கன்னி ராசி
கன்னி ராசி கால புருஷனுக்கு ஆறாவது ராசி. இதன் பாகை 150 முதல் 180 வரை உள்ளது. இது ஒரு நில ராசி. இரட்டைப்படை ராசி. பெண் ராசி. உபய ராசி. இதன் அதிபதி புதன். இந்த ராசியில் புதன் உச்சம் அடைகிறது. சுக்கிரன் நீசம் அடைகிறார. நெற்கதிர் ஏந்திய பெண் வடிவம் உடையது. தத்துவத்தில் கர்ம தத்துவத்தை குறிக்கும்.
கன்னிராசிகாரர்கள் அறிவுக்கூர்மை, நினைவாற்றலும், எதையும் எளிதில் புரிந்து கொள்ளுதல் போன்ற சிறப்பு தன்மைகளை பெற்றிருப்பார்கள். சகிப்புத்தன்மை உடையவர்கள். மிகவும் புத்திசாலிகள். ஆழ்ந்த ஞானம் அறிவுத் திறனால் மற்றவர்களை தன் வசம் ஈர்த்து கொள்வார்கள். அறிவை நேர்மையான வழியில் பயன்படுத்தினால் முன்னேறதாம் உண்டு . உழைப்பிற்கேற்ற உயர்வை அடையக்கூடியவர்கள்.
இனிமையாக பேசக் கூடியவர்கள். பயணம் செய்ய விருப்பம் உடையவர்கள். காம உணர்ச்சி மிக்கவர்கள். உத்திரம் நட்சத்திரத்தின் 2,3,4 பாதங்களும். ஹஸ்தம் நட்சத்திரத்தின் 4 பாதங்களும், செவ்வாய் நட்சத்திரத்தின் 1,2 பாதங்களும் இந்த ராசியில் உள்ளன.
பச்சை, மஞ்சள், நீலம் வண்ணங்கள் நன்மை பயக்கும். திங்கள், புதன், வெள்ளி போன்ற நாட்கள் நன்மை தரும். ஆனி, ஆடி, புரட்டாசி போன்ற தமிழ் மாதங்கள் நன்மையை தரும்.
பொதுவான காரகத்துவங்கள்
- பசுமை
- பூந்தோட்டம்
- விளையாட்டு மைதானம்
- அலங்கார பொருட்கள்
- செயற்கை பட்டு
- பால் பண்ணைகள்
- தாமத புத்திரம்
- ஆடைகள்
- வெளிநாட்டு வருமானம்
- கூட்டுறவு சங்கம்
- நஞ்சை, புஞ்சை நிலங்கள்
- வில்வித்தை
- பாதுகாப்பு கலைகள்(கராத்தே)
- அசாத்திய தைரியம்
- கடன்
- தடைகள்
- நோய்
- நாய் வளரும் வீடு
- அடிவயிறு
- குடல்
- எருமை
- கொள்ளு
- அரிசி
இடங்கள்
- விவசாய நிலங்கள்
- விளையாட்டு மைதானங்கள்
- ஆசிரமம்
- பூங்காக்கள்
- கல்விசாலைகள்
- இரவு விடுதிகள்
தொழில்கள்
- பாதுகாப்பு துறை
- ஆசிரியர்
- ஜோதிடர்
- சலூன் கடை
- கசாப்பு கடை
- எழுத்தாளர்
- சில்லறை வியாபாரம்
நோய்கள்
- வயிற்று வலி
- வயிற்றுப்போக்கு
- குடல் புண்
- குடல் வீக்கம்
தோற்றம்
- அழகான மாநிற உடல்
- இளமையான தோற்றம்
- அழகான கண்கள்
- கொழுத்த கன்னம் மற்றும் தாடைகள் உடையவர்கள்
- ஒல்லியான உருவம்
- சராசரி உயரம் உடையவர்கள்
சிறப்பான குணங்கள்
- மிகவும் புத்தி கூர்மை உடையவர்கள்
- மிக நுட்பமானவர்கள்
- தூதுவர்கள்
- அறிவாளிகளை ஊக்குவிப்பவர்கள்
- பல்வேறு துறைகளில் ஈடுபாடு
- அன்பாக பேசக்கூடியவர்கள்
