சந்திரன்
தமிழ் ஜோதிடத்தில் சந்திரனின் பங்கு மிக முக்கியமாகும். சூரியன் கதிர்வீச்சை பெற்று அதன்மூலம் உயிர்களுக்கு பலன்களை அளிக்கக் கூடிய சக்தி சந்திர
பகவானுக்கு உண்டு. சூரியன் ஆத்ம காரகன் என்றால் சந்திரன் மதி மற்றும் உடலுக்கு காரகனாக வருகிறார். ஜோதிடத்தில் தாய் காரகன் எனவும் அழைக்கப்படுகிறார். சந்திரன் இரவுக்கு அதிபதியாகிறார் குளிர்ச்சியானவர். எனவே குளிர்ச்சி சார்ந்த அனைத்து விஷயத்திற்கும் காரகனாக வருகிறார். அழகுக்கு காரகனாக சந்திரன் வருகிறார். சந்திரன் ஒரு பெண் கிரகம். சந்திரனும் ஒரு அரச கிரகம், எனவே தொழில் ஸ்தானத்தோடு சம்பந்தப் படும்போது அரசு சார்ந்த பணிகளில் ஜாதகர் பொருள் ஈட்டுவார்.
உடல் பாகங்களில் உடல், ரத்தம் போன்ற பாகங்களை ஆளுமை செய்கிறார். நோய்களில் கபம், சிலேத்துமம் சம்பந்தமான நோய்களுக்கு காரகம் வகிக்கிறார். மனிதர்களுக்கு ஏற்படும் உணர்ச்சிகள், குடும்பம் சார்ந்த நினைவுகள், கற்பனை சக்தி, கவிதை, மனம் சார்ந்த பிரச்சனைகள், தாழ்வு மனப்பான்மை, பயந்த சுபாவம், கிரகித்துக் கொள்ளும் சக்தி முதலியவற்றிற்கு காரணமாக வருகிறார். மேலும் சந்திரனைக் கொண்டு அனைத்து திதிகள், நற்காரியங்கள், உற்சவங்கள் போன்றவை நிகழ்த்தப்படுகின்றன.
அமைப்பு
தெய்வங்களில் சக்தியின் சொரூபமாக சந்திரன் விளங்குகிறார். எனவே சக்தியை வழிபடுவதால் சந்திரனின் அருளைப் பெற இயலும். தோற்றத்தில் குள்ளமான
தோற்றத்தை குறிக்க கூடியவர். சத்துவகுணத்தை குறிக்க கூடியவர், தானியங்களில் நெல் தானியத்தை குறிக்கும். மலர்களில் வெல்லல்லி மலர்களை குறிப்பவர். சுவைகளில் இனிப்பு சுவையை குறிக்கும், ரத்தினங்களில் முத்து, நிறத்தில் வெள்ளை நிறத்தை குறிக்கும். செடிகளில் முருங்கையை குறிக்கும். விலங்குகளில் ஆண் நாகத்தை குறிக்கும். வாகனத்தில் முத்து விமானத்தை குறிக்கும். பறவைகளில் ஆந்தையை குறிக்கும். வஸ்திரத்தில் வெள்ளை வஸ்திரத்தை குறிக்கும். அதிதேவதை பார்வதி. சந்திரனுக்குரிய ஆலயம் திருப்பதி. சந்திரனுக்குரிய வழிபாட்டு பொருள் சாம்பிராணி.
சந்திரன் பூமியை விட அளவில் சிறியதாகவும், பூமிக்கு மிக அருகில் உள்ள கிரகம் சந்திரன் ஆகும். அதனால் பூமியில் உள்ள ஜீவராசிகள் மீதும் சந்திரனின் ஆதிக்கம் மிக அதிகமாக இருக்கும். எனவே தான் சந்திரனை அடிப்படையாக வைத்து அனைத்து திதிகள், நல்ல நேரங்கள் அனைத்தும் நிர்ணயிக்கப்படுகின்றன.
