கும்ப ராசி
கும்ப ராசி கால புருஷனுக்கு இது 11-வது ராசியாகும். இதன் பாதை 300 முதல் 330 வரை உள்ளது. இது ஒரு காற்று ராசி. ராசி ஒற்றை படை ராசி. ஆண் ராசி.
இதன் அதிபதி சனி பகவான். கலசம் ஏந்திய பானையின் வடிவத்தை உடைய ராசி. இந்த ராசியில் அவிட்டம் நட்சத்திரத்தில் ஒன் 3 4 பாதங்களும் சதயம் நட்சத்திரத்தில் 12 3 4 பாதங்களும் பூரட்டாதி நட்சத்திரத்தின் ஒன்று இரண்டு மூன்று பாதங்களும் உள்ளன.
இந்த ராசிக்காரர்கள் அன்பானவர்களை. கருணை. இரக்கம், பிறருக்கு உதவும் தன்மை, மனித மனம் போன்றவற்றை கொண்டவர்கள். உள்ளுணர்வு மிக்கவர்கள். அவன் முகத்தை பார்த்து அவர்களை எடை போட்டுவிடுவார்கள். புத்திசாலித்தனம் மிக்கவர்கள். ஆன்மீகத்தில் ஈடுபாடு மிக்கவர்கள். அதிக நுட்பமான அவர்கள் நண்பர்களிடம் அன்பாக இருப்பவர்கள். சுத்தம் சுகாதாரம் ஒழுக்கம் போன்றவற்றை உடையவர்கள். மாசி, பங்குனி, வைகாசி, ஆனி, ஆவணி, கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் நன்மையை தரும் சனி புதன் போன்ற கிழமைகள் நன்மையை தரும்
பொதுவான காரகத்துவங்கள்
- காற்று ராசி
- பிரபஞ்சி ராசி
- கால பைரவர்
- யமதர்மன் ராசி
- கும்ப கர்ணன் ராசி
- நாதஸ்வரம், புல்லாங்குழல்,வீணை, தவில்
- மணியோசை
- லாப ஸ்தானம்
- மூத்த சகோதரன்
- நண்பர்கள்
- கோவில் கோபுரம்
- ஆராய்ச்சி மிகுந்தது
- ஏற்ற இறக்கம் இருக்கும்
- அடுத்தவர் கடனை ஏற்று கொள்ளும் ராசி
- தற்கொலை ராசி
- நம்பி மோசம் போதல்(ஏமாளி)
- குடுகுடுப்பு, சாட்டை
- விசுவாசமானது (உண்ட வீட்டிற்கு துரோகம் செய்யாது)
- ஜாமீன் போடக்கூடாது
- ரேடியோ, டிவி நிலையங்கள்
- கருங்கல்,ஓடு
- செக்கு ஆயில் மில்
- கொசுவலை, மீன்வலை, கோழி வலை
- கதவு, ஜன்னல்
- பூகம்பம்
- பாலைவனம்
- தண்டுவடம் (கூன் விழுதல்)
- கருச்சிதைவு
- எலிக்கூண்டு
- மிக்சி, பிரிட்ஜ், கிரைண்டர்
- சிங்கம்,குதிரை,ஒட்டகம்,எலி
- முழங்கால்
- கணுக்கால்
உணவுப்பொருட்கள்
- சமையல் எண்ணெய்கள்
- பேரிச்சம் பழம்
இடங்கள்
- நீர் சேமிப்பு தொட்டி
- பாத்திரங்கள் உள்ள கிடங்கு
- இருட்டு பகுதிகள்
- ரகசியமான இடங்கள், குகைகள்
- குயவர் குடியிருப்பு பகுதிகள்
- தொழிற்சாலைகள் உள்ள இடங்கள்
தொழில்கள்
- ஆசிரியர்
- ஜோதிடர்
- கிராம நிர்வாகம்
- ஆராய்ச்சி துறை
- விமான துறை
- ஆகாயத்தொடர்பு சார்ந்த துறை
- உளவுத்துறை
- தொல்பொருள் ஆராய்ச்சி துறை
- சுரங்க தொழில்
நோய்கள்
- கால்வலி
- கணுக்கால் வீக்கம்
பொதுவான குணங்கள்
தோற்றம்
- மெல்லிய மாநிற உடல்
- கவர்ச்சியான தோற்றம்
- உயரமானவர்கள்
- அழகான கண்கள் உடையவர்கள்
சிறப்பான குணங்கள்
- உண்மையானவர்கள்
- அறிவாற்றல் நிரம்பியவர்கள்
- கருணை, இரக்கம், தாராள மனப்பான்மை உடையவர்கள்
- பிறருக்கு உதவும் மனபான்மை
- கடின உழைப்பாளிகள்