மாற்றிக்கொள்ள வேண்டிய குணங்கள்
- குழப்பவாதிகள்
- தன்னம்பிக்கை இல்லாதவர்கள்
- தற்பெருமை, கர்வம், ஆடம்பரம் உடையவர்கள்
- மற்றவரை குறை சொல்லுதல்
கன்னிராசியின் பொதுவான பாவ பலன்கள்
1-ம் பாவம்
- இளமையான தோற்றம் உடையவர்கள்
- சேவை செய்யும் எண்ணம் உண்டு
- கஞ்சத்தனம் மிக்கவர்கள்
- பெண்குழந்தைகள் அதிகம்
- பொறுமைசாலிகள்
- படிப்பில் ஆர்வம் உண்டு
- வசீகரமான தோற்றம் உடையவர்கள்
- இயற்கை விரும்பி
- குறைவான உணவை விரும்புபவர்
- ஞாபகசக்தி அதிகம் மிக்கவர்கள்
- தான் கற்றதை பிறருக்கு மறக்காமல் எடுத்து கூறுபவர்கள்
- சுய முயற்சியால் முன்னேறியவர்கள்
- உறவுகளால் மனக்கசப்பு உண்டு
2-ம் பாவம்
- புலமை உண்டு
- நல்ல பேச்சாளர்கள்
- தொழிலில் திருப்தியின்மை
- மேடைப்பேச்சில் ஆர்வமுண்டு
- தந்தையால் ஆதாயம் உண்டு
- மொழி மாற்றம் செய்வதில் வல்லவர்கள்
- டப்பிங் தொழில் சிறப்பு
- வழக்கறிஞர், அரசியல் போன்ற பதவிகள் தேடி வரும்
- படிப்புக்கும் வேலைக்கும் சம்பந்தம் இல்லை
- சொத்து பிரச்சினை உண்டு
- கூட்டுத் தொழிலில் நஷ்டம் ஏற்படும்
- திருமணத்திற்குப்பின் சொத்து அமையும்
- பினாமியாக இருப்பார்கள்
- கூட்டுத் தொழிலில் முதலீடு ஆகாது நஷ்டமே மிஞ்சும்
- மனைவியுடன் கருத்து வேறுபாடு உண்டு
- ஜோதிடத்தால் ஆதாயம் உண்டு
- இதிகாசங்கள் கற்பதில் விருப்பம் உண்டு
3-ம் பாவம்
- சகோதரர்கள் உண்டு
- சகோதரர்களுக்கு கண்டம் உண்டு
- சகோதரர்கள் பற்றிய கவலை உண்டு
- பொய் சொல்வது பிடிக்காது
- ENT பிரச்சினை உண்டு
- விருப்ப திருமணம் உண்டு
- சிறு வியாதிக்கு பெரிய சிகிச்சை எடுத்துக் கொள்வார்
- மாமன் அவர்களுடன் கருத்து வேறுபாடு உண்டு
- வம்பு வழக்கு உண்டு
- புத்தகம் எழுதுவதில் ஆர்வம் உண்டு
- ஆடை, ஆபரணம், சொத்து உண்டு
- எந்த ஒரு விஷயத்திலும் ஒருமுறைக்கு மேல் முயற்சி செய்வது முன்னேற்றத்தை தரும்
4-ம் பாவம்
- தாய்ப்பாசம் உடையவர்
- வாகன யோகம் உண்டு
- குடும்பத்தில் பிரச்சினை உண்டு
- சுகமான வாழ்க்கை அமையும்
- வீடு தாமதமாக அமையும் அவற்றுள் பிரச்சனை உண்டு
- புத்தகம் படிப்பதில் ஆர்வம் உண்டு
- சாஸ்திரங்களை கற்பதில் விருப்பம் உள்ளவர்கள்
- புத்தகத்திற்கு அதிகம் செலவழிப்பார்
- எதையும் எச்சரிக்கை உணர்வோடு பார்ப்பார்
- பதவி உண்டு
- மின்சாரத்துறை, வங்கித்துறை போன்ற துறைகளால் முன்னேற்றம் உண்டு
5-ம் பாவம்
- பெண் குழந்தை உண்டு
- குழந்தை பிறப்பு தாமதம்
- கலை துறையில் அதிக ஆர்வம் உண்டு
