விருச்சிக ராசி காரகத்துவங்கள் மற்றும் பாவ பலன்கள்

Table of Contents

விருச்சிக ராசி

  • விருச்சிக ராசி கால புருஷனுக்கு எட்டாவது ராசியாக வரக்கூடியது. ஒரு நீர் ராசி. மோட்ஷ தத்துவ ராசி. இதன் பாகை 210 முதல் 240 வரை உள்ளது. இதன் அதிபதி செவ்வாய் பகவான். இதில் சந்திரன் நீசம் அடைகிறார். தேள் வடிவத்தை உடைய ராசி. வடக்கு திசையை குறிக்கும். உடல் பாகத்தில் மர்ம உறுப்புகளை குறிக்கும். ஸ்திர ராசி. இது ஒரு பெண் ராசி.
  • இந்த ராசிக்காரர்கள் கடின உழைப்பாளிகள் எடுத்த வேலையை முடிக்காமல் விடமாட்டார்கள். வீரம் உடையவர்கள். புத்திக்கூர்மையும் ,பேச்சுத் திறமையும் உள்ளவர்கள். தாராள மனப்பான்மை உடையவர்கள். பிறருக்கு உதவும் எண்ணம் உள்ளவர்கள், சண்டை சச்சரவுகளில் ஈடுபட கூடியவர்கள். ரகசியத்தை காப்பாற்றுபவர்கள். தனக்கென்று கொள்கையோடு வாழ்பவர்கள். முன்யோசனை இல்லாதவர்கள் புத்திசாலிகள். விசாகம் 4-ம் பாதமும், அனுஷம் 1,2,3,4 பாதங்களும், கேட்டை 1,2,3,4 பாதங்களும் இந்த ராசியில் உள்ள நட்சத்திரங்கள் ஆகும்.
  • சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு போன்ற நிறங்களில் நன்மை தரும். சனி, ஞாயிறு, செவ்வாய், வியாழன் போன்ற கிழமைகள் நன்மை தரும். கார்த்திகை, தை, மாசி, பங்குனி, வைகாசி, ஆவணி போன்ற தமிழ் மாதங்கள் நன்மையை தரும்.

பொதுவான காரகங்கள்

  • முருக கடவுள்
  • நீர் ராசி, ஊமை ராசி
  • தேங்க கூடிய நீர்
  • அமானுஷ்ய அறிவு
  • கழிவு பொருட்கள்
  • சேனாதிபதி
  • போர்புரிதல்
  • சந்நியாசம்
  • கோபம், அவமானம்
  • ஆயுள்
  • கடிகாரம்
  • தொழிலாளிகள்
  • சுரங்கம், போர்வெல்
  • கட்டுமான வேலை
  • அரசு ஒப்பந்தம்
  • மருத்துவம் (அறுவை சிகிச்சை)
  • ஆயுதங்கள்
  • சட்டத்திற்கு விரோதமான செயல்கள்
  • ஏமாற்றுதல், சதி செய்தல், துரோகம் செய்தல்
  • ஏவல் , பில்லி , சூன்யம்
  • விஷ ஜந்துக்கள் (பாம்பு, தேள் ,பூரான் )
  • மர்ம உறுப்புகள், ஆசன வாய்
உணவுப்பொருட்கள்
  • கரும்பு
  • நுங்கு
  • பஞ்சாமிர்தம்
  • பாமாயில்
இடங்கள்
  • கழிவறை
  • குப்பை கிடங்கு
  • பிணவறை
  • சுரங்கம் உள்ள இடங்கள்
  • விஷ ஜந்துக்கள் உள்ள இடங்கள்
  • பள்ளத்தாக்குகள்
தொழில்கள்
  • ஜோதிடம்
  • சுரங்க தொழில்
  • பெட்ரோல் பங்க்
  • டெலி கம்யூனிகேஷன் துறை
  • ரகசிய துறை
  • பாதுகாப்பு துறை
  • மருத்துவம்
  • விஞ்ஞானி
நோய்கள்
  • மல சிக்கல்
  • மாதவிடாய் கோளாறுகள்
  • பால்வினை நோய்கள்