- ஆழ்ந்த சிந்தனை உடையவர்கள்
- புன்னகையுடன் இருப்பார்கள்
மாற்றிக்கொள்ள வேண்டிய குணங்கள்
- சுய நலம்
- பிடிவாதம், தெனாவட்டு
- காரணமில்லாமல் சண்டையிடுபவர்கள்
- உணர்வுகளை தூண்டினால் மனக்குழப்பம் அடைவார்கள்
மேலும் படிக்க : மகர ராசி
கும்ப ராசியின் பொதுவான பாவ பலன்கள்
1-ம் பாவம் கும்ப ராசியாக அமைவதால் ஏற்படும் பலன்கள்
- குள்ளமாகவும் ஒல்லியான தோற்றம் நபராக இருப்பார்கள்
- ரகசியம் காக்க கூடியவர்கள்
- உறுதியான குழுக்களை கொள்கைகளை உடையவர்கள்
- பொறுமைசாலிகள்
- நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள்
- இயல், இசை, நாடகம் போன்றவற்றில் ஆர்வம் உள்ளவர்கள்
- எதிர்காலத்தில் உள்ளதை முன்கூட்டியே அறியும் ஆவல் உடையவர்கள்
- ஞாபகசக்தி அதிகம் உண்டு பிறரை எடை போடுவதில்
- சாமர்த்தியசாலிகள்
- தெரிந்த விஷயங்கள் வெளிப்படையாக காட்டிக்கொள்ள மாட்டார்கள்
- வாழ்க்கையில் ஒருமுறையேனும் காணாமல் போய்விடுவார்கள்
- வீண் வம்பு வழக்கு செல்லமாட்டார்கள்
- நியாயமானவர்கள்
- கேலி கிண்டல் இவற்றைப் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்
- நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள்
- தன் கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டார்கள்
2-ம் பாவம் கும்ப ராசியாக அமைவதால் ஏற்படும் பலன்கள்
- அவசரம் அல்லது உரத்த குரலில் பேசக்கூடியவர்கள்
- ஒளிவு மறைவின்றி பேசக்கூடியவர்
- இவரிடம் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
- குடும்பத்தை விட்டு சிறுவயதிலேயே பிரிந்து வாழ சூழ்நிலை உண்டாகும்
- சிறுவயதிலேயே குடும்ப பொறுப்பை ஏற்கக் கூடியவர்கள்
- தக்க வயதில் திருமணம் நடக்கும் சிலருக்கு சிறு வயதிலேயே நடக்கும்
- திருமணத்துக்குப்பின் குடும்பத்தில் ஒற்றுமை இருக்காது
- பணப்பற்றாக்குறை இருந்துக் கொண்டே இருக்கும் கையில் பணம் தங்காது
- பணத்தை பிறருக்கு கொடுத்து விட்டு தேவையான தருணத்தில் பெறமுடியாமல் தவிப்பார்கள்
3-ம் பாவம் கும்ப ராசியாக அமைவதால் ஏற்படும் பலன்கள்
- இளைய சகோதரம் இருக்காது
- வாதாடுவது திறமையானவர்கள்
- உடல் உழைப்பு குறைவு
- எந்த ஒரு காரியமும் எளிதாக முடியாது
- ஆனால் முடியாத காரியத்தை முயற்சிசெய்து வெற்றி பெறுவான்
- மாமனார் பகை இருக்கும்
- வாகன யோகமுண்டு
- பரிசு வாங்கும் யோகம் உண்டு
- கவிதை கட்டுரை ஈடுபாடு அதிகம்
4-ம் பாவம் கும்ப ராசியாக அமைவதால் ஏற்படும் பலன்கள்
- கருத்து வேறுபாடு அனைவரிடம் உண்டு
- தாயாருக்கு நோய் உண்டு
- ஆடம்பர வசதிகளை விரும்ப மாட்டான் ஆனால் தானாக வந்தாலும் ஏற்றுக் கொள்வார்
- வயது உயர உயர வசதி மேலும் மேலும் வளரும்
- துன்பத்தைத் தாங்கிக் கொள்ளமாட்டார்கள்