அதேபோல் மிக வேகமாக நகர கூடிய கிரகத்தில் சந்திரன் முதன்மை வைக்கிறது. இதன் விட்டம் சுமார் 20 ஆயிரத்து 60 மைல்கள் ஆகும். பூமியை சுற்றி வர 27 நாட்கள் ஆகிறது. பூமியிலிருந்து சுமார் 2 லட்சத்து 40 ஆயிரம் மைல்கள் தூரத்தில் உள்ளது.
சந்திரனின் இயக்கத்தில் வளர்பிறை தேய்பிறை தோற்றங்கள் உண்டு. வளர்பிறை சுக்ல பட்சம் என்றும் தேய்பிறை கிருஷ்ணபட்சம் என்றும் அழைக்கப்படுகிறது. பொதுவாக நற்காரியங்களுக்கு வளர்பிறை சார்ந்த நேரங்களை மட்டுமே பயன்படுத்துகின்றனர். ஒருவரின் ஜென்ம நட்சத்திரம் மற்றும் ராசி பிறந்த போது சந்திரன் உள்ள நிலையை வைத்து கணிக்கப்படுகிறது. சந்திரன் ஒரு ராசியைக் கடக்க 2 1/4 நாள் எடுத்துக்கொள்கிறார். சந்திரன் ரோகிணி, அஸ்தம், திருவோணம் போன்ற நட்சத்திரத்திற்கு அதிபதியாகிறார்.
சந்திரன் பலம் அதிகரிக்க வழிமுறைகள்
ஜாதகத்தில் சந்திரன் பலமிழந்து இருப்பதால் ஜாதகருக்கு பல்வேறு பிரச்சனைகள் எழும். அதாவது மனக்குழப்பம், எதிலும் ஒரு ஸ்திரமான முடிவு எடுக்காத நிலை போன்ற நிலைகளை ஜாதகர் சந்திப்பார். எனவே சந்திரனின் பலத்தை அதிகரிக்க சந்திரன் தானியமான அரிசி அதாவது பச்சரிசியை அதிகம் எடுத்துக்கொள்வதால் சந்திரனின் கதிர்வீச்சை நாம் பெற இயலும். குறிப்பாக பௌர்ணமி அன்று அரிசியை வாங்கி பயன்படுத்த தொடங்குவது நல்ல பலனைத் தரும். அதேபோல் திங்கட்கிழமை அன்று சிவன் கோயிலுக்கு சென்று பார்வதியை வழிபடுவதால் சந்திரன் பலத்தை நாம் அதிகரிக்க இயலும். இதனால் ஜாதகருக்கு மன குழப்பம் தடை, தாமதம் போன்றவை இருந்தால் அவை நீங்கி நற்பலனை பெற இயலும். மேலும் பௌர்ணமி அன்று திருவண்ணாமலை கிரிவலம் செல்வதால் சந்திரனின் கதிர்வீச்சை பெற இயலும்.