விருச்சிக ராசியின் பொதுவான குணங்கள்

தோற்றம்
  • மாநிறமான தோற்றம் உடையவர்கள்
  • பெரிய கண்கள்
  • உயரமானவர்கள்
  • நல்ல உடல்வாகு பெற்றவர்கள்
  • அகலமான தோள்கள்
  • வலுவான கால்கள்
  • இவரின் தோற்றம் அனைவரையும் கவரக் கூடியதாக இருக்கும்
சிறப்பான குணங்கள்
  • பயம் இல்லாதவர்கள்
  • பலம் வாய்ந்தவர்கள்
  • உறுதியான முடிவை கொண்டவர்கள்
  • சிறந்த கற்பனை வாதி
  • தாராள மனப்பான்மை உடையவர்கள்
  • நம்பிக்கைக்கு உரியவர்கள்
மாற்றிக்கொள்ள வேண்டிய குணங்கள்
  • அவநம்பிக்கையும், சந்தேகமும் உள்ளவர்கள்
  • பிடிவாத குணம்
  • யாருக்கும் வளைந்து கொடுக்காத தன்மை
  • பிறரை கேலி பேசுதல்

பொதுவான பாவ பலன்கள்

1-ம் பாவம் விருச்சிக ராசியாக அமைவதால் ஏற்படும் பலன்கள்

  • அவசரக்காரர்கள்
  • சொந்தங்கள் ஒத்துவராது
  • ஒல்லியான சற்று தடித்த உருண்டையான
  • உடல் தோற்றம் உடையவர்கள்
  • பேச்சு சுருக்கென்று இருக்கும்
  • எதையும் தெரியாதவர் போல் தோற்றமளிப்பார்கள்
  • தந்தை சொத்தில் பிரச்சினை உண்டு
  • நகைச்சுவையாக திரித்து பேசக்கூடியவர்கள்
  • வெளிக்காட்டி கொள்ளாதவர்கள்
  • போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பமுடையவர்கள்
  • சுயநலம் கூச்சம் தயக்கம் உடையவர்கள்
  • பேச்சில் வல்லவர்கள்
  • முன் கோபக்காரர்கள்
  • துப்பறிவாளர்கள்
  • சந்தேக குணமும் வரும்போது வெளிப்படுத்த மாட்டார்கள்
  • நண்பர்கள் தவறான வழியில் செல்லும்போது கடுமையாக எதிர்ப்பவர்கள்
  • இளமையில் வறுமையை சந்திப்பவர்கள்
  • எந்த வேலையை எளிதாக செய்யக்கூடியவர்கள்
  • அப்பா பிள்ளை
  • அப்பா புகழ் பாடுவார்
  • பொறாமை குணம் உடையவர்
  • தன் குற்றத்தை மறைத்து பிறர் குற்றத்தை அம்பலப்படுத்துவது
  • விபத்து கண்டம் உண்டு
  • மற்றவருக்கு ஆதாயம் உண்டு
  • மனைவியால் விரையம் உண்டு
  • இடமாற்றம் உண்டு

2-ம் பாவம் விருச்சிக ராசியாக அமைவதால் ஏற்படும் பலன்கள்

  • அறிவு அதிகமானவர்கள்
  • மருத்துவ குணம் உண்டு
  • பக்திமான்கள்
  • நல்ல குடும்பம் மனைவி அமையும்
  • தேவைக்கேற்ப பணம் கிடைக்கும் பற்றாக்குறை இருக்காது
  • வீண் செலவு செய்ய மாட்டார்கள்
  • வருமானத்தை பெருக்குவதில் ஆர்வமுடையவர்கள்
  • குடும்ப தொழிலை விட்டு வித்தியாசமான வேலையை செய்யக் கூடியவர்கள்
  • பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்
  • பங்குச்சந்தையில் ஆர்வமுண்டு
  • மியூச்சுவல் ஃபண்ட், போஸ்ட் ஆபீஸ் போன்ற பாத்திரங்களில் டெபாசிட் முதலீடு செய்வார்

3-ம் பாவம் விருச்சிக ராசியாக அமைவதால் ஏற்படும் பலன்கள்

  • சகோதர சகோதரிகள் உண்டு
  • ஒற்றுமை இருக்காது
  • இவருடைய செயல்கள் அவர்களுக்கு பிடிக்காது
  • சகோதரர்கள் புகழ் பெறக்கூடியவர்கள்
  • மாமனாரிடம் கருத்து வேறுபாடு
  • சொத்து கிடைக்கும்
  • அஞ்சல் வழிக்கல்வி உண்டு
  • இரண்டு வாகனம் உண்டு
  • அடிக்கடி இடமாற்றம் இருந்துகொண்டே இருக்கும்

4-ம் பாவம் விருச்சிக ராசியாக அமைவதால் ஏற்படும் பலன்கள்

  • சொத்து இடம் மாறும்
  • சொத்து அமைவதில் தாமதம் உண்டு
  • அம்மா குடும்பத் தலைவராக இருப்பார்
  • அம்மாவின் ஆதரவு குறைவு
  • சுயமாக முன்னேற கூடியவர்
  • உறவினர்கள் ஆதரவு குறைவு
  • சொந்த வீடு அமைந்தால் பழைய வீடாக இருக்கும்
  • பிற்காலத்தில் வசதியான வீடு அமையும்
  • விவசாயம் உண்டு
  • கல்வியல் சிறப்பு உண்டு

