செவ்வாய் காரகத்துவங்கள்

Table of Contents

செவ்வாய்

மங்கள காரகன் எனப்படும் செவ்வாய் பகவான் மனிதர்களுக்கு உரிய வலிமையை தரக் கூடிய கிரகமாக வருகிறார். பூமிக்கு காரகனாக வருகிறார். இளைய சகோதரருக்கு காரணமாகவும் செவ்வாய் பகவான் உள்ளார். செவ்வாய் என்பது பூமியில் இருந்து தோன்றிய கிரகம் என்பதால் சகோதர காரகன் என அழைக்கப்படுகிறார். உடலின் ரத்த சிவப்பணுக்கள் காரக கிரகம் செவ்வாய் . எனவே மனிதர்களுக்கு ஒரு ஜாதகத்தில் கெடாமல் இருப்பது அவர்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரும். ஒருவருக்கு உடல் சக்தியோடு விளங்க செவ்வாய் பகவானின் அருள் அவசியமாகிறது. செவ்வாய் ஒரு ஆண் கிரகம். நெருப்பு கிரகம்.

செவ்வாய் கிரகத்தின் அதிதேவதையாக முருகப்பெருமான் உள்ளார். எனவே முருகனை வழிபடுவதால் செவ்வாய் கிரகத்தின் அருளைப் பெற இயலும். உயர வடிவானவர். தாமச குணம். உலோகத்தில் செம்பை குறிக்கக்கூடியது. தானியத்தில் துவரையைக் குறிக்கும். மலர்களில் செண்பக மலரை குறிக்கும். சுவையில் துவர்ப்புச் சுவையை குறிக்கும். ரத்தத்தில் சிவப்பணுக்களை குறிக்கும். செவ்வாய்க்குரிய நிறம் சிவப்பு நிறமாகும். செவ்வாய்க்குரிய விலங்கு பெண் சாரை. செவ்வாயின் வாகனம் அன்னப்பறவை. செவ்வாய்க்குரிய பறவை கோழி. வஸ்திரம் சிவப்பு நிற வஸ்திரம்.

செவ்வாய்க்குரிய ஆலயம் வைதீஸ்வரன் கோயில். செவ்வாய்க்குரிய வழிபாட்டு பொருள் குங்குமம். செவ்வாய்க்குரிய திசை தெற்கு திசை. நோய்களில் உஷ்ண சம்பந்தமான நோய்களுக்கு காரணமாக வருகிறார். செவ்வாய் ஒரு ராசியைக் கடக்க 49 நாட்களை எடுத்துக் கொள்கிறார். நட்சத்திரங்களில் மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் போன்ற நட்சத்திர அதிபதியாக வருகிறார். வீட்டில் படுக்கையறையை குறிக்க கூடியவர். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்க செவ்வாய் பகவான் அருள் தேவை.

அமைப்பு

செவ்வாய் கிரகம் சுமார் 14 புள்ளி 16 கோடி மைல்களுக்கு அப்பால் இருந்து சூரியனை சுற்றி வருகிறது. செவ்வாய் தன்னைத்தானே சுற்றிவர 24 மணி நேரம் 37 நிமிடம் எடுத்துக் கொள்கிறது. சூரியனை 225 நாட்களில் சுற்றி வருகிறது. இதனுடைய குறுக்களவு 4218 மைல்கள். பூமியிலிருந்து சுமார் 4 கோடி மைல்கள் தூரத்தில் உள்ளது.

செவ்வாயின் பலம் அதிகரிக்க வழிமுறைகள்

செவ்வாய்க்கிழமைகளில் விரதமிருந்து முருகனை வழிபாடு செய்தல்,வைத்தீஸ்வரன் கோவில் சென்று வழிபாடு செய்தல் போன்றவற்றால் செவ்வாயின் பிரச்சினைகளிலிருந்து நாம் விடுபட இயலும். அதேபோல் செவ்வாய்க்கிழமைகளில் துவரை தானம் செய்வதால் செவ்வாய் பகவானின் அருளைப் பெற இயலும். கையில் பவள மோதிரத்தை அணிவதாலும் செவ்வாயின் கதிர்வீச்சை நாம் அதிகம் பெற இயலும்.