சந்திரனின் காரகத்துவங்கள்
முக்கிய காரகங்கள்
- மனோ(மதி) காரகன்
- தாய் காரகன்
உறவுகள்
- தாய்
- மாமியார்
உடல் பாகங்கள்
- ரத்தம் (நீர் தன்மை)
- மார்பு
- இடது கண்
- கர்ப்பப்பை
- சிறுநீரகம்
- குடல்
உணவுப்பொருட்கள்
- பால், தயிர், மோர்
- அரிசி மாவு
- கசகசா
- பழங்கள் – ஆரஞ்சு, மாம்பழம், வாழைப்பழம்
- காய்கறிகள் – வெள்ளரிக்காய், பூசணி
வேறு பெயர்கள்
- சோமன், மதி, சசி, இந்து
பொதுவான காரகங்கள்
- அழகு
- அமைதி, அன்பு
- பாசம் செலுத்தும்
- கூட்டம்
- குழப்பமான நிலை
- நீர் தன்மை
- நீர் சூழ்ந்த இடங்கள்
- பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளாது
- ஞாபக சக்தி
- இரவு
- பௌர்ணமி
- பிறரை அணுகி பிழைத்தல்
- அரசு கிரகம்
- வர்ணங்கள்
- அவசரம்
- கண்ணீர்
- குணச்சித்திர நடிப்பு
- ஓடி விளையாடக்கூடிய விளையாட்டு
- உதவியாளர்
- வெளிநாடு
- சலனம்
- தீய பழக்கம்
- உயர்கல்வி
- நீரில் கண்டம்
- உயர்கல்வியில்
- உணர்ச்சிவசப்படுதல்
- ஏற்றுமதி
- மயக்கம்
- ஒழுக்கக் குறைவு
- தேய்மானம்
- மன்னிப்பது
- உணவு
- காய்கறிகள்
- நெய்(ஏழாம் பாவம்)
- பால்,தயிர்,மோர், வெண்ணை, ஐஸ்கிரீம்
- குளியலறை
- இடது ஜன்னல்கள்
- வயது மூத்த பெண் (தாய்மை அடைந்த பின்)
- தாழ்வு மனப்பான்மை
- ஜவுளிகள்
- கலப்படம்
- பூக்கள்
- சுண்ணாம்பு
- சுவாமி படங்கள்
- கர்ப்பப்பை
- கருவுறுதல்
- சாராயம் (டாஸ்மாக்)
- சலவை செய்யும் இடம்
- மலர் – வெள்ளை அரளி
- உலோகம் – ஈயம்
- நிறம் – வெண்மை
- குணம் – சாத்வீகம்
- சுவை – இனிப்பு
- வடிவம் – சதுரம்
- சமித்து – முருங்கை
- தோற்றம் – குள்ளம்
- உபகிரகம் – பரிவேடன், கலை ஞானபாதன்
- ரத்தினம் – முத்து
தொழில்கள்
- உணவுகள் சம்மந்தப்பட்ட தொழில்கள்(உணவகம்)
- விவசாயம்
- கப்பல் துறை
- மீன் பிடி தொழில்
- மீடியா, செய்திகள் சார்ந்த தொழில்கள்
- வெளிநாடு சென்று தொழில் செய்தல்
- திருட்டு தொழில்
- கதை எழுதுதல்
- மளிகை தொழில்
நோய்கள்
- மன நோய்
- வாந்தி, பேதி
- ஜலதோஷம்
- சளி, இருமல், வீசிங்
- காக்காய் வலிப்பு
- காச நோய்
- இரண்யா (குடல் நோய்)
- ரத்தம் சார்ந்த நோய்கள்
12 பாவங்களில் சந்திரன் நிற்பதால் ஏற்படும் பலன்கள்
லக்னத்தில் நிற்பதால் ஏற்படும் பலன்கள்
- அழகான தோற்றமும் உடையவர்
- உடல் பருமனாக காணப்படுதல்
- நிலையற்ற மனதை உடையவர்
- பயணம் செய்வதில் விருப்பம் உடையவர்
- சாஸ்திர அறிவு பெறுவதில் விருப்பமுடையவர்
- இனிமையான பேச்சை உடையவர்
- நல்ல உடல் அமைப்பு இருக்கும்
- கண் சார்ந்த பிரச்சனை உண்டு
- தாய் மீது பாசம் உள்ளவர்