5-ம் பாவம் விருச்சிக ராசியாக அமைவதால் ஏற்படும் பலன்கள்

  • அதிர்ஷ்டம் உடையவர்கள்
  • தெய்வ கடாட்சம், குருவருள் நிறைந்த காணக் கூடியவர்கள்
  • திருமணம் அமையும்
  • கவிதை, கட்டுரை, பாட்டு கற்பனை போன்ற திறமைகளை உடையவர்
  • பரிசு பெறும் யோகமுண்டு
  • உயர்கல்வி உண்டு
  • மருத்துவத் துறையில் சிறந்து விளங்க கூடியவர்கள்
  • உயர் கல்வி தடை உண்டு
  • மருத்துவம், ஜோதிடம், ஆசிரியர் போன்ற பணிகளால் ஆதாயம் உண்டு
  • புத்திர தோஷம் உண்டு
  • கடைசி காலத்தில் குழந்தைகள் காப்பாற்றுவார்கள்
  • குலதெய்வம் அருகில் இருக்கும்
  • குலதெய்வ வழிபாடு சிறப்பைத்தரும்
  • தாத்தா வழியில் காணாமல் போனவர்கள் உண்டு
  • தாத்தா வழியில் இரு திருமணம் உண்டு
  • குலதெய்வம் இரண்டு கோயில் உள்ள இடமாக இருக்கும்
  • எதையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உடையவர்கள்

6-ம் பாவம் விருச்சிக ராசியாக அமைவதால் ஏற்படும் பலன்கள்

  • உத்தியோகம் உண்டு
  • முதலில் உத்தியோகம் பின்பு தொழில் என்பது இவருக்கு அமையும்
  • கடன் இருந்து கொண்டே இருக்கும்
  • ஒரு முறையேனும் தலைமறைவாக வாழக்கூடிய சூழ்நிலை உண்டாகும்
  • போலீஸ் ஸ்டேஷன் செல்லக்கூடிய சூழ்நிலை உண்டாகும்
  • வழக்கு உண்டு பிரச்சனை உண்டு
  • ரத்தம் சார்ந்த பிரச்சினை நரம்புகட்டி தீப்புண் போன்ற வியாதிகள் வரும்
  • வழக்கில் வெற்றி உண்டு
  • குடும்பத்தில் கடன் பிரச்சினை உண்டு

7-ம் பாவம் விருச்சிக ராசியாக அமைவதால் ஏற்படும் பலன்கள்

  • மனதிற்கு பிடித்த மனைவி
  • மனைவிக்கு கள்வெறி உண்டு அறிவாளிகள்
  • திருமணத்திற்குப் பின் யோகமுண்டு
  • திருமணம் தாமதம் ஆக அமையும் அல்லது திருமணத்தால் பிரச்சினை உண்டு
  • திருமணத்தில் குறை ஏற்படும்
  • துணைவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் இவரே பணிவிடைகளை செய்பவர்கள்
  • மனைவி எல்லாவற்றையும் சமாளிக்கக்கூடிய நபராக இருப்பார்
  • கூட்டுத்தொழில் நன்று

8-ம் பாவம் விருச்சிக ராசியாக அமைவதால் ஏற்படும் பலன்கள்

  • நீண்ட ஆயுள் உண்டு
  • நீரால் கண்டம் உண்டு
  • உயிர் சொத்து உண்டு
  • ஜாதகத்தையே பழக்கம் உண்டு
  • உயிர் சொத்து பிரிப்பதால் பிரச்சினை உண்டு
  • பத்திர பிரச்சினை உண்டு கண்டம் உண்டு