- குழந்தையால் கடன்
- சொத்துக்களை பிள்ளைகளால் அனுபவிக்க இயலாது
- தாத்தா பதவியில் இருப்பார்
- தாத்தாவுக்கு கண்டம் நோய் உண்டு
- தாய்மாமனுக்கு கடன், பதவி உண்டு
- பிறர்களுக்கு பினாமியாக இருப்பார்கள்
- திட்டங்களை நன்றாக தீட்டுவார்கள் அதனால் வெற்றியும் பெறக்கூடியவர்கள்
6-ம் பாவம்
- உத்தியோகம் தேடி வரும்
- உத்தியோகத்தில் தடை தாமதம் உண்டு
- கடன் வாங்குவதில் விரும்பாதவர்கள், கடன் வாங்காமல் இருப்பது நல்லது
- நரம்பு, தோல் வியாதிகள் ஏற்படும்
- குழந்தைகளுக்கு நோய் கொண்டு
- வேலையை விட்டு கொடுப்பார்
- திறமைக்கும் வேலைக்கும் சம்பந்தம் இருக்காது
- வம்பு, வழக்கால் விரயம் உண்டு
7-ம் பாவம்
- தாய்வழி உறவு அல்லது உள்ளூரில் மனைவி
- மனைவி ஊரில் அல்லது பெயரில் சொத்து
- படிக்கும்போதே திருமணம்
- குடும்ப நிர்ப்பந்தத்தால் திருமணம் செய்வார்கள்
- மனைவி வேலைக்கு செல்பவராக இருப்பார்
- மனைவி ஆசிரியர் தொழிலில் இருப்பார்
- களத்திரத்துடன் கருத்து வேறுபாடு உண்டு
- மனைவிக்கு நோய் உண்டு
- நண்பர்களை நம்பக்கூடாது
- மனைவியின் ஆதிக்கம் உள்ள வீடு
- வாடிக்கையாளர்கள் அதிகம் வைத்திருப்பவர்கள்
- தார தோஷம் உண்டு
- பெண்களிடம் கவனம் தேவை, அவர்களால் ஏமாற்றம் உண்டு
8-ம் பாவம்
- நெருப்பு கண்டம் உண்டு
- வம்பு வழக்கு போலீஸ் பிரச்சினை உண்டு
- இன்சூரன்ஸ் பிரச்சனை உண்டு
- மனைவிக்கு கண்டம் உண்டு
- குடல் சம்பந்தமான நோய் உண்டு
- திடீர் அதிர்ஷ்டம் உண்டு
- தீ விபத்து, எலக்ட்ரிக் ஷாக் போன்றவற்றால் பாதிப்பு ஏற்படும்
- தலை சார்ந்த பிரச்னை உண்டு
9-ம் பாவம்
- தந்தை புகழ் மிக்கவர்
- குருமார்களின் ஆசீர்வாதம் இருக்கும்
- தந்தை வருமானம் உடையவர்
- தந்தைக்கு மணவாழ்வில் பிரச்சனை உண்டு
- பெண்களுக்கு கர்ப்பப்பை பிரச்சனை உண்டு
- தந்தைக்கு இரண்டு வருமானம் உண்டு
- பெரிய மனிதர்களின் நட்பு உண்டு
- தந்தை வழி சொத்துக்களால் ஆதாயமில்லை
- உயர்கல்வியால் முன்னேற்றம் உண்டு
- தந்தை வெளிநாட்டு வருமானம் ஈட்ட கூடியவர்
10-ம் பாவம்
- முயற்சிக்கு ஏற்ப தொழிலில் முன்னேற்றம் உண்டு
- சொந்தத் தொழில் செய்யும் எண்ணம்
- ஜீவன குறையில்லை
- பத்திரிக்கை, ஆசிரியர், எடிட்டர், நூலகர், ஆடிட்டர் வக்கீல், ஜோதிடர், வாகனம் தொடர்பான தொழில்கள் அமையும்
- LIC,PF ஆதாயம் உண்டு
- அரிசி மளிகை கடை தொழில்கள் சிறப்பு தரும்
- தகவல் தொடர்பு துறை,வானொலி, தொலைக்காட்சி, செய்தி துறை போன்ற தொழில்களும் அமையும்.
