ரிஷப ராசி
கால புருஷனுக்கு ரிஷப ராசி இரண்டாவது ராசி.இது ஒரு பெண் ராசி. காளை மாட்டின் உருவமுடையது. பஞ்சபூத தத்துவத்தில் நில தத்துவ ராசி. ராசி தன்மையில் ஸ்திர ராசி. இதன் அதிபதி சுக்கிர பகவான். இதன் பாகை 30 முதல் 60 பாகை வரை. சந்திர பகவான் உச்சமடையும் ராசி. கார்த்திகை நட்சத்திரத்தின் 2,3,4 பாதங்களும், ரோகினியின் 1,2,3,4 பாதங்களும் , மிருக சீரிஷத்தின் 1,2 பாதங்களும் இந்த ராசியில் உள்ளன.
இந்த ராசிக்காரர்கள் பொறுமைசாலிகள், போஜனப் பிரியர்கள், செய்யக்கூடிய வேலைகளை தெளிவாகவும், அறிவினாலும் நேர்த்தியாக செய்து முடிப்பவர்கள். குடும்பத்தாரிடம் அதிக அன்பு செலுத்தக்கூடிய நபர்கள். குடும்ப சுமைகளை சுமக்க கூடியவர்கள். ஆன்ம பலம் உள்ளவர்கள். கடின உழைப்பாளிகள. அன்பானவர்கள். நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள். மேஷராசிக்காரர்களுக்கு வெண்மை,பச்சை, சாம்பல் நிறம் போன்ற நிறங்கள் நன்மைதரும். சிவப்பு மஞ்சள் நீலம் போன்றவை ஆகாது. புதன், வெள்ளி, சனி, திங்கள் கிழமைகள் நன்மை செய்யக்கூடியது. ஞாயிறு, செவ்வாய், வியாழன் சிறப்பான பலன்களைத் தராது. இந்த ராசியில் எந்த ஒரு கிரகமும் நீச்சம் அடைவதில்லை.
ரிஷப ராசியின் காரகத்துவங்கள்
- பசு மாடு
- வீதியின் நடுப்பகுதி
- மாடுகள் வளர்த்த குடும்பம்
- விலையுயர்ந்த ஆடை மற்றும் ஆபரணங்கள்
- கவிதை, பாட்டு
- பஞ்சு, நூல்
- சணல்
- காமதேனு
- யானை, முயல்
- துளசி, வெற்றிலை
- உயர்ரக பழங்கள்
- ஜவுளிகள்
- பூக்கள்
- சொகுசு வாகனங்கள்
- காதல் ராசி (சுக்ரன்)
- பேன்சி ஸ்டோர், பியூட்டி பார்லர்
- தியேட்டர் மற்றும் ATM வீட்டருகில் இருக்கும்
- மேய்ச்சல் நிலம்
- வெளிநாட்டு வருமானம்
- கழுத்து, முகம், தாடை
- அகத்தி மரம், பலா மரம்
- அரிசி
- பால் பொருட்கள்
- சர்க்கரை
- மாட்டு கொட்டகை
- புல்வெளிகள்
- விவசாய நிலங்கள்
- பெண்கள் உள்ள இடங்கள்
- அரிசி
- பால் பொருட்கள்
- சர்க்கரை
இடங்கள்
- மாட்டு கொட்டகை
- புல்வெளிகள்
- விவசாய நிலங்கள்
- பெண்கள் உள்ள இடங்கள்
- பணப்புழக்கமுள்ள இடங்கள்
- ஆடம்பர பொருட்கள் உள்ள இடங்கள்
- கிராமப்புற பகுதிகள்
- மேய்ச்சல் நிலங்கள்
தொழில்கள்
- விலை உயர்ந்த ஆபரண தொழில்
- வட்டித்தொழில்
- கலை சார்ந்த தொழில்கள் (கவிதை ,பாட்டு ,இசை ,நடிப்பு )
- இனிப்பு பண்டங்கள் சார்ந்த தொழில்கள்
- வங்கி வேலை
- சினிமா தியேட்டர்
- சொகுசு பொருட்கள் விற்பனை
- திருமண மண்டபம்
- தங்கும் விடுதிகள்
நோய்கள்
- தொண்டை நோய்
- கண் நோய்
- மூக்கு சம்பந்தமான நோய்
- பல் நோய்
ரிஷப ராசியின் பொதுவான குணங்கள்
தோற்றம்
- பருத்த சிவப்பு நிற உடம்பு
- குட்டையானவர்
- கவர்ச்சியான முகத்தோற்றம்
- பெரிய உதடு
- அகன்ற மார்பு
- குட்டையான கழுத்து
- சதைப்பற்றான கைகள்
சிறப்பு குணங்கள்
- குறிக்கோள் உடையவர்கள்
