மகர ராசி
- மகர ராசி கால புருஷனுக்கு இது பத்தாவது ராசியாகும். இதன் பாகை 280 முதல் 300 பாகை வரை உள்ளது. இது ஒரு சர ராசி. நில ராசி. இரட்டைப்படை ராசி. பெண் ராசி. இதன் அதிபதி சனி பகவான். கடல் குதிரையின் வடிவத்தை உடைய ராசி அல்லது முதலையின் வடிவத்தை உடைய ராசி. இந்த ராசியில் உத்திராடம் நட்சத்திரத்தில் 2,3,4 பாதங்களும் திருவோணம் நட்சத்திரத்தின் 1, 2, 3, 4 பாதங்களும், அவிட்டம் நட்சத்திரத்தில் 1,2 பாதங்களும் உள்ளன.
- இந்த ராசிக்காரர்கள் சுதந்திரமானவர்கள். சிக்கனம் மாணவர்கள், விடாமுயற்சி உள்ளவர்கள். தாராளமாக உள்ளவர்கள், இலக்கியம் தத்துவம் விஞ்ஞானம் போன்றவற்றில் விருப்பமுள்ளவர்கள். வியாபார நோக்கம் கொண்டவர்கள். வாழ்க்கையில் குறிக்கோளை உடையவர்கள் எந்த ஒரு சூழ்நிலைக்கு தக்கவாறு தன்னை மாற்றிக் கொள்பவர்கள். ஆழமான நினைவாற்றல் உடையவர்கள். பல கலைகளை கற்பதில் விருப்பம் உள்ளவர்கள்.
- வெள்ளை, நீலம் போன்றவர்கள் நன்மை தரும். திங்கள், வெள்ளி, சனி போன்ற கிழமைகள் நன்மை தரும். தை, மாசி, வைகாசி, ஆடி, ஐப்பசி, புரட்டாசி போன்ற தமிழ் மாதங்கள் நன்மையை தரும்
பொதுவான காரகத்துவங்கள்
- நில ராசி, சர ராசி
- வராக மூர்த்தி
- பாதி நிலம் , பாதி நீர்
- நீர், நில வாழ் உயிர்கள் – கடல் ஆடு, முதலை, தவளை
- கர்ம ஸ்தானம்
- காரிய சித்தி
- வண்ணன் துறை
- கஜேந்திர மோட்ஷ வீடு
- ஜீவனம்
- எளிமையான ராசி
- அடிமைதனம்
- நீர்வீழ்ச்சி
- நினைவுச்சின்னங்கள்
- பொறுப்புகளை சுமத்தல்
- ஊற்று நீர்
- சகதி பகுதிகள்
- இரும்பு
- எந்திரங்கள்
- மர கரி
- தரகு
- விவசாயம்
- உரங்கள்
- பொறுமை உள்ள ராசி
- வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளும் ராசி
- பன்றி, கழுதை
- மூட்டு, முழங்கால்
உணவுப் பொருட்கள்
- கிழங்கு வகைகள்
- கரும்பு
இடங்கள்
- தொழிற்சாலை உள்ள இடங்கள்
- சேற்று நிலம்
- பிணவறை
- சுடுகாடு
- ஆறு, ஏரி ,குளம்
- மசூதிகள் உள்ள பகுதிகள்
- தாழ்ந்த நில பிரதேசங்கள்
தொழில்கள்
- சுரங்க தொழில்
- இரும்பு வியாபாரம்
- விவசாயம்
- குடிசை தொழில்
- உணவு பொருட்கள் விற்பனை
- கட்டிட வேலைகள்
- கீழ் மட்ட ஊழிய வேலைகள்
நோய்கள்
- மூட்டு வலி
- முழங்கால் வலி
பொதுவான குணங்கள்
தோற்றம்
- சற்று பருத்த மாநிற உடலை உடையவர்கள்
- பெரிய தலை, அகன்ற முகம் உடையவர்கள்
- உயரமானவர்கள்
- நீண்ட கை, கால்கள் உடையவர்கள்
சிறப்பான குணங்கள்