11ம் பாவம்
- மூத்த சகோதரர்களால் லாபம் உண்டு
- வீடு, சொத்து, வாகனம் இவற்றால் லாபம் உண்டு
- தெய்வ அருள் உண்டு
- தாயால் ஆதாயம் உண்டு
- மூத்த சகோதரர்களின் மணவாழ்வு சரியாக இருக்காது
- தவறான பழக்க வழக்கம் உண்டு
- நண்பர்கள் உண்டு
- நண்பர்களால் ஆதாயம் உண்டு
- சித்தப்பாவால் ஆதாயம் உண்டு
12-ம் பாவம்
- மது, சூது விளையாடுவதில் விருப்பம் உண்டு
- சுற்றுலா செல்வதில் விருப்பம் உண்டு
- தாய்வழி தந்தைவழி உறவுகளால் கௌரவக் குறைவு உண்டு
- அரசாங்கத்திற்கு தண்டம் கட்டுவார்
- அரசு வேலை தொடர்பாக பணம் கொடுத்து ஏமாற்றுதல்
- தூக்கப் பிரச்சினை உண்டு அதற்கு மருந்து எடுத்துக் கொள்வார்
- காதல் பிரச்சினை உண்டு
- குழந்தைகளால் விரயம் உண்டு
- குடும்பத்தில் காணாமல் போனவர்கள் உண்டு
கன்னியில் ஒன்பது கோள்கள் நிற்பதால் ஏற்படும் பலன்கள்
கேது நிற்பதால் ஏற்படும் பலன்கள்
- கல்வியில் தடை தாமதம்
- ஆன்மீகத்தில் ஈடுபாடு
- சொத்தால் வம்பு, வழக்கு
- கூட்டாளி பிரச்னை உண்டு
சுக்கிரன் நிற்பதால் ஏற்படும் பலன்கள்
- எந்த ஒரு காரியத்திலும் ஈடுபாடு இல்லாதவர்கள்
- குறிக்கோள் இல்லாதவர்கள்
- வீண்பேச்சு பேசுபவர்கள்
- வம்பு காரர்கள் சுயநலம் மிக்கவர்கள்
- தன்னம்பிக்கை இல்லாதவர்கள்
- அவர் தன்மை உடையவர்கள்
சூரியன் நிற்பதால் ஏற்படும் பலன்கள்
- இலக்கியத்துறையில் புகழ் பெறக்கூடியவர்கள்
- புத்தகம் படிப்பதில் விருப்பமுள்ளவர்கள்
- பல மொழிகளைப் படிக்க விருப்பமுள்ளவர்கள்
- ஒல்லியான தேகம் உடையவர்கள்
- ஆலோசித்து முடிவு செய்பவர்கள்
- எந்த சூழ்நிலையிலும் அனுசரித்து செல்ல கூடியவர்கள்
- பொறுமைசாலிகள்
- சங்கீதத்தில் விருப்பம் உள்ளவர்கள்
- கல்வி கற்பதில் ஆர்வம் உள்ளவர்கள்
- பரந்த மனப்பான்மை உள்ளவர்கள்
- மதப் பற்று உள்ளவர்கள்
- விவேகமானவர்
சந்திரன் நிற்பதால் ஏற்படும் பலன்கள்
- அழகான உடல்வாகு உள்ளவர்கள்
- இனிமையான பேசக்கூடியவர்கள்
- ஜோதிடத்தில் விருப்பம் உள்ளவர்கள்