- ஆன்மீக ஈடுபாடு உண்டு
- அன்பு, கருணை போன்ற குணங்களை உடையவர்கள்
- சாதித்த மாணவர்கள்
- ஜோதிடத்தில் ஆர்வம் உண்டு
- சமூக சேவையில் ஈடுபாடு உண்டு
- சக்தி வழிபாடு செய்வதில் விருப்பம் உண்டு
2-ம் பாவத்தில் நிற்பதால் ஏற்படும் பலன்கள்
- வாகன தொழில் முன்னேற்றம் உண்டு
- அரசாங்க அரசியல் ஈடுபாடு முன்னேற்றத்தை தரும்
- தாய் மூலம் ஆதாயம் உண்டு
- இனிமையாக பேசக் கூடியவர்கள்
- வீட்டு அருகில் நீர் நிலை உண்டு
- வீட்டு அருகில் அம்மன் கோவில் உண்டு
- அடிக்கடி சிறு சிறு உடல் உபாதைகள் ஏற்படும்
- செல்வத்திற்கு குறைவிருக்காது
- கல்வியில் முன்னேற்றம் உண்டு
- வாழ்க்கையில் சாதனையாளர்களாக இருப்பார்கள்
3-ம் வீட்டில் நிற்பதால் ஏற்படும் பலன்கள்
- சகோதர சகோதரிகளால் ஆதாயம் இல்லை ஏமாற்றமே மிஞ்சும் ஆனால் அவர்கள் மீது பாசம் அதிகம் உடையவர்கள்
- மூட்டு சார்ந்த பிரச்சனைகள் உண்டு
- புத்திசாலிகள்
- கல்வியில் சிறந்தவர்கள்
- சுய முயற்சியால் பொருளீட்ட கூடியவர்கள்
- வாழ்வின் பிற்பகுதியில் ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்
- மத போதகர் போன்ற நிலைகளை அடைய கூடியவர்கள்
- பிறருக்கு உதவுதல் மகிழ்ச்சி அடையக் கூடியவர்கள்
4-ம் பாவத்தில் நிற்பதால் ஏற்படும் பலன்கள்
- ஜாதகர் பெரும் புகழை அடையக் கூடியவர்
- அரசாங்கத்தால் உயர் பதவியை அடைய கூடியவர்
- வீடு வாகன யோகம் உடையவர்
- விவசாயம்
- பொருளாதார வசதிகள் தேடிவரும்
- போஜனப் பிரியர்
- ஏதாவது வியாதியால் பாதிக்கப்பட்டு இருப்பார்
- தாய்க்கு நீண்ட ஆயுள் உண்டு
- வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ கூடியவர்
- வெளிநாடு சென்று பொருளீட்ட கூடிய யோகம் உண்டு
- குழந்தை பருவத்தில் வறுமையை சந்திக்கக்கூடிய நபர்களாக இருப்பார்கள்
5-ம் பாவத்தில் நிற்பதால் ஏற்படும் பலன்கள்
- ஜாதகருக்கு பெண் குழந்தைகள் உண்டு
- அழகான மனைவியை உடையவர்கள்
- கடின உழைப்பாளிகள்
- எப்போதும் கவலையோடு காணப்படுவார்கள்
- வசதி வாய்ப்புகள் உள்ளவர்கள்
- எப்போதும் கவலையோடு காணப்படுவார்கள்
- குலதெய்வம் பெண் தெய்வமாக இருக்கும்
- காதல் திருமணம் யோகமுண்டு
- மறைபொருள் சார்ந்த விஷயங்களில் அதிக ஈடுபாடு உண்டு
- வயிறு சார்ந்த பிரச்சினைகள் உண்டு
- சிறுநீரகம், ரத்தம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும்
6-ம் பாவத்தில் நிற்பதால் ஏற்படும் பலன்கள்
- ஜாதகர் வறுமையை சந்திக்கக்கூடிய நபராக இருப்பார்
- நோய்களால் அவதிப்பட கூடிய நபர்
- தவறான நடவடிக்கையை உடையவர்