செவ்வாய் காரகத்துவம்

முக்கிய காரகங்கள்
  • பூமி காரகன்
  • சகோதர காரகன்
உறவுகள்
  • சகோதரன்
  • பெண்ணுக்கு கணவன்
  • மருமகன்,மருமகள்,மைத்துனர்
உடல் பாகங்கள்
  • ரத்தம்(சிவப்பணுக்கள்)
  • எலும்பு மஜ்ஜை
  • பற்கள்
  • நகம்
  • தசைகள்
  • மீசை, புருவம்
உணவுப்பொருட்கள்
  • இஞ்சி
  • வெள்ளைப் பூண்டு
  • மிளகாய்
  • கத்தரிக்காய்
  • கருவேப்பிலை
  • புளி
  • தேங்காய்
  • பாதாம்
  • விளாம்பழம்

பொதுவான காரகங்கள்

  • முருகர் (அதிதேவதை )
  • ஆஞ்சநேயர்
  • மங்களம்
  • பூப்பெய்தலுக்கு காரணமானவர்
  • பாதுகாப்பு உறுப்புகள்(மண்டை ஓடு, நெஞ்செலும்பு)
  • ஆயுதம்
  • கூர்மை,பட்டை தீட்ட கூடியது
  • கட்டமைப்பு
  • சொத்து சம்பந்தமான வழக்கு
  • திருமண தடை
  • உறவில் விரிசல்
  • கரடு முரடான பாதைகள்
  • அறுவை சிகிச்சை காரகன் (பாவம் – 8)
  • முட்செடிகள்
  • கலகம் செய்பவர்கள்
  • முன்கோபம்
  • வாக்குவாதம்
  • தைரியம் (பாவம்- 3)
  • வீரம்
  • வீரியம்
  • ஆயுதங்கள்
  • துப்பாக்கி
  • வெடி பொருட்கள்
  • விபத்து
  • சிவந்த நிறம்
  • முகத்தில் உள்ள பருக்கள்
  • இயந்திரங்கள்
  • நாய்கள்
  • சிறு விபத்து
  • துணிந்த செயல்கள்
  • தீ விபத்து
  • மதிக்காத தன்மை
  • முரட்டுத்தனமான தோற்றம்
  • பிடிவாதம்
  • ஒழுக்கமின்மை
  • வெறித்தனம்
  • துன்புறுத்தி பேசுதல்
  • தன்னம்பிக்கை
  • பிறர் பொருளை அபகரித்தல் (நியாயம் இல்லாமல் அல்லது துன்புறுத்தி பெறுதல்)
  • முரட்டுத்தனமான அறிவு, கல்வி
  • தேவையற்ற பேச்சு
  • ஆடு, மாடு, கோழி பண்ணைகள்
  • பெரிய தொழிற்சாலைகள்
  • இரண்டாம் குழந்தை (பாவம் 7)
  • முற்றுகையிடுதல்
  • கோர விபத்து
  • கொலை செய்தல்
  • கொள்ளையடித்தல்
  • தற்கொலை (பாவம் 3)
  • அரசியல்வாதி
  • வாகனம் (பாவம் 4)
  • பொறுப்புமிக்க பதவிகள்
  • உண்மையற்ற நண்பன்
  • விடா முயற்சி
  • பதுக்கி வைத்தல் (புதையல்)
  • மலர் – செண்பகம்
  • உலோகம் – செம்பு
  • நிறம் – சிவப்பு
  • குணம் – ராஜசம்
  • சுவை – துவர்ப்பு
  • வடிவம் – முக்கோணம்
  • சமித்து – கருங்காலி
  • தோற்றம் – உயரம்
  • உபகிரகம் – தூமன், சுரேசன்
  • ரத்தினம் – பவழம்
வேறு பெயர்கள்
  • அங்காரகன், குஜன், உதிரன், சேய், மங்களன், நில மகன்
தொழில்கள்
  • பாதுகாப்பு பணி (காவலர், ராணுவம் )
  • ரியல் எஸ்டேட்
  • விவசாயம்
  • ஓவியர்
  • பெயிண்டர்
  • சமையல் வேலை (நெருப்பு சார்ந்த தொழில்)
  • மின்சார துறை
  • பொறியியல் துறை
  • கசாப்பு கடை
  • சலூன் கடை
  • மருத்துவர் (அறுவை சிகிச்சை)
  • பல் மருத்துவர்
  • டிரைவர்
நோய்கள்
  • ரத்த அழுத்தம்
  • காய்ச்சல்
  • எலும்பு முறிவு
  • வெட்டுக்காயம்
  • தீப்புண்
  • கண் எரிச்சல்
  • பல் வலி

