை

மேலும் படிக்க : மிதுன ராசி காரகத்துவங்கள் மற்றும் பாவ பலன்கள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top