- ஒழுக்கமானவர்கள்
- நம்பிக்கையானவர்கள்
- பொறுமை, விட முயற்சி உடையவர்கள்
- கடின உழைப்பாளிகள்
- இரக்கம், கருணை உடையவர்கள்
மாற்றிக்கொள்ள வேண்டிய குணங்கள்
- பகட்டு விளம்பரத்தை விரும்புவார்கள்
- முன்கோபம் உள்ளவர்கள்
- பணிவில்லாதவர்கள்
- வளைந்து கொடுக்க மாட்டார்கள்
மேலும் படிக்க : மகர ராசி
மகர ராசியின் பொதுவான பாவ பலன்கள்
1-ம் பாவம் மகர ராசியாக அமைவதால் ஏற்படும் பலன்கள்
- வசீகரமான தோற்றம்
- பதவி தேடி வரும்
வாழ்வில் முன்னேற்றத்தை அடைவதே நோக்கமாகும் - போராட்டமான வாழ்க்கை உண்டு
- எதிரியை வெல்ல கூடியவர்கள்
- மதிப்பு மரியாதை எதிர்பார்க்கக்கூடியவர்கள்
- ஆராயும் திறன் உண்டு
- முன்னெச்சரிக்கை குணமுண்டு
- பிடிவாத குணம் உண்டு
- நிர்வாக திறமை உடையவர்கள்
- அன்புக்கு கட்டுப்பட்டவர்கள்
- தன்னை அழகு படுத்திக் கொள்வதில் விருப்பம் உள்ளவர்கள்
- எடுத்த காரியத்தை முடிக்காமல் விடமாட்டார்கள்
- குறிக்கோளை மாற்றிக் கொள்ள மாட்டார்கள்
- வீண் வம்பு வழக்கு போன்றவற்றை விரும்பாதவர்கள்
- சுறுசுறுப்பானவர்கள்
- தோல் நோய் உண்டு
- ஏதாவது சாப்பிட்டுக் கொண்டே இருப்பதில் பிரியமானவர்கள்
- வாழ்க்கையில் வெற்றியை அடைவது மிக அரிதாக இருக்கும்
2-ம் பாவம் மகர ராசியாக அமைவதால் ஏற்படும் பலன்கள்
- இருதார யோகம் உண்டு
- வழக்கில் வெற்றி பெற கூடியவவர்கள்
- பாட்டு, இசை இவற்றில் ஞானம் உள்ளவர்கள்
- வாக்கு பலிதம் உண்டு
- குடும்பத்தினரை காப்பாற்றுவார்கள்
- உறவினருடன் சேர்ந்து வாழ்வார்கள்
- குடும்ப நிர்வாகத்தை இவர் பார்ப்பார்
- சிக்கனமாக குடும்ப செலவுகளை மிச்சப்படுத்தும்
3-ம் பாவம் மகர ராசியாக அமைவதால் ஏற்படும் பலன்கள்
- இளைய சகோதரம் இருக்காது
- இளைய சகோதர வழியில் கலப்புத் திருமணம் அல்லது இருதார யோகம் உண்டு
- சகோதரர்களிடம் பிரிவு உண்டு
- ENT பிரச்சனை உண்டு
- எழுத்தால் பிரபலமாகும் யோகமுண்டு
- கம்யூனிகேஷன் பிரச்சனை இருக்கும்
- கையெழுத்து அழகாக இருக்கும்
- எழுத்தாளர் துறையில் சாதனை படைக்கும் யோகம் உண்டு
- மாமனார் ஆதரவு உண்டு
- இருசக்கர வாகன யோகமுண்டு
- குறட்டை விடக் கூடியவர்கள்
4-ம் பாவம் மகர ராசியாக அமைவதால் ஏற்படும் பலன்கள்
- பிளான் செய்வதில் பிரச்சனை இருக்கும்
- வீடு கட்டி மறுபடியும் இருக்க கூடிய சூழ்நிலை உண்டாகும்
- தாயின் அன்பும் ஆதரவும் இவர்களுக்கு உண்டு
- தாய்க்கு உடல் நலக்குறைவு இருக்கும்