- 40 வயதுக்கு மேல் உறவினர்களும் செல்வாக்குடன் வாழ்ந்து புகழை அடையக் கூடியவர்கள்
- சுயமுயற்சியால் வீடு வாகனம் சொத்து உண்டு
- சட்டம் மருத்துவம் கலை இலக்கியம் சார்ந்த படிப்பு உண்டு
- ஒருசிலர் அரசுப்பணி உண்டு எத்துறையில் இருந்தாலும் அத்துறையில் நிபுணத்துவம் பெற்றவராக இருப்பார்
- பிறருக்கு கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் நிலைக்கு உயர கூடியவர்
5-ம் பாவம் கும்ப ராசியாக அமைவதால் ஏற்படும் பலன்கள்
- இரண்டு குழந்தை
- குழந்தைகளுக்கு மருத்துவம் பார்க்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும்
- குழந்தைக்கு ஆயுள் கண்டம் விபத்து இருக்கும்
- குழந்தைக்காக ஒரு நாளாவது காவல்துறை போக வேண்டி இருக்கும்
- குழந்தைக்கு உயிர் சொத்து உண்டு
- அது இரண்டு சொத்தாக இருக்கும்
- உயர்கல்வி உண்டு
- இரண்டு குல தெய்வம்
- குலதெய்வ வழிபாட்டில் தடை இருக்கும்
- ஆண் பெண் இரண்டும் சேர்ந்த குலதெய்வம் உண்டு
- திட்டம் தீட்டுவதில் வல்லவர்கள் அதை நிறைவேற்றுவதில் கடும் முயற்சி இருக்கும்
- தாய்மாமனுக்கு கண்டம் உண்டு
- உயிர் சொத்து உண்டு
- தாய்மாமனுக்கு மணவாழ்வில் பிரச்சினை உண்டு
- காதல் தோல்வி உண்டு
- குழந்தை வெளிநாட்டில் அல்லது வெளி மாநிலத்தில் படிக்கும்
- ஆரம்பம் ஓரிடத்தில் வேலை செய்யமுடியாது
6-ம் பாவம் கும்ப ராசியாக அமைவதால் ஏற்படும் பலன்கள்
- உத்தியோகம் உண்டு அடிக்கடி இடமாற்றம் உண்டு
- டாஸ்மார்க், ரத்த பரிசோதனை நிலையம், பால்பண்ணை, ஏற்றுமதி-இறக்குமதி நிறுவனங்களில் தொழில் அமையலாம்
- அரசு வேலைகளில் ஆசிரியர்
- ஜோதிட துறையில் நல்ல முன்னேற்றம் உண்டு
- பழக்கடை, நீர் சம்பந்தப்பட்ட வியாபாரம் அமையலாம்
- அறிவியல் சார்ந்த தொழில்கள் நல்ல பலனைத் தரும்
- ரயில்வேயில் வேலை கிடைக்கும்
- தைராய்டு, கர்ப்பப்பை தொடர்பான நோய்கள் உண்டு
- கடன் உண்டு
- தாயைப் பற்றி கவலைப் படுதல்
- எதிரியை பற்றிய கவலை இருந்து கொண்டே இருக்கும் நேரமும் விருப்பம்
- இனிப்பு உண்பதை குறைக்க வேண்டும்
- கடனை அடைத்து விடுவார்கள்
7-ம் பாவம் கும்ப ராசியாக அமைவதால் ஏற்படும் பலன்கள்
- மனைவி ஆதிக்க குணம் உடையவராக இருப்பார்
- குடும்பப் பெருமை பற்றி அதிகம் பேசிக்கொண்டிருப்பார்
- மனைவிக்கும் சொத்து உண்டு அதில் பிரச்சினையும் உண்டு
- குடும்ப வாழ்வில் ஒரு சில குறைபாடு உண்டு
- வாழ்க்கைத்துணை அதிக கற்பனைவளம் உடையவராக இருப்பார்
- அரசுத் துறை சார்ந்த நண்பர்கள் அதிகம் இருப்பார்கள்
- இரண்டாவது குழந்தை பிரபலமடையும்
- வாடிக்கையாளர்கள் அரசியல்வாதிகள் போல் நிரந்தரமாக இருப்பார்
- புதியவர்கள் அமைவது சிரமமாக இருக்கும்
8-ம் பாவம் கும்ப ராசியாக அமைவதால் ஏற்படும் பலன்கள்
- ஜாதகருக்கு நீண்ட நோய் இருக்கும் அது நரம்பு தோல் சம்பந்தப்பட்ட நோயாக இருக்கலாம்
