சூரியன்
நவக்கிரகங்களில் முதன்மையான கிரகமாக கருதப்படுபவர் சூரிய பகவானாவார். நம்முடைய சூரிய குடும்பத்தில் அனைத்து கோள்களும் சூரியனை மையமாகக் கொண்டு சுற்றி வருகின்றன. உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாக இருப்பது சூரிய பகவான், எனவே இவர் ஆத்ம காரகன் என அழைக்கப்படுகிறார். ஜோதிடத்தில் முதன்மையாக உள்ள அனைத்து விஷயங்களுக்கும் சூரியனே காரக கிரகம். சூரியன் பூமிக்கு வெளிச்சத்தை தருகிறார் எனவே ஒருவர் பேர், புகழ் போன்றவற்றை அடைய சூரியனின் அருள் அவசியமாகிறது. சூரியன் ஜாதகத்தில் சுபத்தன்மை அடைவதால் ஜாதகருக்கு புகழ், கௌரவம், ஆன்மபலம், அரசியலில் தலைமை பதவி அடைதல் போன்ற நன்மைகளை அடைவர்.
சூரியன் அரச கிரகம் ஆவார். எனவே ஒருவர் அரசியலில் காலூன்ற சூரியனின் சம்பந்தம் தேவை. அதேபோல் அரசு அரசு சார்ந்த பணிகளுக்கும், சூரிய சம்பந்தம் அவசியமாகிறது. சூரியன் ஒரு ஆண் கிரகம், ஒருவருக்கு நிலையான வருமானத்திற்கும் வழிவகை செய்யக்கூடியவர் சூரியபகவான், உடல் பாகங்களில் வலது கண், முதுகெலும்பு, இருதயம் போன்ற முக்கிய உடல் பாகங்களுக்கு காரக கிரகமாக வருகிறார். இவை அனைத்தும் மனிதனுக்கு இன்றியமையாத பாகங்கள், உடலுக்கு ஆதாரமாக விளங்கக் கூடியவை.
தெய்வங்களில் சிவபெருமானை அதிதேவதையாக கொண்டவர். எனவே சிவபெருமானை வழிபடுவதால் சூரியன் அருளை பரிபூரணமாக பெற இயலும். ஜாதகருக்கு தன்னம்பிக்கை சுயமரியாதை நிர்வாகத்திறமை, அன்பு, இரக்கம், கருணை, தாராள மனப்பான்மை போன்ற குணங்களை பெற சூரியனினின் தயவு தேவை . உயரத்தில் சமமான உயரத்தை உடையவர், சத்துவ குணம் கொண்டவர். உலோகத்தில் தாமிரத்தை குறிக்க கூடியவர், தானியத்தில் கோதுமையை குறிக்க கூடியவர், மலர்களில் செந்தாமரையை குறிக்கும், சுவையில் கார சுவையை குறிக்கும், ரத்தினத்தில் மாணிக்கத்தை குறிக்க கூடியவர். சூரியனுக்குரிய நிறம் சிவப்பு நிறமாகும். செடிகளில் எருக்கன் செடியை குறிக்கும். விலங்கு வகைகளில் பெண் ஆட்டை குறிக்கும், சூரியனின் வாகனம் மயில் மற்றும் தேர். பறவைகளின் மயிலை குறிக்கும். சிவப்பு நிறத்தை குறிக்கும். சூரியனுக்குரிய பரிகார ஸ்தலம் ஆடுதுறையில் உள்ள சூரியனார் கோவில். வழிபட்டு பொருள்களில் சந்தனத்தை குறிக்கும்.
பஞ்சபூத தத்துவத்தில் நெருப்புத் தத்துவத்தை சூரியன் குறிக்கும். திசைகளில் கிழக்கு திசையை குறிக்கும். உறவுகளில் தந்தை மற்றும் மூத்த மகனை குறிக்க கூடியவர். சூரியனுக்குரிய ராசி சிம்ம ராசி. ஒரு ராசியை கடக்க ஒரு மாதம் எடுத்துக்கொள்வார். சித்திரையில் மேஷ ராசியில் தொடங்கி பங்குனி மாதத்தில் மீன ராசியில் முடியும். வாஸ்துவில் வீட்டில் வலது ஜன்னலை குறிக்கும். நட்சத்திரங்களில் கார்த்திகை, உத்திரம், உத்திராடம் போன்ற நட்சத்திரங்கள் குறிக்கும்.
அமைப்பு
சூரியன் இயல்பின் நெருப்பு பந்து வடிவமுடையது. இதனுடைய விட்டம் சுமார் 8 லட்சத்து 60 ஆயிரம் மைல்கள் ஆகும். பூமியை விட சுமார் 150 மடங்கு பெரியதாகும். இது பூமியிலிருந்து 9.3 கோடி மைல்கள் தூரத்தில் அமைந்துள்ளது. சூரியன் ஹைட்ரஜன் ஹீலியம் போன்ற வாயுக்களால் அதிகமாக நிரம்பியுள்ளது. இதில் கால்சியம் என்ற தாது பொருள் அடங்கியுள்ளது. சூரியன் தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 26 நாட்களை எடுத்துக் கொள்கிறது. ஜோதிடத்தில் சூரியன் எந்த ராசியில் உள்ளதோ அதனை அடிப்படையாக வைத்து தமிழ் மாதங்கள் குறிப்பிடப்படுகின்றன.
சூரியன் பலம் அதிகரிக்க வழிமுறைகள் / சூரியனுக்கான பரிகாரங்கள்
ஜாதகத்தில் சூரியன் பலம் குறைவாக உள்ளவர்கள் சூரியன் காரகங்கள் சார்ந்த கோயில்களுக்கு சென்று வரலாம் அல்லது சூரியன் காரக தானியங்களை எடுத்துக்கொள்வதால் உடலில் சூரியக்கதிர்கள் அதிகமாகும். அதனால் ஜாதகருக்கு ஏற்படும் துன்பங்களிலிருந்து விடுபட இயலும். உதாரணத்திற்கு ஜாதகத்தில் சூரியன் பலம் குறைவாக உள்ளவர்கள் கோதுமை சார்ந்த உணவுப் பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்ளலாம், குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் எடுத்துக் கொள்ளலாம். அதேபோல் ஞாயிற்றுக்கிழமை சிவாலயம் சென்று வழிபடுவதால் சூரிய பலம் ஜாதகருக்கு அதிகரிக்கும். அதன் மூலம் தடைகள், தாமதம் போன்றவை நீங்கும், சூரியன் அருளை பெற இயலும். மேலும் அதிகாலையில் சூரியோதயத்திற்கு முன் சூரிய நமஸ்காரத்தை செய்வதன் மூலமும் சூரிய கதிர் வீச்சை நாம் பெற இயலும்.
சூரியனின் காரகத்துவங்கள்
முக்கிய காரகங்கள்
- ஆன்மா
- தந்தை
உறவுகள்
- தந்தை
- மூத்தவர்
- மாமனார்
உணவுப்பொருட்கள்
- கோதுமை
- காரட்
- வெந்தயம்
- தேன்
- மிளகு
வேறு பெயர்கள்
- ரவி, ஆதித்தன், பரிதி, பானு, தினகரன், கதிரவன், மார்த்தாண்டன்
பொதுவான காரகங்கள்
- சிவன் (அதிதேவதை )
- தலைவர்(சமுதாயத் தலைவர்)
- மாடி வீடு
- வலது ஜன்னல்
- சாப்பிடும் இடம் (Dining Hall)
- அரசாங்கம்
- அரசியல்வாதி
- ஆளுமை
- அதிகாரம்
- கம்பீரம்
- கௌரவம்
- சுயமுயற்சி
- வளர்ச்சி
- ஆக்கிரமித்தல்
- ஆண் வாரிசு
- கோவில்
- மருந்து
- அரசன்
- சுதந்திரம்
- நிர்வாகம்
- மடிப்பு கலையாத ஆடை
- காடுகள் சார்ந்த பகுதிகள்
- சூரிய சக்தி
- அரசாங்கப் பணம்
- பாரம்பரியம்
- நேர்மை
- கோட்டை
- தீபம், அக்னி
- முட்செடிகள்
- கண்ணாடி
- ராஜ வெகுமதி
- ஆபரணம்
- கிழக்குதிசை
- பெரிய பாறை
- ஆன்மிகத் துறை
- கல்யாண மண்டபம்
- விடுமுறை
- நினைவுச் சின்னம்
- சுங்க இலாகா
தொழில்கள்
- அரசு வேலைகள்
- அரசாங்கம் சம்பத்தப்பட்ட தொழில்கள்
- மருத்துவர்
- நீதித்துறை
- நிர்வாகம் சார்ந்த துறைகள்
- குடும்ப தொழில்
நோய்கள்
- காய்ச்சல்
- தலைவலி
- இருதய நோய்
- முதுகு வலி
- கண் நோய்கள்
- எலும்பு சார்ந்த நோய்கள்
சூரியன் 12 பாவங்களில் நிற்பதால் ஏற்படும் பலன்கள்