- அன்பானவர்கள்
- நம்பிக்கையுடையவர்கள்
- சகிப்புத்தன்மை உள்ளவர்கள்
- தியாகம் செய்பவர்கள்
- கலையில் ஆர்வமுடையவர்கள்
- கடவுள் பக்தியுடைவர்கள்
- நீதி, நேர்மையை கடைபிடிப்பவர்கள்
- எளிதில் உணர்ச்சிவசப்பட மாட்டார்கள்
மாற்றிக்கொள்ள வேண்டிய குணங்கள்
- கர்வம்
- கடுங்கோபம்
- பேராசை
- பொறாமை குணம்
- சோம்பேறித்தனம்
பொதுவான பாவ பலன்கள்
1-ம் பாவம்
- செலவாளி
- கஷ்டங்களை கண்டு அஞ்சாதவர்கள்
- வாழ்க்கை துணை மூலம் செல்வம் உண்டு
- வசீகரமான முக தோற்றம் உடையவர்கள்
- தொழில் சார்ந்த சிந்தனை அதிகம்
- கவர்ச்சியான கண்களை உடையவர்கள்
- நேர்மையானவர்கள்
- வெளிப்படையாக பேசும் குணம் கொண்டவர்கள்
- ரகசியம் தங்காது
- சமயோசிதமாய் பேசுவதில் வல்லவர்
- இளம் வயதிலேயே பொருளாதாரம் ஏற்படும்
- அனைவரிடமும் நட்போடு பழகக் கூடியவர்கள்
- அவசர புத்தி உடையவர்கள்
2-ம் பாவம்
- கஷ்டங்களை எளிதாக சமாளிப்பார்கள் பிரச்சனைகள் ஏற்படும்
- காமத்தில் ஈடுபாடு உண்டு
- மது பிரியர்கள்
- சுகவாசி
- அறுசுவை உணவு விரும்பி
- சுகமான வீடு அமையும்
- கலையை ரசிக்க கூடியவர்கள்
- எந்த வேலையையும் ஈடுபாட்டோடு செய்யக்கூடியவர்கள்
- டீ, காபி, உயர்ரக மதுபானம் போன்றவற்றில் பிரியம்
- பிராண்டட் ஷர்ட் அணிய விருப்பம்
- காலதாமதமான திருமணம்
- வாழ்வின் பிற்பகுதியில் நல்ல முன்னேற்றம் உண்டு
- நகைச்சுவையாக பேசக்கூடியவர்கள்
3-ம் பாவம்
- சகோதர சகோதரிகள் உண்டு
- சிறுவயதிலேயே குடும்ப பொறுப்பை ஏற்க நேரிடும்
- தைரியசாலிகள்
- தகவல் தொடர்பு துறை சிறந்த முன்னேற்றம் தரும்
- மாமனார் ஆதாயம் உண்டு
- குடும்பத்தில் தற்கொலை செய்தவர்கள் உண்டு
- விளையாட்டு யோகா தியானம் போன்றவற்றில் ஈடுபாடு உண்டு
- பொது சேவையில் ஈடுபாடு உண்டு
- சுய முயற்சியால் முன்னேற்றம் காண்பவர்கள்
4-ம் பாவம்
- தாய் மீது அதிக பாசம் உடையவர்கள்
- நீண்ட ஆயுள் உண்டு
- தாயாருக்கு அடிக்கடி உடல் நிலை பாதிப்பு ஏற்படும்
- கல்வியில் தடை உண்டு
- வாகனம் வீடு அமைவதில் தாமதம்
- விவசாயத்தில் முன்னேற்றம் உண்டு
- பணப் பிரச்சனை இருக்காது
5-ம் பாவம்
- புத்திர பாக்கியம் உண்டு
- பூர்வீக சொத்து உண்டு அவற்றால் ஆதாயமும் இல்லை
- பூர்வீக சொத்தில் வம்பு வழக்கு ஏற்படும்
- இரண்டு குலதெய்வம் உண்டு
- காதல் ஏற்படும்
- தாய் மாமனால் அனுகூலம் இல்லை
- திட்டம் தீட்டுவதில் வல்லவர்கள்
- பேராசை உண்டு
- குழந்தைகளால் கடன் உண்டு
6-ம் பாவம்
- மனைவிக்கு கண்பார்வை குறைபாடு உண்டு
- வயிறு சார்ந்த பிரச்சனை உண்டு
- நீர் சார்ந்த உணவுகளில் விருப்பம்
- காய்கறிகள் சாப்பிட விருப்பம்
- ஜாதகருக்கு வேலை செய்யும் இடத்தில் பிரச்சனை ஏற்படும்
- பெண்களால் பிரச்சினை உண்டு
- சர்க்கரை வியாதி உண்டு
7-ம் பாவம்
- மனைவியுடன் கருத்து வேறுபாடு உண்டு
- இருமல் சளி பிரச்சனை உண்டு