- வளர்ச்சி குறைபாடு உண்டு
- மாமனார், மாமன் வகையில் கண்டம் உண்டு
- அதிக செலவு செய்தல்
- அடிக்கடி உயிர் பயம் இருக்கும்
- பூர்வீக சொத்து உண்டு
- திடீர் அதிர்ஷ்டம் உண்டு
- அடிக்கடி பொருளைத் கூடியவர்கள்
9-ம் பாவம் கும்ப ராசியாக அமைவதால் ஏற்படும் பலன்கள்
- தந்தைக்கும் இவருக்கும் ஒத்துப்போகாது
- தீய பழக்கம் உண்டு
- விபத்து கண்டம் உண்டு
- தந்தை போராடி முன்னேற கூடிய நபர்
- தந்தைக்கு புகழ் உண்டு
- அத்தை மணவாழ்வு திருப்தி இல்லை
- தந்தைக்கு வழக்கு அதில் வெற்றியும் உண்டு
- ஆன்மிக பயணங்கள் உண்டு
- பல இடங்களுக்கு சென்று வர விருப்பம் உண்டு
- ஓவியம், படம் வரைவதில் வல்லவர்கள்
- பெண்களால் கர்ப்பப்பை பிரச்சனை உண்டு
10-ம் பாவம் கும்ப ராசியாக அமைவதால் ஏற்படும் பலன்கள்
- வட்டிக்கடை நகை வியாபாரம் வங்கி சார்ந்த தொழில் அமையலாம்
- ஆட்சியர், மேலாளர் போன்ற பொறுப்பான உத்தியோகம் உண்டு
- நீதி, நீதி துறைகளில் தொழில் அமையலாம்
- ராணுவம், போலீஸ், தீயணைப்பு துறை, மருத்துவம், ஆசிரியர் போன்ற தொழில்களும் அமையும்
- படகு, கப்பல், மின்சாரத்துறை, ரயில்வே, விமானம் போன்றவற்றில் தொழில் அமையலாம்
- ஜோதிடத்தில் ஆர்வம் உண்டு
- கர்மங்களில் கலந்து கொள்வதில் தடை இருந்து கொண்டே இருக்கும்
- தந்தைவழி உறவுகளை பிரிந்து வாழ நேரிடும்
11-ம் பாவம் கும்ப ராசியாக அமைவதால் ஏற்படும் பலன்கள்
- மூத்த சகோதர ஆதரவு உண்டு
- வெளிமாநிலத்தில் தொடர்பு உண்டு
- மூத்த சகோதரர் வாழ்வில் பிரச்சனை உண்டு
- நண்பர்களால் ஆதாயம் உண்டு
- நல்ல நண்பர்களாக அமைவார்கள்
- ரகசியம் காப்பதில் வல்லவர்
12-ம் பாவம் கும்ப ராசியாக அமைவதால் ஏற்படும் பலன்கள்
- காலதாமதமாக கூடியவர்கள்
- இரவில் சுற்றுவது இவருக்குப் பிடிக்கும்
- சுற்றுலா செல்வதில் விருப்பம் உடையவர்கள்
- நீண்டதூரப் பயணங்களில் ஈடுபாடு உள்ளவர்கள்
- கால் சம்பந்தப்பட்ட பிரச்சினை உடையவர்கள்
- நிறைவான தாம்பத்தியம்
- வெளிநாடு செல்லும் முயற்சிகளுக்கு அதிக தேவை இருக்கும் போராடி செல்லவேண்டியிருக்கும்
கும்ப ராசியில் நவகிரகங்கள் நிற்பதால் ஏற்படும் பலன்கள்
கேது நிற்பதால் ஏற்படும் பலன்கள்
- பொருளாதாரத்திற்கு நல்ல அமைப்பு
- அனைத்து காரியத்திலும் வெற்றி
- பொருளாதாரத்தில் ஞானம் உண்டு
- உயர் பதவி உண்டு
- போராட்டத்தை அதிகம் சந்திக்க கூடியவர்கள்
சுக்கிரன் நிற்பதால் ஏற்படும் பலன்கள்
- மனமும் உள்ளவர்கள் அழகானவர்கள்
- விடாமுயற்சி உள்ளவர்கள்
- சராசரி உயரம் உள்ளவர்கள்
- அழகான சருமத்தை உடையவர்கள்
- பயந்த சுபாவம் உடையவர்கள்
- நகைச்சுவையாக பேசக்கூடியவர்கள்
- ஒழுக்கமானவர்கள்
- பிறருக்கு உதவ கூடியவர்கள்
- அனைவரிடமும் நட்பாக பழகுகிறார்கள்
- மனம்திறந்து பேசக்கூடியவர்கள்