லக்னத்தில் சூரியன் நிற்பதால் ஏற்படும் பலன்கள்
- ஜாதகருக்கு பேரும் புகழும் உண்டு
- ஆத்ம பலம் உள்ளவர்
- நல்ல உடல்நலம் உண்டு
- மதிநுட்பம் மிக்கவர் கல்வியில் வல்லவராக இருப்பார்
- பிறந்த பின் குடும்பம் வளர்ச்சி
- கண்களில் பாதிப்பு உண்டாகும்
- அனுபவ அறிவு மிக்கவர்
- ஜாதகர் பிரகாசமான தோற்றமுடையவர்
- முன்கோபி
- கௌரவமான
- வலிமை மிக்கவர்
- அரசாங்க அல்லது அரசியல் தொடர்பு உடையவர்
- பொது நல விரும்பி
- சமூக சேவகர்
- தந்தை மீது பற்றுள்ளவர்
- தந்தை மீது பாசம் அதிகம்
- ஆன்மீகத்தில் ஈடுபாடு மிக்கவர்
- தீப வழிபாடு முன்னேற்றத்தைத் தரும்
- சிவ வழிபாடு ஈடுபாடு உண்டு
2-ம் பாவத்தில் சூரியன் நிற்பதால் ஏற்படும் பலன்கள்
- வருமானம் தற்பெருமை மிக்கவர்
- நிர்வாக திறமை உள்ளவள்
- அரசியல் அரசு சார்ந்த துறைகளில் வருமானம்
- தந்தை மூலம் ஆதாயம் உண்டு
- வாக்கு தவறாதவர்
- தற்பெருமை உள்ளவர்கள்
- கண் பாதிப்புக்கு உள்ளாகும்
- வீட்டு அருகில் கோவில் உண்டு
- நேர்மையானவர்கள்
- இயற்கை மருத்துவத்தில் விருப்பம் உண்டு
- வீட்டு அருகில் கோவில் உண்டு
- கர்வம் மிக்கவர்கள்
- முகத்தில் உஷ்ண சம்பந்தமான நோய்கள் உண்டு
3-ம் பாவத்தில் சூரியன் நிற்பதால் ஏற்படும் பலன்கள்
- சகோதரிகளால் ஆதாயம் இல்லை
- தைரியமானவர் புகழ் செல்வம் உள்ளவர்
- நீண்ட ஆயுள் உண்டு
- நற்பண்பு மிக்கவர் செல்வாக்கு உள்ளவர்
- மதிநுட்பம் வலிமை உடையவர்
- பொறுமைசாலி நண்பர்களுக்கு உதவக்கூடியவர்
4-ம் பாவத்தில் சூரியன் நிற்பதால் ஏற்படும் பலன்கள்
- கல்வியால் உயர்பதவி அடையக் கூடியவர்
- மதிப்பு மரியாதை புகழ் பெற்று வாழக்கூடியவர்கள்
- சொத்து உண்டு
- தாயார் ஆதாயம் உண்டு
- தாய் மீது பற்று அதிகம்
- மாடி வீடு உண்டு
- அரசியல் அல்லது அரசு சார்ந்த தொடர்பால் ஆதாயம் உண்டு
5-ம் பாவத்தில் சூரியன் நிற்பதால் ஏற்படும் பலன்கள்
- ஆண் வாரிசு உண்டு
- குழந்தைகள் பிறந்த பின் வளர்ச்சி
- குழந்தைகள் பேரும் புகழும் அடைய கூடியவர்கள்
- இயற்கை வழிபாடு முன்னேற்றத்தைத் தரும்
- விவசாயத்தில் ஈடுபாடு உண்டு
- புத்திசாலிகள்
- அறிவால் பிறரை வசப்படுத்த கூடியவர்கள்
- வயிறு யோகமுண்டு
- நீண்ட ஆயுள் உண்டு
- முன்னோர்கள் ஆசிர்வாதம் உண்டு
6-ம் பாவத்தில் சூரியன் நிற்பதால் இருக்கும் பலன்கள்
- எதிரிகளை வெல்ல கூடியவர்
- ஆன்மிகத்தில் ஈடுபாடு உள்ளவர்கள்
- மன நிம்மதி அற்றவர்
- ஆரோக்கியமான உடலமைப்பு மிக்கவர்
- அதிக எதிரிகள் உண்டு. ஆனால் எதிரிகள் இவரை வெல்வது அரிது
- உயர் பதவிகளை பெற கூடியவர்
- வலிமையானவர்
- பேரும் புகழும் அடையக் கூடியவர்
- உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள்
- தாய்வழி உறவால் பிரச்சனைகள் உண்டு
- தாழ்ந்தவர்கள் உடன் நட்பு கொள்ளுதல் பிரச்சினைகளை உண்டுபண்ணும்
- விரக்தி மனப்பான்மை உள்ளவர்
- அரசியல் குற்றச்சாட்டுக்கு ஆளாக கூடியவர்