- எதிரிகளால் அதிக பிரச்சினையை சந்திக்க கூடிய நபராக இருப்பார்
- நீர் சார்ந்த இடங்களில் கண்டம் ஏற்படும்
- அடிக்கடி பிரச்சனைகளை எதிர்கொள்ள கூடிய நபராக இருப்பார்
- செல்வத்தை இழக்கக் நேரிடும்
- ஜீரண சக்தி குறைபாடு ஏற்படும்
- முன்கோபி சோம்பேறித்தனம் மிக்கவர்
7-ம் பாவத்தில் இருப்பதால் ஏற்படும் பலன்கள்
- களத்திரம் அழகான தோற்றத்தை உடையவர்
- பெண் நண்பர்கள் அதிகம்
- சக்தி வழிபாட்டில் விருப்பம் உண்டு
- அரசாங்க அரசியல் ஈடுபாடு உண்டு
- பெண்களால் ஏமாற்றம் மிஞ்சும்
- வெளிநாட்டு யோகம் உண்டு
- களத்திரம் மீது பாசம் அதிகம் உடையவர்
- களத்திரம் பொறுமை, சாந்தம், தயவு போன்ற குணங்களை உடையவர்
- வாழ்க்கைத் துணையால் முன்னேற்றம் உண்டு
- திருமணத்திற்கு பெண் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்
8-ம் பாவத்தில் இருப்பதால் ஏற்படும் பலன்கள்
- தாய்க்கு நீண்ட ஆயுள் உண்டு
- இடது கண் பாதிப்பு ஏற்படும்
- திடீர் அதிர்ஷ்டம் உண்டு
- தாய்க்கு விபத்து, கண்டம் போன்றவை ஏற்படும்
- தண்ணீரில் கண்டம் உண்டு
- ஜாதகர் தனிமையில் வாழக்கூடிய சூழ்நிலை உண்டாகும்
9-ம் பாவத்தில் இருப்பதால் பலன்கள்
- சக்தி வழிபாடு செய்வதில் விருப்பம் உண்டு
- பிரசன்ன ஜோதிடத்தில் சிறந்து விளங்க கூடியவர்கள்
- குருமார்கள் ஆசீர்வாதம் உண்டு
- தர்ம சிந்தனை உள்ளவர்கள்
- படிப்பறிவு மிக்கவர்கள்
- நல்ல குழந்தைகளையும் வசதி வாய்ப்பு உள்ளவர்கள்
- வாழ்க்கையில் அனைத்து பாக்கியங்களையும் பெற்று வாழக்கூடிய நபர்கள்
10-ம் பாவத்தில் இருப்பதால் ஏற்படும் பலன்கள்
- தொழில் முன்னேற்றம் உண்டு
- காய்கறி கடை, பால் சார்ந்த உணவு பொருட்கள் விற்பனை, குளிர்பான தொழில் போன்றவற்றால் ஆதாயம் உண்டு
- நிர்வாகத் திறமை உள்ளவர்கள்
- கல்வியில் சிறந்து விளங்க கூடியவர்கள்
- திறமை உள்ளவர்கள்
- எடுத்த காரியத்தை சிறப்பாக முடிக்க கூடியவர்கள்
11-ம் பாவத்தில் நிற்பதால் ஏற்படும் பலன்கள்
- நல்ல குழந்தைகள் உண்டு
- பிறருக்கு உதவ கூடியவர்கள்
- வாகன யோகமுண்டு
- வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை அடைய கூடியவர்கள்
- பிறருக்கு உதவி செய்யக் கூடிய நபர்கள்
- அனைத்து எண்ணமும் ஈடேறும்
- சிறந்த கல்விமானாக இருப்பார்கள்
- வீடு, சொத்து போன்ற யோகங்கள் உண்டு
12-ம் பாவத்தில் நிற்பதால் ஏற்படும் பலன்கள்
- சட்டவிரோத வழியில் பணத்தை இடுபவர்கள்
- பெண்களால் அவமானம் ஏமாற்றம் உண்டு
- வெளிநாட்டு யோகம் உண்டு
- ஜாதகருக்கு வருமையான சூழ்நிலை உண்டாகும்
மேலும் படிக்க : சூரியன் காரகத்துவங்கள்