- ஆடம்பர வாழ்க்கையை விரும்பமாட்டார்கள்
- செலவுக்கு ஏற்ப பணவசதி இருக்கும்
- படிப்பில் முன்னேற்றம் உண்டு
- வீடு வாகனம் அமையும்
- பிற்பகுதியில் படிப்பில் நல்ல வளர்ச்சி ஏற்படும்
- பதவி உயர்வு கிடைப்பதில் தாமதமாகும் போராடி பெறக்கூடிய சூழ்நிலை உண்டாகும்
5-ம் பாவம் மகர ராசியாக அமைவதால் ஏற்படும் பலன்கள்
- ஆசிரியர் உள்ள குடும்பமாக இருக்கும்
- பெண் குழந்தைகள் உண்டு
- குழந்தைகள் இவரிடம் இதுவரை சேர்ந்து இருப்பார்கள்
- குலதெய்வ அலங்காரம் செய்த தெய்வமாக இருக்கும்
- பூர்வீக சொத்து உண்டு
- உயர்கல்வி உண்டு
- தொழில் சார்ந்த திட்டங்களை பெரிதாக தீட்டுவதில் வல்லவர்கள்
6-ம் பாவம் மகர ராசியாக அமைவதால் ஏற்படும் பலன்கள்
- உத்தியோகம் தேடி வரும்
- உத்தியோகத்தில் அதிக நன்மை
- பிற்பகுதியில் பெரிய பதவி வகிக்கும் கூடியவர்கள்
- வெளிநாட்டு யோகம் உண்டு அதனால் நன்மை உண்டு
- குடல் சார்ந்த பிரச்சினைகள் உண்டு
- நரம்பு சார்ந்த பிரச்சனைகள் உண்டு
- கடன் உண்டு கடன் வாங்கினால் இன்னொரு கடனும் கூடவே வந்து சேரும்
- தந்தை உதவியால் கடனை அடைப்பார்
- தந்தையின் மருத்துவ செலவுக்காக கடன் வாங்க கூடிய சூழ்நிலை உண்டாகும்
- கல்விக்கடன் உண்டு
7-ம் பாவம் மகர ராசியாக அமைவதால் ஏற்படும் பலன்கள்
- திருமண வாழ்வில் பாதிப்பு உண்டு
- தாமத திருமணம்
- இருதார யோகம்
- வாழ்க்கைத்துணை விருத்தி அடைய கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள்
- வாழ்க்கைத்துணை வருமானம் ஈட்ட கூடியவராக இருப்பார்
- வாடிக்கையாளர் பிரச்சனை உண்டு
- கூட்டுத்தொழில் ஆகாது
- இவரை மற்றவர்கள் எளிதாக ஏமாற்றி விடுவார்கள்
8-ம் பாவம் மகர ராசியாக அமைவதால் ஏற்படும் பலன்கள்
- தந்தை வழியில் சொத்து உண்டு
- அவற்றில் சிறு வழக்கம் ஏற்படும்
- கையெழுத்து பிரச்சினை உண்டு
- இன்சூரன்ஸ் அதிக லாபம் தரும்
- தந்தைக்கு விபத்து உண்டு
- அரசாங்கம் அரச அரசாங்கத்துக்கு பயன்கள் அரசாங்கத்திற்கு தண்டம் கட்டுதல்
- அவசரத்தால் விபத்து ஏற்பட கூடிய சூழ்நிலை உண்டாகும்
9-ம் பாவம் மகர ராசியாக அமைவதால் ஏற்படும் பலன்கள்
- தந்தை கடின உழைப்பாளி
- விவசாயம் மூலம் வருமானம் தந்தைக்கு உண்டு
- தந்தை வருமானத்தில் பிரச்சனை இருந்து கொண்டே இருக்கும்
- தந்தைக்கு நீண்ட தூர ஆன்மீக பயணம் உண்டு
- தந்தைக்கு தீய பழக்கம் உண்டு
- திருமண வாழ்க்கையில் பிரச்சனை உண்டு
- சகோதரருக்கு கண்டம் உண்டு