- நடனம் நாட்டியம் இவற்றில் விருப்பமுள்ளவர்கள்
- ஜீவனத்துக்கு கூறவில்லை
- நிதானமாக முடிவு எடுக்கக் கூடியவர்கள்
செவ்வாய் நிற்பதால் ஏற்படும் பலன்கள்
- சண்டை சச்சரவு அதிகமாக செய்யக்கூடியவர்கள்
- பிறரைப் பழிவாங்கும் ஆர்வமுள்ளவர்கள்
- இவர்களே தன்னை தானே ஏமாற்றி கொள்பவர்கள்
- எதிலும் திருப்தி காணாதவர்கள்
- சொந்த தொழில் செய்ய விருப்பம், அவற்றால் ஆதாயமும் இல்லை
- கணிதம்,விஞ்ஞானம், ஜோதிடம் இவற்றில் நல்ல ஞானம் உடையவர்கள்
ராகு நிற்பதால் ஏற்படும் பலன்கள்
- கடன் பிரச்னை
- எதிரிகளால் வம்பு, வழக்கு
- கலிமனை பிரச்னை உண்டு
- தோல்நோய் அல்லது நாட்பட்ட வியாதிகளால் பாதிப்பு
- IT துறையால் ஆதாயம் உண்டு
- கல்வியில் தடை உண்டு
குரு நிற்பதால் ஏற்படும் பலன்கள்
- சாதித்த மாணவர்கள்
- அன்பானவர்கள்
- சந்தோசமாக வாழக்கூடியவர்கள்
- வாழ்க்கையில் அனைத்து விதமான சந்தோஷங்களையும் அடியக்கூடியவர்கள்
- சகிப்புத்தன்மை உள்ளவர்கள்
- இடம் பொருள் அறிந்து பேசக்கூடியவர்கள்
- பிறருக்காக தன் முயற்சியை விட்டுக் கொடுக்கக் கூடியவர்கள்
- பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் அடைய கூடியவர்கள்
- சுக துக்கங்களை சமமாக நினைப்பவர்கள்
சனி நிற்பதால் ஏற்படும் பலன்கள்
- சோம்பேறிகள்
- திருமண வாழ்க்கையில் பிரச்சினை உண்டு
- முன்னேற்றத்தில் முயற்சி இல்லாதவர்கள்
- திருமண வாழ்வில் பிரச்சனை உண்டு
- சண்டையிட ஆர்வமுள்ளவர்கள்
- முரட்டு சுபாவம் கொண்டவர்கள்
- எப்போதும் சோகமாகவே இருக்கக்கூடியவர்கள்
புதன் நிற்பதால் ஏற்படும் பலன்கள்
- உணர்வு மிக்கவர்கள்
- எளிதில் மற்றவரை எடை போட்டுவிடுவார்கள்
- தாராள மனப்போக்கை உள்ளவர்கள்
- உண்மையைப் பேசுபவர்கள்
- மேடைப் பேச்சு பேசுவதில் வல்லவர்கள்
- ஜோதிடம் புவியியல் சார்ந்த அறிவு உள்ளவர்கள்
- சுய கட்டுப்பாடு உள்ளவர்கள்
- பயம் இல்லாதவர்கள்
- கோபம் உள்ளவர்கள்
மேலும் படிக்க : சிம்ம ராசி காரகத்துவங்கள் மற்றும் பாவ பலன்கள்
மேலும் படிக்க : அடிப்படை ஜோதிடம் -1