- பண்பு நிறைந்தவர்கள்
சூரியன் நிற்பதால் ஏற்படும் பலன்கள்
- வாழ்க்கையில் கஷ்டங்களை அனுபவிக்கக் கூடியவர்கள்
- பிறர் உதவியால் முன்னுக்கு வரக் கூடியவர்கள்
- வெற்றி என்பது அரிதாக கிடைக்க கூடியது
சந்திரன் நிற்பதால் ஏற்படும் பலன்கள்
- அழகான வசீகரமான தோற்றம் உடையவர்கள்
- மனதில் எப்போதும் கவலையோடு காணப்படுவார்கள்
- நேர்மையானவர்கள்
- யாரையும் ஏமாற்ற மாட்டார்கள்
- பிறருக்காக தியாகம் செய்யக் கூடியவர்கள்
- சுறுசுறுப்பாக இருப்பார்கள்
- மாணவர்கள் நன்றி மறவாதவர்கள்
செவ்வாய் நிற்பதால் இருக்கும் பலன்கள்
- வாழ்நாளில் அதிக கஷ்டத்தை அனுபவிக்க கூடியவர்கள்
- எந்த காரியத்தை செய்தாலும் ஆலோசிக்காமல் செய்துவிட்டு பிறகு கஷ்டப்பட கூடியவர்களை
- விட்டுக்கொடுக்காதவர்
- உண்மை, நேர்மை, மேன்மை இவற்றையெல்லாம் பற்றி கவலைப்படாதவர்கள்
- எப்போதும் கோபத்தோடு காணக் கூடியவர்கள்
- பேச்சில் கெட்டிக்காரர்கள்
ராகு நிற்பதால் ஏற்படும் பலன்கள்
- பொருளாதாரத்திற்கு நல்ல அமைப்பு
- அனைத்து காரியத்திலும் வெற்றி
- சுவாச பிரச்சனை உண்டு
- பொருளாதாரத்தில் திருப்தி இருக்காது
- மூத்த சகோதரர்களிடம் கருத்து வேறுபாடு உண்டு
குரு நிற்பதால் ஏற்படும் பலன்கள்
- படித்தவர்கள் பணத்தை பெரிதாகக் கருதி
- தத்துவஞானிகள்
- பேரும் புகழும் அடைய கூடியவர்கள்
- அடிக்கடி விவாதத்திற்கு உள்ளாகக் கூடியவர்கள்
- மனிதாபிமானம் நிறைந்தவர்கள்
- கனவு காணக் கூடியவர்கள்
- அடிக்கடி பல பிரச்சனைகளால் அவதிப்பட கூடியவர்கள்
- அன்பு , கருணை மிக்கவர்கள்
- அவ்வப்போது எதையாவது நினைத்துக் கொண்டு
- யோசனையில் ஈடுபடக் கூடியவர்கள்
- தனக்குத்தானே செய்த தவறுகளை நினைத்து வருந்தகூடியவர்கள்
- கஷ்டம் வந்தாலும் விடாமுயற்சியுடன் அவற்றை சமாளிக்க கூடியவர்கள்
- கதைகள் மிகப்பெரிய பதவியும் பெறக்கூடியவர்கள்
சனி நிற்பதால் ஏற்படும் பலன்கள்
- அடிக்கடி எதிரிகளால் படக் கூடியவர்கள்
- ராஜதந்திரம் அறிந்தவர்கள்
- மகா புத்திசாலிகள்
- கர்வம் உள்ளவர்கள்
- சந்தோஷமான அவர்கள்
- ஞானம் உள்ளவர்கள்
- ஞானம் செய்யக்கூடியவர்கள் யோகமுண்டு
- குடும்பத்துக்காக கஷ்டப் படக் கூடியவர்கள்
- வெளிநாட்டு வருமானம் உண்டு
- எந்த கஷ்டத்திலும் வளைந்து கொடுக்காதவர்கள்
- எதையும் செய்ய சக்தி உள்ளவர்கள்
புதன் நிற்பதால் ஏற்படும் பலன்கள்
- பயப்பட மாட்டார்கள்
- வாழ்க்கையில் முன்னேற்றத்தை அடைய கூடியவர்கள்
- மீன் சண்டை போடுபவர்கள்
- கடன் வாங்க மாட்டார்கள்
- உத்தியோகம் தொழில் மற்றும் வாழ்க்கையின் மிகப்பெரிய முன்னேற்றத்தையும் பெயரையும் அடையக் கூடியவர்கள்
- சாதி மதத்திற்கு முக்கியத்துவம் தரமாட்டார்கள்
- பிறர் மனதைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள்