புதன்
புத்தி காரகன் எனப்படும் புதன் பகவான் சூரியனோடு சேர்ந்து சுற்றிவரும் ஒரு உள்வட்ட கிரகமாகும். புதன் கிரகம் அளவில் மிக சிறிய அளவில் உள்ள கிரகமாகும். எனவே இளமையான விஷயங்கள் அனைத்திற்கும் காரக கிரகமாக வருகிறார். மனிதர்களுக்கு புத்திக்கூர்மை, கற்பித்தல், சாதுர்ய குணம் போன்றவற்றிற்கும் காரகன் புதன் பகவானாவார். புதன் ஒரு அலி கிரகம் ஆகும்.
தாய்மாமனுக்கு புதன் காரக கிரகமாக வருகிறார். புதனின் அதிதேவதை காக்கும் கடவுளான விஷ்ணு பகவானாவார். புதன் கிரகம் பச்சை நிறத்துடன் காணப்படும், உலகில் உள்ள அனைத்து பசுமையான விஷயங்களையும் குறிக்க கூடியவர். புதனுக்குரிய உலோகம் பித்தளை, தானியம் பச்சைப்பயிறு, சுவையில் உவர்ப்பு சுவையை குறிக்க கூடியவர், செடிகளில் நாயுருவி செடியை குறிக்கும். புதனுக்குரிய வாகனம் குதிரை ஆகும். ரத்தினம் மரகதம், வஸ்திரம் பச்சைப்பட்டு, பிணிகளில் வாதம் சம்பந்தமான நோய்களுக்கு காரகன், உடல் அங்கங்கள் தோல் பகுதியை குறிக்க கூடியவர். புதனுக்குரிய திசை வடக்கு,மலர்களில் வெண்காந்தள் மலர்களை குறிக்கும், புதனுக்குரிய மிருகம் ஆண் பூனை, பறவைகளில் கிளி.
புதனுக்குரிய ஸ்தலங்கள் மதுரை மீனாட்சி அம்மன் மற்றும் திருவெண்காடு. வழிபாட்டு பொருட்கள் கற்பூரம், வீட்டில் வரவேற்பறை மற்றும் படிக்கும் அறை போன்ற பகுதிகளைக் குறிக்கும். புதன் ஒரு ராசியை கடக்க ஒரு மாதம் எடுத்துக் கொள்கிறார். நட்சத்திரங்கள் ஆயில்யம், கேட்டை, ரேவதி போன்ற நட்சத்திரத்தின் அதிபதியாக வருகிறார்.
அமைப்பு
சூரியனிடமிருந்து புதன் 3 கோடியே 60 லட்சம் மைல்களுக்கு அப்பால் உள்ளது, சூரியனை சுற்றி வர 88 நாட்கள் எடுத்துக் கொள்கிறார். இதன் சுற்றளவு 9 ஆயிரத்து 500 மைல்கள் ஆகும். குறுக்களவு 3 ஆயிரம் மைல்கள். புதன் கிரகம் பூமியிலிருந்து 7 கோடியே 96 லட்சம் மைல்கள் தூரத்தில் உள்ளது. ஒரு நாளில் சுமார் 4 பாகை 5 கலை நகர்ந்து செல்கிறார்.
பரிகாரங்கள் மற்றும் புதன் பலம் அதிகரிக்க வழிமுறைகள்
புதன் கிழமைகளில் விரதமிருந்து விஷ்ணு பகவானை வழிபடுவதால் புதன் பகவானால் ஏற்படும் பாதிப்புகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும்.
முளைகட்டிய பச்சை பயிரை சாப்பிடுவதால் புதன் கதிர்வீச்சை பெற இயலும். இதன் மூலம் நல்ல சிந்தனை, மூளை வளர்ச்சி ஏற்படும். மேலும் புதன்கிழமைகளில் பச்சை பயிறை தானம் செய்வதாலும் புதன் பகவானின் அருளை பெற இயலும். புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் விரதமிருந்து விஷ்ணு பகவானை வழிபடுவதால் புதனால் ஏற்படும் நோய்கள் மற்றும் பிரச்சனைகள் விலகி நற்பலன்களை பெற இயலும்.
புதன் காரகத்துவம்
முக்கிய காரகங்கள்
- புத்தி காரகன்
- தாய்மாமன் காரகன்
உறவுகள்
- தாய்மாமன்
- கடைசி சகோதரன்/சகோதரி
- நண்பர்கள்
- காதலன்/காதலி
உடல் பாகங்கள்
- நெற்றி
- நாக்கு
- கழுத்து
- கைகள்
- தோள்பட்டை
- தொண்டை
- தொப்புள்
- நரம்பு மண்டலம்
- தோல்
- விரல்கள்
உணவுப்பொருட்கள்
- மைதா
- ரொட்டி, பிரட், சான்விச்
- பச்சை பயறு
- வெண்டைக்காய்
- பீன்ஸ்
பொதுவான காரகங்கள்
- விஷ்ணு பகவான் (அதி தேவதை)
- சப்த கன்னியர்கள்
- இளமையான அனைத்தும்
- திட்டமிடல்
- பேசுதல்
- சமாதானம்
- பச்சோந்தி தன்மை
- அமைதி
- மௌன விரதம்
- பொது அறிவு
- எளிதில் புரிந்துகொள்ளல்
- மெலிந்த அழகான தோற்றம்
- விகடத்தன்மை
- தவனை முறை
- காலி நிலம்
- பல குரல்
- நடிப்பு, இயக்கம்
- நகைச்சுவை
- எடிட்டிங், டப்பிங்
- பச்சை நிறம்
- கணக்கு, கணித திறன் – நடைமுறை கணிதம்
- கடத்தி
- நுட்பமானது
- அனைத்து விதமான கோப்புகள்
- ஏஜென்சி
- மார்க்கெட்டிங் தொழில்
- முகவரி
- மொபைல்
- சிந்திக்க தூண்டுதல்
- நகைச்சுவை
- பித்தளை
- சிற்றின்பம்
- சார்ந்து செயல்படுதல் – கூட்டுறவு
- நல்ல நண்பர்கள்
- தந்தி, தகவல் தொடர்பு
- எழுத்து, பத்திரிக்கை
- நூலகம்
- தந்திர புத்தி
- இரட்டை பேச்சு
- காசோலைகள்
- காற்று
- நிலையில்லாத்தன்மை
- காலண்டர்
- கடிகாரம்
- மாற்றத்திற்கான பத்திரம்
- வர்ணனை
- கிரகித்தல்( உள்வாங்குதல்)
- சிறுதூர பயணம்
- வதந்தி
- பிரின்டிங் பிரஸ்
- பங்குதாரர்
- கல்விக்கூடம்
- சமயோசித புத்தி
- தூது சொல்லல்
- கதை, கட்டுரை, பாடல்
- சர்க்கஸ்
- நாடகம்
- வாகன வசூலிப்பவர் – toll gate
- கால்குலேட்டர்
- வக்கீல்
- ஜோதிடர்
- தரகர்
- நர்ஸ் – இளமையான
- அலி தன்மை
- டிக்கெட் செக்கர்
- பதிவாளர் – முத்திரைத்தாள்
- தபால் காரர்
- புள்ளியியல் ஆய்வாளர்
- பஞ்சாங்கம்
- டெண்டர்
- விலாசம்
- ஜாமீன்
- அளவுகோல்
- ரசமட்டம்
- பாதரசம்
- புத்தக கடை
- வடக்கு திசை
- கிணறு
- தண்டோரா போடுதல்
- ஒலிபெருக்கி
- வங்கிகள்
- தங்கும் விடுதி அறை
- வரவேற்பு அறை
- படிக்கும் அறை
- வணிக ஸ்தலம்
- மலர் – வெண்காந்தள்
- நிறம் – பச்சை
- குணம் – தாமசம்
- சுவை – உவர்ப்பு
- வடிவம் – அம்பு வடிவம்
- சமித்து – நாயுருவி
- தோற்றம் – சம உயரம்
- வாகனம் – குதிரை
- உபகிரகம் – அர்த்த பிரகரணன்
- ரத்தினம் – மரகதம்
வேறு பெயர்கள்
- அருணன், கணக்கன், பண்டிதன், மாலவன், மால், கொம்பன், பாகன்
தொழில்கள்
- ஆசிரியர் தொழில்
- ஆடிட்டர்
- பதிவாளர்
- ஜோதிடர்
- பத்திரிக்கையாளர்
- வக்கீல் தொழில்
- தரகு தொழில்
- அஞ்சல் துறை
- தொலை தொடர்பு துறை
- புத்தக வியாபாரம், பேச்சாளர்
- உளவுத்துறை
- பங்கு வர்த்தகம் சார்ந்த தொழில்
- கன்சல்டிங்
நோய்கள்
- கழுத்துவலி
- தொண்டை வலி
- தோள்பட்டை வலி
- நரம்பு தளர்ச்சி
- வலிப்பு நோய்
- தோல் நோய்கள்(தேமல்)
- ஞாபக மறதி
புதன் 12 பாவங்களில் நிற்பதால் ஏற்படும் பலன்கள்
லக்னத்தில் நிற்பதால் ஏற்படும் பலன்கள்
- இளமையான தோற்றம் உடையவர்