- திடீர் அதிர்ஷ்டம் உண்டு
- வாரிசு வேலை உண்டு
10-ம் பாவம் மகர ராசியாக அமைவதால் ஏற்படும் பலன்கள்
- சொந்தத் தொழில் செய்யும் எண்ணம் உண்டு
- சினிமா சங்கீதம் நடனம் போன்ற துறைகளில் தொழில் செய்ய ஆர்வம்
- தொழிலில் வெற்றி என்பது தாமதமாக கிடைக்கும்
- இரும்பு சார்ந்த பொருட்கள் முன்னேற்றத்தைத் தரும்
- அழகு சாதனம் டிவி, வாஷிங் மெஷின், பிரிட்ஜ் விற்பனை தொழில் சிறப்பைத்தரும்
- வங்கித் துறை, நீதித்துறை, ஜோதிடம், காவல்துறை, இராணுவம், ஜவுளித்துறை இவற்றில் முன்னேற்றம் உண்டு
- மாமியார் ஆதரவு உண்டு
- பதவி உயர்வு உண்டு
- சங்கம் சார்ந்த பதவி உண்டு
- வாட்ச் கடை, கண்ணாடி கடை, பூமி சார்ந்த தொழில்கள் அனைத்தும் லாபம் தரும்
11-ம் பாவம் மகர ராசியாக அமைவதால் ஏற்படும் பலன்கள்
- பேராசை உண்டு அவற்றால் ஆபத்து உண்டு
- சித்தப்பாவால் பிரச்சினை உண்டு
- நண்பர்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள்
- நண்பர்களால் ஆதாயம் உண்டு
- சகோதரர்களுடன் கருத்து வேறுபாடு உண்டு
- சகோதரிகளுக்கு கண்டம் உண்டு
- விழுந்து அடி பெறலாம் அல்லது கழிவறையில் வழுக்கி விழுந்து அடிபடுதல் போன்றவை நேரம்
12-ம் பாவம் மகர ராசியாக அமைவதால் ஏற்படும் பலன்கள்
- வெளிநாட்டு யோகம் உண்டு
- பக்கத்தில் இருக்கும்
- சுவாச பிரச்சனை உண்டு
- தாம்பத்திய பிரச்சனை உண்டு
மகர ராசியில் நவகிரகங்கள் நிற்பதால் ஏற்படும் பலன்கள்
கேது மகர ராசியில் ராசியில் நிற்பதால் ஏற்படும் பலன்கள்
- தவம் தியானம் யோகா போன்றவற்றில் ஈடுபாடு அதிகம்
- விரக்தி மனப்பான்மை ஏமாற்றமே மிஞ்சும்
- தொழிலில் தடை தாமதம்
- பிறருக்காக தியாகம் செய்யக் கூடியவர்கள்
- ஆன்மீகத்தில் முன்னேற்றம் உண்டு
- பணம் கையில் தங்காது
- வாழ்க்கையில் அதிக பிரச்சனைகளை கூடியவர்களாக இருப்பார்கள்
சுக்கிரன் மகர ராசியில் நிற்பதால் ஏற்படும் பலன்கள்
- புத்தி உள்ளவர்கள்
- உடல் நலம் பாதிக்கப்பட்ட கூடியவர்கள்
- வாழத் தெரியாதவர்கள்
- படிப்பில் ஆர்வம் உள்ளவர்கள்
- நல்ல குணம் படைத்தவர்கள்
- எந்த ஒரு லட்சியம் இல்லாத எடுப்பவர்கள்
- காரணமில்லாமல் குற்றம் செய்யக்கூடியவர்கள்
- தற்கொலை எண்ணம் மிக்கவர்கள்
- மனோ தைரியம் இல்லாதவர்கள்
சூரியன் மகர ராசியில் நிற்பதால் ஏற்படும் பலன்கள்
- கஞ்சத்தனம் மிக்கவர்
- உலக ஞானம் இல்லாதவர்கள்
- தனது பேச்சால் பிறரை கஷ்டப்படுத்த கூடியவர்கள்