செவ்வாய் 12 பாவங்களில் நிற்பதால் ஏற்படும் பலன்கள்

லக்னத்தில் நிற்பதால் ஏற்படும் பலன்கள்

  • ஜாதகர் பருத்த உடலை உடையவராக இருப்பார்
  • முன்கோபி
  • அதிக வலிமை உடையவர்
  • பிடிவாத குணம் மிக்கவர்
  • பிறந்தவுடன் சொத்து
  • தலையில் வெட்டுக்காயம்/தழும்பு உண்டு
  • திடகாத்திரமான உடல் வாகு உள்ளவர்கள்
  • மருத்துவ குணம் உண்டு
  • மாமிசப்பிரியர்
  • உஷ்ண சம்பந்தமான நோய்களால் பாதிக்கப் படுவார்
  • ஜாதகருக்கு விபத்து, கண்டம் உண்டு
  • ஜாதகருக்கு நிர்வாகத் திறமை உண்டு
  • எடுத்த காரியத்தை முடிக்காமல் விடமாட்டார்கள்
  • சகோதரர்கள் மீது பாசம் அதிகம்
  • முருக வழிபாட்டில் ஈடுபாடு உண்டு
  • அரசியலில் மேல் நிலையை அடையக் கூடியவர்கள்

2-ம் பாவத்தில் நிற்பதால் ஏற்படும் பலன்கள்

  • போலீஸ், ராணுவம் போன்ற துறைகளில் பணிபுரிவர்
  • நிர்வாக துறை சார்ந்த தொழில் வருமானம்
  • சகோதரர்கள் மூலம் ஆதாயம் உண்டு
  • உயர் கல்வியில் தடை உண்டு
  • கண் சார்ந்த நோய்கள் உண்டு
  • செல்வத்திற்கு குறைவிருக்காது
  • முகத்தில் தழும்பு உண்டு
  • எதிரிகளை வெல்ல கூடியவர்கள்
  • பிடிவாத குணம் உண்டு
  • அரசு வருமானம் உண்டு
  • புத்ர தோஷமுண்டு
  • ஆக்ரோஷமாக பேசக்கூடியவர்

3-ம் பாவத்தில் நிற்பதால் ஏற்படும் பலன்கள்

  • தைரியமானவர்கள் எடுத்த காரியத்தில் வெற்றி காணக் கூடியவர்கள்
  • சுறுசுறுப்பானவர்கள் எதிரிகளால் வெல்ல முடியாதவர்கள்
  • புகழ் உண்டு
  • கட்டுமஸ்தான உடல்வாகு உடையவர்கள்
  • சகோதரர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் இல்லை
  • நீண்ட ஆயுளை உடையவர்கள்
  • சகோதர தோஷம் உண்டு
  • போலீஸ் ராணுவத்தில் ஈடுபாடு உண்டு
  • தோள்பட்டை, கைகளில் காயம்/தழும்பு உண்டு
  • விளையாட்டுத் துறையில் ஆர்வம் உண்டு
  • இசைக்கருவியை உள்ள வீடு
  • வாகன யோகமுண்டு
  • கணிதத்தில் வல்லவர்கள்
  • சுய முயற்சியால் வாழ்க்கையில் முன்னேற கூடியவர்கள்
  • சொத்து உண்டு
  • தந்தைக்கு விபத்து கண்டம் உண்டு
  • அரசு சார்ந்த துறையால் வருமானம் உண்டு
  • ENT பிரச்சனை உண்டு
  • வாகன தொழில், நிலம் சார்ந்த தொழில்கள் போன்றவற்றால் ஆதாயம் உண்டு
  • சொத்தில் பிரச்சனை உண்டு