- படிப்பாளி
- இளம் வயதில் திருமணம்
- மத வழிபாட்டில் ஈடுபாடு உடையவர்
- பயணத்தில் ஆர்வம் உள்ளவர்
- இனிமையாக பேசக்கூடியவர்
- வாத சம்பந்தமான நோய்களால் பாதிக்கப் படுவார்
- ஜோதிடத்தில் ஆர்வம் உள்ளவர்
- நகைச்சுவை உணர்வு மிக்கவர்
- அமைதியை விரும்பக்கூடியவர்
- ஆராய்ச்சி குணம் மிக்கவர்
- நடுநிலையாக இருக்கக்கூடிய நபர்கள்
- பிறருக்கு கற்பதில் விருப்பம் உள்ளவர்
- பொறுமைசாலி
- ஆயுள்பலம் உண்டு
2-ம் பாவத்தில் நிற்பதால் ஏற்படும் பலன்கள்
- பொருளாதார முன்னேற்றம் உண்டு
- குழந்தை பிறந்த பின் பொருளாதார முன்னேற்றம்
- நற்குணங்களை உடையவராக இருப்பார்கள்
- போதுமென்ற குணமே இவர்களுக்கு முன்னேற்றத்தை தரும்
- சுவாச சம்பந்தமான பிரச்சினைகள் உண்டு
- அறிவில் சிறந்தவர்களாக இருப்பார்கள்
- நல்ல ஒழுக்க சீலராக விளங்க கூடியவர்கள்
- சாந்தமான தோற்றம் உடையவர்கள்
- இனிமையாக பேசக்கூடியவர்கள்
- போஜனப் பிரியர்கள்
- புத்திசாலிகள்
- பேரும் புகழும் பெறக்கூடிய நபர்கள்
- தர்ம சிந்தனை உடையவர்கள்
3-ம் பாவத்தில் நிற்பதால் ஏற்படும் பலன்கள்
- சகோதரர்கள் உண்டு, அவர்களால் ஆதாயம் உண்டு
- பொருளாதாரத்தில் நல்ல நிலையை அடைய கூடியவர்கள்
- ஜாதகர் கூச்ச சுபாவம் உள்ளவர்
- நற்குணங்களை உடையவர்கள்
- பிறருக்கு உதவி செய்யக் கூடியவர்கள்
- அனைத்து பாக்கிய அனைத்து பாக்கியங்களையும் பெறக்கூடியவர்கள்
- நீண்ட ஆயுளை உடையவர்கள்
- தைரியம் உள்ளவர்கள்
- சொந்த உழைப்பால் முன்னேற கூடியவர்கள்
- கடின உழைப்பாளிகள்
- நிலையற்ற மனதை உடையவர்கள்
- தொழில் செய்தால் முன்னேற்றம் அடையக் கூடியவர்கள்
- சகோதர, சகோதரிகள் இவரை சார்ந்து வாழக்கூடிய சூழ்நிலை உண்டாகும்
4-ம் பாவத்தில் நிற்பதால் ஏற்படும் பலன்கள்
- கல்வி அறிவு மிக்கவர்கள்
- வீடு, வாகனம், வசதிகள் உண்டு
- சொத்து அமைவதில் தாமதம்
- திருப்தியான வாழ்க்கையை வாழக்கூடியவர்கள்
- ஆடைகள் அணிவதில் விருப்பம் உள்ளவர்கள்
- நிறைய சொந்த பந்தங்களை உடையவர்கள்
- நண்பர்களை உடையவர்கள்
- அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு
- பரம்பரை சொத்து பிரச்சனை உண்டு
5-ம் பாவத்தில் நிற்பதால் ஏற்படும் பலன்கள்
- ஜாதகர் மிகவும் புத்திசாலி
- இனிமையான பேச்சு உடையவர்கள்
- வசியம் செய்வதில் விருப்பம் உள்ளவர்கள்
- மிகவும் புத்திசாலிகள்
- தாமத புத்திரம்
- தாய்மாமன் வழி உறவால் ஆதாயம் இல்லை
- ஆடம்பர பிரியர்
- ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டு
- வசதியான வாழ்க்கை உண்டு
6-ம் பாவத்தில் புதன் இருப்பதால் ஏற்படும் பலன்கள்
- அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு
- கல்வி கற்பதில் தடை, தாமதம் உண்டு
- தற்பெருமை உடையவர்கள்
- எழுத்துத் துறையில் முன்னேற்றம் காணக் கூடியவர்கள்
- எதிரிகள் உண்டு
- சோம்பேறித்தனம் மிக்கவர்கள்
- சாந்தமான குணம் உடையவர்கள்
- அவசர குணமுண்டு
- அவமானத்தை சந்திக்கக் கூடியவர்கள்
7-ம் பாவத்தில் புதன் நிற்பதால் ஏற்படும் பலன்கள்