9-ம் பாவம் விருச்சிக ராசியாக அமைவதால் ஏற்படும் பலன்கள்

  • தந்தை ஒரு இடத்தில் நிற்காமல் உழைக்கக்கூடிய வரும்
  • தீய பழக்கம் உண்டு
  • ஆனால் கெட்ட பெயர் உண்டு
  • தந்தையின் ஆதரவு உண்டு
  • ஆனால் பெரிய பயன் எதுவும் இருக்காது
  • தந்தை வழியில் மன மன பாதிப்புக்கு உள்ளானவர்கள் உண்டு
  • தீர்த்தயாத்திரை செல்லக்கூடிய வாய்ப்பு உண்டு
  • நவக்கிரக வழிபாடு அதிகம் செய்யக்கூடியவர் அவற்றால் முன்னேற்றம் உண்டு
  • குழந்தைகள் வெளிநாடு செல்லும் யோகம் உண்டு
  • ஜாதகருக்கு வெளிநாட்டு யோகம் உண்டு
  • மந்திர உபதேசம் ஏதாவது ஒன்றினை பெறக்கூடிய யோகமுண்டு
  • தந்தைவழி உறவுகளால் சிறப்பில்லை
  • உபதேசங்களை குரு அல்லாமல் இவர்களே முயற்சி செய்து மந்திரங்களை உச்சரிக்க கூடியவர்கள்
  • சிறு வயதிலேயே தந்தையை இழக்க நேரிடும்
  • தந்தைக்கு ஆயுள் குறைபாடு உண்டு
  • தந்தையால் ஆதாயம் இல்லை

10-ம் பாவம் விருச்சிக ராசியாக அமைவதால் ஏற்படும் பலன்கள்

  • உணவு சார்ந்த தொழில்கள் முன்னேற்றத்தைத் தரும்
  • காண்ட்ராக்ட், மருத்துவம், சுரங்கம், பெட்ரோல், டீசல், காய்கறி(அன்றாடம் அழியும் பொருட்கள்) கடை,
    விவசாயம், மீன், வாகனம் சார்ந்த தொழில்கள், செங்கல் சூலை, மணல் குவாரி சார்ந்ததொழில்கள் அமையும்
  • காவல்துறையில் பணி உண்டு
  • நிரந்தர தொழில் உண்டு

11-ம் பாவம் விருச்சிக ராசியாக அமைவதால் ஏற்படும் பலன்கள்

  • மூத்த சகோதரர்களுடன் சேர்ந்து தொழில் செய்யும் யோகம்
  • பிரச்சனை உண்டு
  • கண்டம் உண்டு, கண்டத்தில் இருந்து தப்பிபார்
  • சித்தப்பா உண்டு
  • திடீர் அதிர்ஷ்டம் உண்டு
  • அவமானம் உண்டு
  • எண்ணங்கள் நிறைவேறும்
  • நண்பர்களால் உதவி உண்டு

12-ம் பாவம் விருச்சிக ராசியாக அமைவதால் ஏற்படும் பலன்கள்

  • கடைசி காலத்திற்கு சேமிப்பு உண்டு
  • அதிக பிரயாணம் செய்யக் கூடியவர்கள், அதனால் லாபம் உண்டு
  • வெளிநாட்டு யோகம் உண்டு
  • மனைவியால் ஆதாயம் உண்டு
  • இரண்டாவது குழந்தைக்கு வெளிநாட்டு யோகம் உண்டு
  • சுகமான தூக்கம் உண்டு

மேலும் படிக்க : துலாம் ராசி

விருச்சிக ராசியில் நவகிரகங்கள் நிற்பதால் ஏற்படும் பலன்கள்

கேது நிற்பதால் ஏற்படும் பலன்கள்

  • மறைபொருள் சார்ந்த அறிவு உண்டு
  • ஜோதிடத்தில் ஈடுபாடு உண்டு
  • பெண்களுக்கு திருமண தடை/தாமதம் உண்டு
  • குழந்தை பிறப்பதில் தாமதம்
  • சுக போகத்தில் நாட்டமின்மை

சுக்கிரன் நிற்பதால் ஏற்படும் பலன்கள்

  • குள்ளமானவர்கள்
  • பருத்த தேகம் உள்ளவர்கள்
  • வாழ்க்கையில் வெற்றியை காணாதவர்கள்
  • கர்வம் பிடித்தவர்கள்
  • வேஷதாரிகள்
  • நியாயத்திற்கு கட்டுப்படாதவர்கள்
  • பிறர் மீது பொறாமை குணம் கொண்டவர்கள்
  • கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும்
  • இனிமையாகப் பேசி தன் காரியத்தைச் சாதித்துக் கொள்வார்கள்
  • சினிமா தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டு

சூரியன் நிற்பதால் ஏற்படும் பலன்கள்

  • கூச்ச சுபாவம் உள்ளவர்கள்
  • தைரியமற்றவர்கள்
  • தனது முடிவுகளை மாற்றிக் கொள்பவர்கள்
  • தீர்க்கமான வழியை பின்பற்றுபவர்கள்
  • எதையும் தாங்கும் சக்தி உள்ளவர்கள்
  • விளையாட்டு உடற்பயிற்சி சிறந்தவர்கள்
  • இளமையோடு காணக் கூடியவர்கள்
  • முன்கோபம் உள்ளவர்கள்
  • மருத்துவத்துறையில் முன்னேற்றம் உண்டு
  • தற்புகழ்ச்சி உள்ளவர்கள்
  • எதையும் தாங்கும் சக்தி உள்ளவர்கள்
  • தாறுமாறாக நடப்பவர்கள்
  • முன்பின் ஆலோசிக்காமல் முடிவை எடுக்கக் கூடியவர்கள்