4-ம் பாவத்தில் நிற்பதால் ஏற்படும் பலன்கள்

  • கல்வியில் தடை, தாமதம் உண்டு
  • வீடு, சொத்து யோகமுண்டு
  • தாய்க்கு விபத்து, கண்டம் உண்டு
  • தாய் மீது பாசம் அதிகம்
  • அரசியல் மற்றும் அரசாங்கம் சார்ந்த தொடர்பால் பொருளாதார முன்னேற்றம் உண்டு
  • ஆரம்ப காலங்களில் வறுமையால் பிரச்சினைகள் உண்டு
  • குடும்பத்தை விட்டு வெளியில் சென்று வாழக்கூடியவர்கள்
  • சொந்தவீடு அமைவதில் தாமதம்

5-ம் பாவத்தில் நிற்பதால் ஏற்படும் பலன்கள்

  • புத்திர தோஷம் உண்டு
  • பொருள் ஈட்டுவதில் தடை தாமதம் ஏற்படும்
  • அரசாங்கத்தால் அவமானம் ஏற்படும்
  • ஆண் வாரிசு உண்டு
  • தந்திரசாலி
  • கவலையோடு காணப்படுபவர்
  • வயிறு பிரச்சனை உண்டு
  • சொத்து உண்டு
  • தாத்தாவுக்கு சகோதர, சகோதரிகள் உண்டு
  • மாமனுக்கு சொத்து உண்டு
  • ஜாதகருக்கு விபத்து உண்டு
  • பூர்வீக சொத்தில் பிரச்சினை உண்டு
  • அமானுஷ்ய சக்தி உள்ளவர்கள்
  • வேட்டைக்கார தெய்வம், காவல் தெய்வம் குல தெய்வமாக இருக்கும்
  • குழந்தை பிறந்த பின் சொத்து உண்டு
  • விளையாட்டு துறையில் ஆர்வம் உண்டு
  • ஆசிரியர் உள்ள குடும்பம்

6-ம் பாவத்தில் நிற்பதால் ஏற்படும் பலன்கள்

  • எதிரிகளை வெல்ல கூடியவர் ஆனால் எதிரிகள் அதிகம் உண்டு
  • உயர் பதவிகளை பெறக்கூடியவர்கள்
  • போலீஸ், ராணுவம் போன்ற துறைகளின் வேலை அமையும்
  • வாழ்வில் கீழேயிருந்து மேல் நிலையை அடையக் கூடியவர்கள்
  • வாகன யோகமுண்டு
  • கண் பாதிப்பு ஏற்படும், மனகவலை உண்டு

7-ம் பாவத்தில் நிற்பதால் ஏற்படும் பலன்கள்

  • களத்திரம் அமையும்
  • உடல் உபாதைகளால் அவதிப்படுவர்
  • களத்திர தோஷம் உண்டு
  • பெண்களால் அவமானம் உண்டு
  • பிரச்சனைகளை அதிகம் சந்திக்க கூடிய நபர்
  • கூட்டுத்தொழில் ஆகாது
  • தடை தாமதம் ஏற்படும்
  • மனைவிக்கு கண்டம் உண்டு

8-ம் பாவத்தில் நிற்பதால் ஏற்படும் பலன்கள்

  • சகோதரர்களுக்கு விபத்து, கண்டம் உண்டு
  • சிறுநீரக பாதிப்பு உண்டு
  • ஜாதகருக்கு விபத்து, கண்டம், அவமானம் போன்ற பிரச்சினைகள் உண்டு
  • திடீர் அதிர்ஷ்டம் உண்டு
  • கடன் பிரச்சினை உண்டு
  • வாடகை வருமானம் உண்டு
  • பிடிவாத குணம் உண்டு
  • வெளிநாட்டு வருமானம் உண்டு
  • காலியிடங்கள் ஆதாயம் உண்டு
  • முகத்தில் வெட்டுக்காயம் உண்டு
  • நிர்வாக திறமை உள்ளவர்கள்