- களத்திரம் இளமையான தோற்றம் உடையவர்,படிப்பறிவு மிக்கவர்
- அதிக நண்பர்கள் உண்டு
- களத்திரம் பெயரில் தொழில் செய்தால் முன்னேற்றம் உண்டு
- காதல் உண்டு
- களத்திரம் அழகான தோற்றம் உடையவர், நல்ல குணங்களை உடையவராக இருப்பார்
- மதிப்பு, மரியாதைக்கு உரிய நபராக விளங்குவர்
- பெண்களால் ஆதாயம் உண்டு
8-ம் பாவத்தில் நிற்பதால் ஏற்படும் பலன்கள்
- நீண்ட ஆயுள் உண்டு
- திடீர், அதிர்ஷ்டம் உண்டு
- புகழ், கீர்த்தி, அதிகாரம் போன்றவை ஜாதகருக்கு ஏற்படும்
- குடும்ப பாரத்தை சுமக்க கூடியவர்களாக இருப்பார்கள்
- வக்கீல் தொழிலில் முன்னேற்றம் உண்டு
- வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு
- சிறந்த சிந்தனையாளர்
- இனிமையாக பேசக்கூடியவர்
- நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள்
- ENT பிரச்சனை உண்டு
- வீட்டில் தற்கொலை செய்தவர்கள் உண்டு
- இரண்டாவது சொத்து வாங்குவதில் தடை
- ஓய்வுதியம் பெறக்கூடியவர்கள்
- தோல் சார்ந்த வியாதிகள் உண்டு
- ஜோதிட அறிவு மிக்கவர்கள்
- விஷ்ணு சம்பந்தமான வழிபாட்டை விரும்பக் கூடியவர்கள்
- மலச்சிக்கல் பிரச்சனை உண்டு
- ஆசிரியர், ஜோதிடர் உள்ள குடும்பம்
9-ம் பாவத்தில் இருப்பதால் ஏற்படும் பலன்கள்
- ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டு
- இசை துறையில் நாட்டம் உண்டு
- அருமையான வரிகள் புகழ் உண்டு
- செல்வம் சேர கூடிய அமைப்பு உண்டு
- தந்தைக்கு நீண்ட ஆயுள் உண்டு
- யோகா-தியானம் போன்றவற்றில் ஈடுபாடு உண்டு
- மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழக்கூடியவர்கள்
- குழந்தைகள் உண்டு
- சிறந்த பேச்சாளர்கள்
- திறமைசாலிகள், இவரால் குடும்பத்திற்கு புகழ் வந்து சேரும்
10-ம் பாவத்தில் நிற்பதால் இருக்கும் பலன்கள்
- தொழிலில் திறமைசாலிகள் எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிக்க கூடியவர்கள்
- புகழ் உண்டு
- சிந்தனைவாதிகள்
- அதிகாரம் மிக்கவர்கள்
- மகிழ்ச்சியானவர்கள்
- நற்காரியங்களை செய்யக்கூடியவர்கள்
- வாழ்க்கையில் வெற்றியடைய கூடியவர்கள்
- பொறுமைசாலிகள்
- அரசு விருதுகளை பெறக்கூடியவர்கள்
- பூர்வீக சொத்து உண்டு
- குறைவாக பேசக்கூடியவர்கள்
11-ம் பாவத்தில் புதன் நிற்பதால் ஏற்படும் பலன்கள்
- ஜாதகர் செல்வந்தராக இருப்பார்கள்
- பணம் பல வழிகளில் வந்து சேரும்
- இளகிய மனம் உடையவர்கள்
- மகிழ்ச்சி உண்டு
- கல்வி கற்பதில் விருப்பம் உள்ளவர்கள்
- புகழ், வசதி, வாய்ப்பு போன்றவை தேடி வரும்
12-ம் பாவத்தில் நிற்பதால் ஏற்படும் பலன்கள்
- ஜாதக குணம் கொண்டவர்கள்
- கல்வி கற்பதில் விருப்பம் உள்ளவர்கள்
- தன் வார்த்தையை காப்பாற்றுவார்கள்
- சோம்பேறிகள்
- அரசால் அவமானம் அடைய கூடியவர்கள்
- சிறந்த பேச்சாளர்கள்
- பொருளாதாரத்தில் தோல்வியை சந்திக்க கூடிய நபர்கள்
- எதிரிகளை வெல்ல கூடியவர்கள்
- பெரியவர்களை மதிக்கக் கூடியவர்கள்
- புனித யாத்திரை செல்லுதல்
மேலும் படிக்க : செவ்வாய் காரகத்துவங்கள்