சந்திரன் நிற்பதால் ஏற்படும் பலன்கள்

  • நல்ல உடற்கட்டும் பருமனான தோற்றத்தை உடையவர்கள்
  • தாயை பிரிந்து வாழக்கூடியவர்கள்
  • வெளிப்படையாகப் பேசக் கூடியவர்கள்
  • பிடிவாத குணம் உடையவர்கள்
  • தீர்க்கமான முடிவை எடுக்க மாட்டார்கள்
  • பிரியமானவர்கள்
  • இவர்கள் திருப்தி அடைவது என்பது சிரமமான காரியம்
  • இவர்கள் பேச்சால் சில சமயம் பிரச்சினைகளை மாற்றிக்கொள்வார்கள்
  • விடாமுயற்சி உள்ளவர்கள்

செவ்வாய் நிற்பதால் ஏற்படும் பலன்கள்

  • அதிகாரிகள்
  • நல்ல ஞாபக சக்தி உள்ளவர்கள்
  • கூர்மையான கண்கள் உள்ளவர்கள்
  • தெய்வ நம்பிக்கை உள்ளவர்கள்
  • பிறர் காரியங்களில் தலையிட கூடியவர்கள்
  • கர்வம் உடையவர்கள்
  • வீடு குறைந்த விலைக்கு வாங்க கூடியவர்கள்
  • சிறிய விஷயங்களை பெரிது படித்து கூறுபவர்கள்
  • திட்டமிடுவதில் கெட்டிக்காரர்கள்
  • புராண இதிகாசங்களில் ஈடுபாடு உள்ளவர்கள்

ராகு நிற்பதால் ஏற்படும் பலன்கள்

  • திடீர் அதிஷ்டம் உண்டு
  • தாம்பத்தியத்தில் அதிக ஈடுபாடு உண்டு
  • முயற்சிகளால் வெற்றி என்பது எட்டாக்கனியாக இருக்கும்
  • வீட்டில் பொருட்கள் திருடு போகும்
  • விபத்து/கண்டம் உண்டு
  • நீரினால் கண்டம் உண்டு

குரு நிற்பதால் ஏற்படும் பலன்கள்

  • நாணயமானவர் எந்தக் காரியத்தையும் ஆழ்ந்த யோசனையுடன் செய்யக்கூடியவர்கள்
  • தமது காரியங்களை வற்புறுத்தி சொல்லக் கூடியவர்கள்
  • பெருந்தன்மையான மனிதர்கள் தன்னலம் மிக்கவர்கள்
  • உடல் பலம் அற்றதாக இருக்கும்
  • பாசமும் பற்றும் உள்ளவர்கள்
  • பொறுமை இல்லாதவர்கள்
  • சிறிய காரியங்களைக் கூட எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடியவர்கள்

சனி நிற்பதால் ஏற்படும் பலன்கள்

  • ஒன்றுக்கொன்று முரண்பாடான செயல்களை செய்பவர்கள்
  • முன்பின் ஆலோசிக்காமல் எதையும் செய்யக் கூடியவர்கள்
  • வீண் செலவு செய்யக் கூடியவர்கள்
  • உடல் நலம் பாதிக்கப்படும்
  • தனது சக்திக்கு மீறி செய்யக்கூடியவர்கள்
  • நெருப்பு, ஆயுதம் இவற்றால் இவர்களுக்கு ஆபத்து உண்டு
  • கப்பல் மாலுமி வெளிநாட்டு பயணம் இவற்றால் நன்மையுண்டு

புதன் நிற்பதால் ஏற்படும் பலன்கள்

  • தாறுமாறாக நடப்பவர்கள்
  • வீண் செலவு செய்ய மாட்டார்கள்
  • அடிக்கடி ஏமாற்றி கொள்பவர்கள்
  • யாரையும் நம்பிவிடுவார்கள்
  • முன்பின் ஆலோசிக்காமல் திட்டுபவர்கள் அல்லது கோபமாக பேசி விடுவார்கள்
  • மணவாழ்வில் அல்லது சொந்த வாழ்வில் மிகப் பெரிய மர்மம் ஏதாவது இருக்கும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top