- மனைவியால் விரையம் உண்டு
- திருமண வாழ்வில் பிரச்சினை ஏற்படும்
- வாழ்க்கைத்துணை முன்கோபம் உடையவராக இருப்பர்
- மனைவி வழியில் சொத்து பிரச்சினை உண்டு
- மனைவி வேலைக்கு செல்லக்கூடிய நபராக இருப்பார்
8-ம் பாவம்
- ஜாதகருக்கு சொத்து உண்டு
- திடீர் அதிஷ்டம் ஏற்படும்
- வாழ்வில் ஏமாற்றம் உண்டு
- குழந்தைகள் வெளியூர், வெளி மாநிலங்களில் படிக்கும் யோகம் உண்டு
- பெட்ரோல் பங்க், செங்கல், மணல், ஜல்லி போன்ற தொழில்கள் முன்னேற்றத்தை தரும்
- தந்தைக்கு ஆயுள் கண்டம்
- எலும்பு சார்ந்த பாதிப்பு ஏற்படும்
9-ம் பாவம்
- தந்தை மீது பாசம் அதிகம்
- தந்தைக்கு சொத்து அமைவதில் தாமதம்
- ஏற்படும் உயர் பதவியில் இருப்பார்
- தந்தைக்கு நீண்டகால நோய் உண்டு
- ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டு
- ஜீவசமாதி வழிபாடு சிறப்பைத்தரும்
10-ம் பாவம்
- நிதி சார்ந்த துறைகளால் ஆதாயம் உண்டு
- வெளிநாட்டு வருமானம் உண்டு
- மாமியாரால் ஆதாயம் உண்டு
- திட்டம் தீட்டுவதில் வெற்றிக்கான கூடியவர்கள்
- கல்வித்துறையில் முன்னேற்றம் உண்டு
- பல தொழில்களை செய்ய கூடிய நபர்கள்
- மார்க்கெட்டிங், கமிஷன், அடகு கடை, மருந்து கடை, மளிகை கடை ஆதாயம் உண்டு
- பேராசிரியர், சட்ட வல்லுநர், நீதிபதி போன்ற பதவிகளை வகிக்கக்கூடிய நபர்கள்
11-ம் பாவம்
- மூத்த சகோதரர்களால் கருத்து வேறுபாடு ஏற்படும்,அவர்களுக்கு கண்டங்கள் உண்டு
- போலீஸ் துறை சார்ந்த நண்பர்கள் உண்டு
- நண்பர்களால் முன்னேற்றம் உண்டு
- உறவுகளால் அதிகம் பிரச்சினை ஏற்படும்
- சொத்து மீது அதிக பற்று இருக்கும், அதனால் பிரச்சினைகள் ஏற்படும்
12-ம் பாவம்
- மனைவியால் விரயம் ஏற்படும்
- பெண் குழந்தைகளால் செலவு ஏற்படும்
- வெளிநாடு, வெளிநாட்டில் படிக்கும் குழந்தைகளுக்கு மருத்துவ செலவு ஏற்படும்
- நல்ல தூக்கம் ஏற்படும்
- ஆடு மாடு வளர்த்த குடும்பம்
- ஆடம்பரத்தில் விருப்பம் உடையவர்கள்
- கண் பாதிப்பு ஏற்படும்
- பியூட்டி பார்லர் சென்று வர விருப்பமுடையவர்கள்
ரிஷபத்தில் ஒன்பது கோள்கள் நிற்பதால் ஏற்படும் பலன்கள்
கேது நிற்பதால் ஏற்படும் பலன்கள்
- கண் பார்வை குறைபாடு ஏற்படும்
- ஆன்மீக நாட்டம் உண்டு
- வாக்கு பலிதம் உண்டு
- பேசுவதில் தடை ஏற்படும்
- பொருளாதார தடை ஏற்படும்
சுக்கிரன் நிற்பதால் ஏற்படும் பலன்கள்
- இது ஒரு சிறப்பான அமைப்பாகும் சுக்கிரன் ஆட்சி பெறுவதால் அனைத்து செல்வங்களையும்
- பெறக்கூடிய அமைப்பு ஏற்படும்
- வாழ்க்கையில் செல்வத்திற்கு குறை இருக்காது
- பேச்சால் அனைவரையும் கவரக்கூடிய நபராக இருப்பார்
- சுயமாக முன்னேறக்கூடியவர்கள்
- மனைவியால் முன்னேற்றம்
- பெண்களால் ஆதாயம் உண்டு
சூரியன் நிற்பதால் ஏற்படும் பலன்கள்
- சூரியன் ரிஷபத்தில் இருப்பது அவ்வளவு சிறப்பான அமைப்பு அல்ல
- ஜாதகரின் கண்பார்வை பாதிக்கப்படும்