- பிறருக்கு உதவக் கூடிய மனப்பாங்கு உள்ளவர்கள்
- நகைச்சுவையாக பேசக்கூடியவர்கள்
- எதை செய்தாலும் திருப்தியற்ற மனநிலையில் உள்ளவர்கள்
சந்திரன் மகர ராசியில் நிற்பதால் இருக்கும் பலன்கள்
- மனைவி மக்களிடம் அதிக அன்பு கொண்டவர்கள்
- சத்தியத்திற்கு கட்டுப்பட்டவர்கள்
- புரிந்துகொள்வதில் வல்லுனர்கள்
- கெட்டிக்காரர்கள்
- எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள்
- தாராள குணம் படைத்தவர்கள்
- உலக அனுபவம் நிறைந்தவர்கள்
- நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் இருப்பார்கள்
- நடை பாவனை தோற்றத்துக்கு எவ்வித தொடர்பும் இருக்காது
- நிதானமான புத்தி உள்ளார்கள்
- சத்துருக்களை கூடியவர்கள்
செவ்வாய் மகர ராசியில் நிற்பதால் ஏற்படும் பலன்கள்
- அதிகம் உள்ளவர்கள்
- உழைப்பாளிகள்
- தைரியசாலிகள்
- அரசியலில் மிகப் பெரிய பதவியை அடைய கூடியவர்கள்
- பணக்காரர்கள்
- முரட்டு தைரியம் உள்ளவர்கள்
- குழந்தைகளிடம் அன்பாக நடப்பவர்கள்
- எதையும் மொத்தமாக செய்யாதவர்கள்
- சந்திரர்கள் தொழிலதிபர்கள்
- எளிதில் அவர்களை தோற்கடிக்க முடியாது
குரு மகர ராசியில் நிற்பதால் ஏற்படும் பலன்கள்
- நல்ல மனது உள்ளவர்கள்
- அவமானப் படுவார்கள்
- பிறர் மனம் புண்படும்படி பேசக் கூடியவர்கள்
- கோபப்படுவார்கள்
- தீர்க்கமாக இருக்கும் பொறாமை குணம் மிக்கவர்கள்
- எதிலும் தாமதமாக வெற்றியடைய கூடியவர்கள்
- மனைவிடம் பாசமானவர்கள்
- தனது தவறை ஒத்துக் கொள்ள மாட்டார்கள்
- முரட்டுத்தனமாக நடந்து கொள்வார்கள்
சனி மகர ராசியில் நிற்பதால் ஏற்படும் பலன்கள்
- புத்திசாலிகள் குடும்ப சுகத்தை அடைபவர்கள்
- சுயநலம் உள்ளவர்கள்
- படிப்பாளிகள்
- சந்தேகப்படுகிறார்கள்
- மனைவியால் சொத்துக்களை அடைய கூடியவர்கள்
- எதிர்த்துப் பேசக் கூடியவர்கள்
- தன்னம்பிக்கை உள்ளவர்கள்
- சமயோசித புத்தி உள்ளவர்கள்
- ரகசியம் காக்க கூடியவர்கள்
- சொத்தை பற்றி யாரிடமும் கூற மாட்டார்கள்
- முன்கோபம் உள்ளவர்கள்
- கடமையை மறுப்பவர்கள்
புதன் மகர ராசியில் நிற்பதால் ஏற்படும் பலன்கள்
- இவர்கள் சந்தேகப் பேர்வழி
- நடுநிலையோடு யாரையும் அணுக மாட்டார்கள்
- குருட்டு அதிர்ஷ்டம் நிறைந்தவர்கள்
- வாழ்வில் ஏற்றம் இறக்கம் உண்டு
- வலுச் சண்டைக்குப் போக கூடியவர்கள்
- தன்னிடம் சண்டைக்கு வருபவர்களையும் ஒரு கை பார்த்து விடுவார்கள்
- புதிய புதிய சிந்தனைகளை சொல்லக்கூடியவர்கள்