9-ம் பாவத்தில் நிற்பதால் ஏற்படும் பலன்கள்

  • கஞ்சத்தனம் மிக்கவர்கள்
  • அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு
  • சட்ட விரோத செயல்களால் பாதிக்கப்படுவார்கள்
  • பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைவார்கள்
  • மனைவியை பிரிந்து வாழக்கூடிய சூழ்நிலை உண்டாகும்

10-ம் பாவத்தில் நிற்பதால் ஏற்படும் பலன்கள்

  • அரசியலில் நல்ல முன்னேற்றம் உண்டு
  • பொதுமக்களிடம் பேரும் புகழும் பெறக்கூடியவர்கள்
  • வசதி வாய்ப்புகள் தேடி வரும்
  • வாகன யோகமுண்டு
  • வாகனம் சார்ந்த தொழில்கள் முன்னேற்றத்தை தரும்
  • நிலம் சார்ந்த தொழில்கள் ஆதாயம் உண்டு
  • சகோதரர்கள் மூலம் ஆதாயம் உண்டு
  • செய்யும் தொழிலில் வெற்றி அடைய கூடியவர்கள்
  • அனைத்து சுகங்களும் வாழக்கூடியவர்கள்
  • விளையாட்டு ஆசிரியர்
  • மருத்துவம் சார்ந்த தொழில்கள் முன்னேற்றம் தரும்
  • விபத்து உண்டு
  • தொழிலில் விட முயற்சியால் முன்னேற்றம்
  • எப்போதும் தொழில் சார்ந்த சிந்தனை
  • பெரிய பதவி வகிக்கக்கூடியவர்கள்
  • நல்ல எண்ணங்கள் மற்றும் செயல்கள் மூலம் வாழ்வில் உயர்ந்த நிலையை அடையக் கூடியவர்கள்

11-ம் பாவத்தில் நிற்பதால் ஏற்படும் பலன்கள்

  • வீடு யோகம் உண்டு
  • அரசியலில் பெரிய பதவியை அடைய கூடியவர்கள்
  • பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடையக் கூடியவர்கள்
  • எதிரிகளை வெல்ல கூடியவர்கள்
  • நினைத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி காணக் கூடியவர்கள்
  • கஞ்சத்தனம் மிக்கவர்
  • இவர்களால் சகோதரர்களுக்கு ஆதாயம் உண்டு

12-ம் பாவத்தில் நிற்பதால் ஏற்படும் பலன்கள்

  • பொருளாதாரத்தில் தடை, தாமதம் உண்டு
  • பித்த நோய்கள் பிரச்சினைகள் ஏற்படும்
  • வாழ்வில் அவமானத்தை அடையக் கூடியவர்கள்
  • கண் சார்ந்த பிரச்சனைகள் உண்டு
  • கலகம் ஆளுமையை செலுத்தக்கூடிய வரும்
  • கொடுமையான மனப்பாங்கு உடையவர்கள்
  • சிறைவாசம் செல்லக்கூடிய சூழ்நிலை உண்டாகும்
  • இருதார யோகம் உண்டு
  • கடன் உண்டு
  • சகோதரர்களால் விரயம் உண்டு
  • திருமணத்தில் ரகசியம் உண்டு
  • சொத்தால் விரயம் உண்டு
  • சகோதரர்களுக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டு
  • மூட்டுவலி உண்டு
  • மருத்துவர்கள் உள்ள குடும்பம்
  • சொத்து சம்பந்தமான பிரச்சனைகள் உண்டு
  • வயிறு சார்ந்த தொந்தரவுகள் உண்டு
  • இரண்டாவது தொழிலால் முன்னேற்றம் உண்டு
  • தர்ம சிந்தை உள்ளவர்கள்

மேலும் படிக்க: சந்திரன் காரகத்துவங்கள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top