- மேலும் தந்தையால் குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு
- பொறுமைசாலிகள் இசைப் பிரியர்கள்
- போஜனப் பிரியர்கள்
- சுகவாசி
- தந்தை சுகவாசி
- ஆடம்பரப் பிரியர்
- அறுசுவை பெரியர்
- இருதார அமைப்பு உடையவர்
- வசீகரமான தோற்றம் உடையவர்
சந்திரன் நிற்பதால் ஏற்படும் பலன்
- இது ஒரு சிறப்பான அமைப்பாகும் இது சந்திரனின் உச்ச வீடாகும்
- ஜாதகருக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்படாது
- மற்றவர்கள் மீது அதிக பாசம் செலுத்தக்கூடிய நபராக இருப்பார்
- கருணை உள்ளம் கொண்டவர்கள்
- நிர்வாக திறமை உள்ளவர்கள்
- நல்ல உடல்வாகு கொண்டவர்கள்
- சுகவாசி தீர்க்கமான முடிவை முடியாதவர்கள்
- மக்களிடம் செல்வாக்கு உள்ளவர்கள்
- குடும்பம் மீது அதிக பற்று உள்ளவர்கள்
- பொறுமைசாலிகள்
- தாய் சுகவாசி
- வசீகரமான தோற்றம் உடையவர்
- சமையல் கலையில் கை தேர்ந்தவர்
- பெரிய குடும்பத்தை சேர்ந்தவர்
செவ்வாய் நிற்பதால் ஏற்படும் பலன்கள்
- சிறப்பான அமைப்பு அல்ல
- இதனால் ஜாதகரின் சகோதரர்களுக்கு பிரச்சனைகளை உண்டாக்கும், அவர்களோடு கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தும்
- முரட்டு சுபாவம் உடையவர்கள்
- பிடிவாதமாக இருப்பார்கள்
- துணிச்சல் மிக்கவர்கள்
- அரசியலில் வெற்றியைத் தரும்
- முகத்தில் வெட்டு காயம்/தழும்பு ஏற்படும்
ராகு நிற்பதால் ஏற்படும் பலன்கள்
- இங்கு ராகு நிற்பது நன்மையான பலன்களையே தரும்
- வாக்கு பலிதம் உண்டு
- போஜனப் பிரியர்கள்
- பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தைத் தரும்
- பார்வையில் பாதிப்பு ஏற்படும்
குரு நிற்பதால் ஏற்படும் பலன்கள்
- ஜாதகருக்கு விரையத்தை கொடுக்கக் கூடிய அமைப்பாகும்
- ஆன்மீக பணிகளுக்காக விரையம் ஏற்படலாம்
- வாக்கு பலிதம் உள்ளவர்கள்
- சுகவாசியாக இருப்பார்கள்
- நேர்மையானவர்கள்
- தாராள குணம் உடையவர்கள்
- திறமைசாலிகள்
- பிறருக்காக வாழக்கூடியவர்கள்
- அன்பானவர்கள்
- தெய்வ நம்பிக்கை உள்ளவர்கள்
ரிஷபத்தில் சனி நிற்பதால் ஏற்படும் பலன்கள்
- இது சனிக்கு நட்பு வீடு , சனி இருப்பது நன்மையான பலன்களையே தரும்
- ஜாதகருக்கு தொழில் எளிதாக அமையும் அதுவும் நல்ல வருமானமுள்ள தொழிலாக அமையும்
- பல வெற்றிகளை அடைய கூடிய நபர்கள்
- எப்போதும் மனக்கவலை கொள்பவர்கள்
- தனிமை விரும்பிகள்
- மாமிச பிரியர்கள்
புதன் நிற்பதால் ஏற்படும் பலன்கள்
- இது ஒரு நல்ல அமைப்பாகும் நல்ல உடல் வாகும் புத்திக்கூர்மையும் உள்ளவர்கள்
- பெரிய பதவி வகிக்கக் கூடிய நபர்கள்
- விடாமுயற்சி உள்ளவர்கள்
- பொருளாதார முன்னேற்றம் உடையவர்கள்
- எழுதுவதிலும் படிப்பதிலும் விருப்பமுடையவர்கள்
- கலைகளில் விருப்பமுள்ளவர்கள்
- வாக்கு சாதுர்யம் உள்ளவர்கள்
மேலும் படிக்க : மேஷ ராசி காரகத்துவங்கள் மற்றும் பாவ பலன்கள்