- தந்தைக்கு ஆயுள் கண்டம் உண்டு
7-ம் பாவத்தில் சூரியன் நிற்பதால் இருக்கும் பலன்கள்
- களத்திரம் பெரிய குடும்பத்தில் பிறந்தவர்
- தாமத திருமணம்
- அசைவப் பிரியர்
- நல்ல பேச்சாளர்
- நகைச்சுவை உணர்வு மிக்கவர்
- சிவ வழிபாட்டில் விருப்பம் உண்டு
- அரசாங்க அரசியல் ஈடுபாடு உண்டு
- பெண்களால் அவமானம் உண்டு
- கண் பாதிப்பு உண்டு
- மனைவி மீது ஆதிக்கம் செலுத்த கூடியவர்
- வெளிநாட்டு யோகம் உண்டு மண வாழ்க்கை பாதிப்பு உண்டு வாடிக்கையாளர்கள்
- முன்னேற்றம் உண்டு
8-ம் பாவத்தில் சூரியன் நிற்பதால் இருக்கும் பலன்கள்
- தந்தைக்கு நீண்ட ஆயுள் உண்டு
- புத்திர தோஷம் உண்டு
- கண் நோய் உண்டு
- அரசியலில் முன்னேற்றம்
- உண்டு நிரந்தர வருமானம் உண்டு
- சுற்றத்தார் இடம் இருந்து பிரிந்து வாழக்கூடிய சூழ்நிலை உண்டாகும்
9-ம் பாவத்தில் சூரியன் நிற்பதால் இருக்கும் பலன்கள்
- ஆன்மிகத்தில் நாட்டம் உண்டு சூரிய வழிபாடு செய்யக்கூடியவர்கள்
- அதிர்ஷ்டம் உள்ளவர்கள்
- மத ஈடுபாடு மிக்கவர்கள்
- தியானம் யோகா போன்றவற்றில் ஈடுபாடு உள்ளவர்கள்
- தந்தைக்கு நீண்ட ஆயுள் உண்டு
- செல்வச் சீமானாக இருக்கக்கூடியவர்கள்
- குழந்தை பாக்கியம் உண்டு
- செல்வ வளம் மிக்கவர்கள்
- குரு ஆசிர்வாதம் உண்டு
10-ம் பாவத்தில் சூரியன் நிற்பதால் இருக்கும் பலன்கள்
- கல்வி முன்னேற்றம் உண்டு
- தைரியசாலி
- நல்ல புகழை அடைய கூடியவர்கள்
- நல்ல குணங்களை உடையவர்கள்
- கோயில் கட்டுதல் மற்றும் சுப காரியங்களில் செய்வதில் விருப்பம் உடையவர்கள்
- நிர்வாக திறமை உள்ளவர்கள்
- வீடு வாகன வசதி உள்ளவர்கள்
- மேன்மையான பதவிகளை அடைய கூடியவர்கள்
- உயர்ந்த குணங்களை உடையவர்கள்
11-ம் பாவத்தில் சூரியன் நிற்பதால் இருக்கும் பலன்கள்
- வீடு வாகன யோகம் உண்டு
- விவசாயத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு
- தொட்டதெல்லாம் துலங்கும்
- நினைத்தது அனைத்தும் ஈடேறும்
- அடிக்கடி காய்ச்சலால் அவதிப்படுவார்கள்
- ஊழியர்களிடம் நல்ல உறவு கொண்டிருப்பார்கள்
- குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு ஏற்படும்
- மிகவும் அதிர்ஷ்ட சாலியாக இருப்பார்கள்
- அரசால் ஆதாயம் உண்டு
- அனைத்து தடைகளையும் மீறி முன்னேற்றம் காணக் கூடியவர்கள்
- எதிரிகளை வெல்ல கூடியவர்கள்
- வாக்கு பலிதம் உள்ளவர்கள்
12-ம் பாவத்தில் சூரியன் நிற்பதால் இருக்கும் பலன்கள்
- வெளிநாட்டு யோகம் உண்டு
- பொருள் இழப்பு ஏற்படும்
- கடவுள் குருமார்கள் ஆசிர்வாதம் உண்டு
- சயன சுகம் பாதிக்கப்படும்
- குடல் சார்ந்த வியாதிகள் உண்டு
- வெளிநாடு சென்று பொருளீட்ட கூடிய நபராக இருப்பார்
- மெலிந்த தேகம் உடையவர்கள்
- புத்திர தோஷம் உண்டு
- தந்தையிடம் சுமுக உறவு இல்லை
- பயணம் சார்ந்த தொழில்கள் ஏற்படும்
- தோல் சார்ந்த வியாதிகள் ஏற்படும்
- அரசாங்க தண்டம் செலுத்த வேண்டிய சூழ்நிலை உண்டாகும்
மேலும் படிக்க : மீன ராசி